சிறந்த வேலைப்பாடு Jeffersonville, Indiana, USA 64-0705 1இப்பொழுது ஜெபத்திற்காக நாம் தலை வணங்குவோம். தேவனுக்கு முன்பாக நமது தலைகளும் இருதயங்களும் வணங்கியிருக்க, தேவன் நினைவு கூருவதற்கென வேண்டுகோள் உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கின்றீர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? நாம் இப்பொழுது ஜெபம் செய்யும்போது, உங்கள் இருதயங்களில் உங்கள் விண்ணப்பங்களை வைத்துக் கொள்ளுங்கள். 2கர்த்தராகிய இயேசுவே, என்றுமே குறைவுபடாத ஜீவ ஊற்றாக நீர் இருக்கின்றீர். ஆண்டவரே, இன்று எங்கள் மூலம் பாய்ந்து, எங்களை எல்லா அவிசுவாசத்தினின்றும் பாவத்தினின்றும் சுத்திகரித்து, உம் முன்னிலையில் இப்பொழுது நிற்க எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும். எங்களுக்குத் தேவையுண்டு என்பதை அறிந்தவர்களாய்... நாங்கள் பாவிகளென்றும், எந்த ஆசீர்வாதத்திற்கும் நாங்கள் தகுதியுள்ளவர்கள் அல்லவென்றும் அறிந்திருக்கிறோம். ஆனால் இவ்வுலகில் வந்து எங்கள் பாவங்களைச் சுமந்த அவரை நினைவுகூரும் போது - அவருடைய இரத்தம் அங்குள்ள போது, நாங்கள் தேவனுடைய முன்னிலையில் இல்லை என்றும், அவரே அங்கிருக்கிறார் என்றும், அவருடைய இரத்தத்தின் வழியாய் எங்கள் சத்தம் அனுப்பப்படுகிறதென்றும், அவருடைய இரத்தமே எங்கள் சார்பாக பேசுகிறதென்றும் நாங்கள் உணருகிறோம். ஓ தேவனே, எங்கள் இருதயங்களை பாவமும் அவிசுவாசமும் நீங்கச் சுத்திகரியும். எங்கள் இருதயத்தின் விருப்பங்களைத் தந்தருள்வீராக! உம்மை சேவிப்பதே எங்கள் உண்மையான விருப்பமாயுள்ளது. ஆண்டவரே. நாங்கள் பரிபூரணப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன், இந்த பலவீனங்கள், துன்பங்கள், உலகத்தின் காரியங்கள் எங்கள் மீது சில சமயங்களில் சுமத்தப்படும்போது... “உங்களுக்கு வரும் சோதனையைக் குறித்து புதுமையென்று எண்ண வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது. (1பேது. 4:13). எங்கள் நன்மைக்காகவும், எங்களைப் பரிபூரணப்படுத்தி அந்த இடத்தில் எங்களைக் கொண்டு சேர்ப்பதற்காகவுமே அவை கிரியை செய்கின்றன. அனுபவம் என்னும் இந்த மகத்தான அனுபவமாகிய வனாந்தரங்களிலே நீதிமான்கள் பரிசுத்தவான்களாக உருவாக்கப்படுகின்றனர். இவ்வனுபவங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது சித்தத்துக்கு விரோதமாய் எதையும் செய்ய நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விரும்பவில்லை. ஆனால், பிதாவே, இதன் மூலம் நாங்கள் உமக்கு அருகாமையில் கொண்டு வரப்பட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். முன்னால் செல்லக் கூடாதபடிக்கு எங்கள் சுமைகள்: கனமாகும் போது, எங்கள் கரங்களையுயர்த்தி, எங்கள் பிதாவை நோக்கி நாங்கள் கதற ஆரம்பிக்கிறோம். ஆண்டவரே, பரலோகத்திலிருந்து அப்பொழுது செவிகொடுப்பீராக! எங்களைச் சுகப்படுத்தும். தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் எங்களை சுகமாக்கும். ஆண்டவரே, இன்று காலை உமது வார்த்தையை ஆசிர்வதித்து தாரும். உம்முடைய வசனமே சாத்தியம். 3இப்பொழுது நாங்கள் கூடாரத்தில் கூடியிருக்கிறோம். சகோ. நெவில், சகோ. காப்ஸ், சகோ. காலின்ஸ், இன்னும் மற்ற ஊழியர்களுக்காகவும், தர்ம கர்த்தாக்களுக்காகவும், மூப்பர்களுக்காகவும், சபையோர்களுக்காகவும், இன்று இங்கு வந்துள்ள அன்னியர்களுக்காகவும் நாங்கள் ஜெபத்தை ஏறெடுக்கிறோம். உம்முடைய பிரசன்னத்தின் நிமித்தமாக, இந்த நாளை நாங்கள் நீண்ட காலம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள அருள் புரியும். ஆண்டவரே, இன்று காலை, மகத்தானவைகளை உம்மிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆண்டவரே, திடீரென்று அறிவிப்பு விடுக்கப்பட்டு, நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். அது ஒரு நோக்கத்திற்காகவே என்று உணருகிறோம். ஆண்டவரே, உமது நோக்கம் நிறைவேறட்டும். எங்களை உம்மிடம் சமர்ப்பித்து, இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 4ஜனங்கள் நிறைந்துள்ள இச்சபைக்கு நான் வந்திருப்பது மிகவும் அருமையாயுள்ளது. இன்று காலையில் நான் யாரையும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில் இங்கு வருவேன் என்று எனக்கே தெரியாது. நாங்கள் பிலதெல்பியாவிலிருந்து இப்பொழுதுதான் திரும்பி வந்தோம். நாம் உடனே அரிசோனாவுக்குச் சென்று, என் நண்பர் கேப்டன் ஜிம் மாஸ்லியின் அடக்க ஆராதனையை நடத்த வேண்டுமென்று எண்ணியிருந்தேன். மரித்துப் போன இவர் மிகவும் தேவபக்தி கொண்ட ஒரு வாலிபன். அண்மையில் அவரை நான் கிறிஸ்துவிடம் வழி நடத்தினேன். அவர்கள் மூன்று சகோதரர்கள். அவர்களில் ஒருவரான இவர் விமான விபத்தில் உடனடியாகக் கொல்லப்பட்டார். அவருடைய பிரேதத்தை அவர்கள் எடுப்பதற்கு முன்பு, அது பத்துமணி நேரமாக தீயில் இருந்ததாம். அவருக்கு இருபத்தெட்டு வயது தான் ஆகின்றது. அவருடைய மனைவிக்கு இருபத்தாறு வயது. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள், - முத்த பிள்ளைக்கு ஏழு வயதாகின்றது. மிகவும் துக்ககரமானது. அவருடைய சடலத்தை அவர்கள் எடுத்த பின்பு, அடுத்த நாளே அவர்கள் அடக்கம் செய்துவிட்டனர். எனவே நான் போகவில்லை. சகோ. மாஸ்லியின் அடக்கத்தின் போது நான் என்ன கூறியிருப்பேனோ, அதை தந்தி மூலமாக அனுப்பிவிட்டேன். இப்படிப்பட்ட சில காரியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் எல்லாம் சரியானபடி நடக்கும்படி அவர் செய்கிறார். 5நாம் தேவனை விசுவாசித்தவர்களாய், தேவன் எல்லாவற்றையும் சரியாகவே செய்வார் என்னும் விசுவாசம் கொண்டவர்களாய், இன்று காலை நாம் தேவனுடைய ஆராதனையில் பங்கு கொண்டிருக்கிறோம். அது என்னவாயிருப்பினும், அது எப்படி கிரியை செய்தாலும், நமது நன்மைக்கு ஏதுவாகவே அது நடக்க வேண்டுமென்று நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் அவ்விதம் வாக்களித்துள்ளார். அது அப்படியே நடக்க வேண்டும். சில நேரங்களில் நம்மால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அது மிகவும் சிக்கலாகி விடுகின்றது. ஆயினும் அது நன்மைக்கு ஏதுவாகவே நடக்குமென்பது உண்மை. ஏனெனில் வேதம் அவ்வாறு உரைக்கின்றது.வேதாகமம் என்பது எழுத்து வடிவில் நமக்குள்ள தேவனாகும். நாம் ஏதாவது ஒன்றின் பேரில் நமது விசுவாசத்தை வைக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்மில் யாராகிலும் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி கண்டு கோடீஸ்வரராக ஆனால்... அதைக் கொண்டு நாம் என்ன செய்யப் போகின்றோம்? எப்படியாகிலும் நம்முடைய வாழ்க்கையின் முடிவுக்கு நாம் வந்துதான் ஆக வேண்டும். அப்பொழுது ஐசுவரியத்தினால் என்ன பயன்? பணம் என்பது மாற்றுப் பண்டம். ஆனால் அதை செலுத்தி, ஜீவனை வாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் தேவன் ஒருவரிடமே ஜீவன் உள்ளது. 6எனவே நாம் நெகடிவ் ரூபத்தில் இவ்வுலகில் இருக்கிறோம் என்று உணருகிறோம். நெகடிவ் ஒன்று உள்ள வரை, பாஸிடிவ் ஒன்று இருக்கத்தான் வேண்டும். 'பாஸிடிவ்' இல்லாமல் 'நெகடிவ்' இருக்கமுடியாது. (பாருங்கள்). ஏனெனில் 'பாஸிடிவ்'வுக்காகவே 'நெகடிவ்' உண்டாக்கப்படுகின்றது. ஒரு பொருளினுடைய புகைப்படத்தின் 'நெகடிவ்' உங்களிடமுள்ளது என்று வைத்துக் கொள்வோம். ஒளியானது புகைப்படக் கருவியின் பூதக் கண்ணாடியில் படுவதற்காக ஒரு பொருள் இருக்க வேண்டியது அவசியமாயுள்ளது. இல்லையேல் 'நெகடிவ்' இருக்க முடியாது. இவ்வுலகில் நமது ஜீவன் 'நெகடிவ்'வாக இருப்பதை நாம் கண்டு, வேறெங்கோ உள்ள ஜீவனின் பிரதிபிம்பமாக அது உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளும்போது, எங்கோ ஒரு பாஸிடிவ் உள்ளது என்றும். அதன் மேல் ஒளிபட்டு, அது இவ்வுலகில் ஒன்றைப் பிரதிபலிக்கின்றது என்பதையும் நாம் கண்டு கொள்கிறோம். நாம் அதன் பிரதிபலித்தல் மாத்திரமே. உண்மையான பொருள் வேறெங்கோ உள்ளது. அப்படி இல்லையென்றால், இவ்வுலகிலேயே நான் மிகவும் அதிகமாக வஞ்சிக்கப்பட்டவன் என்றும், என் வாழ்க்கையை நான் வீணாகக் கழித்தேன் என்றும் அர்த்தமாகிவிடும். ஆனால் அது அங்குள்ளது என்பதை நான் எவ்வித சந்தேகமுமின்றி அறிவேன். பாருங்கள்? அதன் காரணமாகத்தான் நாம் இங்கு கூடி வந்துள்ளோம். 7குறைந்த நேர அவகாச அறிவிப்பு (Moment's notice) கொடுத்த போதிலும், நாடெங்கிலுமிருந்து இங்கு கூடி வந்துள்ள மக்களை நான் காணும்போது, சில நேரங்களில், கூட்டம் இருக்குமோ இருக்காதோ என்று நீங்கள் ஊகித்து வருகின்றீர்கள். அப்படிப்பட்ட கூட்டம் ஒன்றிற்கு நான் வருகை தரும்போது. ஒரு சில நிமிடங்கள் நடக்கவிருக்கும் கூட்டத்திற்காக ஜனங்கள் நூற்றுக் கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து இங்கு வந்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நான் மிகவும் சிறியவன் என்பதை அது உணரச் செய்கின்றது. அன்றொரு நாள் ஒரு பெண்மணி வந்து, “அந்த மனிதன் நடந்த இடத்தை எனக்குக் காட்டுங்கள், நானும் அந்த இடத்தில் நடந்தால் சுகமாகிவிடுவேன்” என்றார்களாம். கிறிஸ்துவின் பிரதிநிதி என்னும் ரீதியில் ஜனங்கள் என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் மிகவும் கவனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு தவறு நேர்ந்தாலும் கூட, அது நம்மை மாத்திரம் அழித்துவிடாமல், நம்மைப் பின்பற்றுகிறவர்களையும் அழித்துவிடும். உங்களைக் கொண்டு சேர்க்க, எனக்கு எந்த ஸ்தாபனமும் தெரியாது. என் விசுவாசம் ஒன்றின் பேரில் மாத்திரமேயுள்ளது. அதுதான் தேவனுடைய வார்த்தை. (என்னை நீங்கள் விசுவாசித்தால், நான் கூறுவதைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் வேதத்தை விசுவாசிக்கிறேன்). மற்றவை யாவும் தோல்வியடைந்து விடும்... அவர் ஜீவனுள்ளவர். அவரே வார்த்தை. 8நீங்கள் இங்கு வரும்போது, உங்களை அதிக நேரம் பிடித்து வைத்துக் கொள்கிறேன். இன்று இங்கு வர வேண்டுமென்று எனக்குத் தோன்றின போது, நான் தேவனிடத்தில் ஜெபம் செய்தேன்... எனக்கு எத்தனையோ பேட்டிகள், அழைப்புகள் உண்டாயிருந்தன. அவர்களில் சிலரை இன்று காலையில் நான் சந்தித்திருக்க வேண்டும். “நல்லது, சகோ. நெவில் சந்தேகத்துக்கிடமின்றி என்னை பிரசங்கிக்க அழைப்பார்” என்று எண்ணினேன். அது வெள்ளிக் கிழமையாயிருந்தது. “சகோ. நெவில் என்னை பிரசங்கிக்கும்படி ஒருவேளை கேட்கக்கூடும் என்று கூறினேன். அவ்வாறு நான் எண்ணியபோது. அப்பொழுது ஜெபித்தேன். தேவன்... இங்கு மிகவும் வெப்பமாயிருந்தது. ஆனால் நல்லவரான தேவன் மழையையனுப்பி மிகுந்த வெப்பத்தைத் தணித்து, ஒரு நல்ல காலையைத் தந்தருளினார். இந்த காலை நேரத்தை நீங்கள் என்றைக்கும் நினைவுகூரும் அளவிற்கு அவருடைய கிருபையும் ஆசீர்வாதங்களும் உங்கள் மேல் இருப்பதாக. 9கடந்த இரவு, வியாதியாயிருந்த என் நண்பர் பில்டாஷ் அவர்களிடம் சென்றிருந்தேன். அவரை இன்று காலையில் இங்கு காணவில்லை! எப்படியோ நான்... ஓ, அவர் இங்கே இருக்கிறார். ஆம், “தொண்ணூற்றொன்று வயதான இவ்வயோதிபர் இப்பொழுதும் வனாந்தரமான இடங்களையும், பனிமூடியுள்ள மலைகளையும், சிறந்த நெடுஞ்சாலைகளையும் கடந்து இக்கூட்டத்திற்கு வருகிறார். அப்படி அவர் செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவன் அவருக்கு நல்லவராகவே இருந்து வந்திருக்கிறார். வேண்டுமானால் - அவர் விரும்பினால் அவர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வேலைக்காரர்கள் அவருக்கு காற்று வீசிக் கொண்டிருக்கலாமே? என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் பில்டாஷாக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் மறுபடியும் பிறந்தார். அப்பொழுது அவருடைய இருதயத்தில் ஏதோ ஒன்று குடி கொண்டது. இங்கு ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க, தேவனுடைய வாயாக (mouth piece) இருக்க நான் அழைக்கப்பட்டிருந்தால், என் நண்பரை நான் வஞ்சிப்பேனா? அதைவிட நான் உயிரையே விட்டுவிடலாம். அப்படியானால், இவ்வேதத்திலிருந்து சத்தியத்தை நான் அப்படியே அவருக்கு எடுத்துரைக்கட்டும். அப்பொழுது அது தேவனுடைய வார்த்தையாக அமைந்திருக்கும். தேவன் கூறுவதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நான் வேதாகமத்திலிருந்து படிக்க விரும்புகிறேன். 10அதற்கு முன்பு, இன்றிரவு இராப்போஜனம் இருக்கும் என்பதைத் தெரிவிக்கிறேன். இங்குள்ளவர்கள் (மற்றவர்கள் வீடு திரும்புவார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் வேலைக்குச் செல்லவேண்டும்). இந்த அசெம்பிளியில் உள்ள உள்ளூர்க்காரர்கள் இன்றிரவு இராப்போஜனம் பரிமாறுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 11ஆப்பிரிக்காவுக்குச் செல்ல முடிவான அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை மிஷனரியாக அவர்கள் உள்ளே விடமாட்டார்களாம். எனவே நான் அங்கு செல்லக் கூடிய ஒரே வழி... நான் கென்யா, உகாண்டா, டாங்கனீகா என்னும் இடங்களுக்குச் செல்வேன். நான் போகக் கூடிய ஒரே வழி... முதலாவதாக ஸ்தாபனங்கள் என்னை உள்ளே அனுமதிக்காது. ஏனெனில் அவர்கள் விசுவாசிப்பதை அவர்கள் சார்பில் நான் பிரசங்கிக்க வேண்டும் என்கின்றனர். ஒரு மாய்மாலக்காரனாக நான் இருக்க விரும்பவில்லை. “இல்லை, ஐயா. கர்த்தர் என் இருதயத்தில் எதைப் போடுகின்றாரோ, அதைதான் பிரசங்கிப்பேன் அவ்வளவு தான்” என்று நான் அவர்களிடம் கூறி விடுவேன். பாருங்கள்? நான் என் பிரசங்கம் செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனரோ, அதனுடன் அது ஒவ்வாது - திரித்துவ ஞானஸ்நானம் போன்றவை. அவர்களுடன் கூட சேர்ந்து வீண் சந்தடி செய்தல் இல்லை! 12ஆனால் ஒரு பெரிய கன்வென்ஷனுக்கு வரும்படி சகோ. போஸ் (Brother Boze) அழைப்பு விடுத்துள்ளார். நாம் விசுவாசிக்கும் போதகங்களின் அதிகாலை வெளிச்சத்துக்குள் அவர் வரும் தருவாயிலிருக்கிறார். எனவே வேட்டைப் பயணத்திற்காகப் போவதாகக் கூறிவிட்டு, நான் உள்ளே நுழைய வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன் காரணமாக அவர்கள் என்னை உள்ளே நுழைய அனுமதித்தால்... அங்குள்ள யாராகிலும் ஒருவரை, என்னை வேட்டைக்குக் கொண்டு செல்லப்போவதாக கூற வைத்தால், நான் அங்கு செல்லும் போது (தூதரகத்திலுள்ள மருத்துவர் என் நண்பர். அவர், சிக்காகோவைச் சேர்ந்தவர்). நான் அங்கு சென்றவுடன் அவர், “சகோ. பிரான்ஹாம் இங்கு வந்திருக்கிறார். நாம் கூட்டம் ஒழுங்கு செய்யலாம்” என்று கூறுவார். நான் அங்கு சென்று பின்பு, தூதரகம் என்னை திருப்பி அனுப்ப முடியாது... அவர்கள் அவ்வாறு என்னை உள்ளே கொண்டு செல்ல முயன்று வருகின்றனர். அது தேவனுடைய சித்தமாயிருக்குமானால், அவ்விதமே நடக்கும். எல்லாம் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது சரிபடவில்லையென்றால் உங்களிடம் தெரியப்படுத்துவேன். நான் விரும்புகிறேன்... 13தேவனுடைய சித்தமாயிருக்குமானால், நான் 'ஏழு எக்காளங்கள்' பேரில் பேச விரும்புகிறேன். அது எட்டு நாள் ஆராதனையாயிருக்கும். இக்கூடாரத்தில் அது நடைபெறாது. அதற்கென ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுக்க நாம் முயல்வோம். இங்கு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த புதிய அரங்கம் என் ஞாபகத்திற்கு வரவேயில்லை. அந்த இடத்தில்தான் நான் முதன் முதலாக இயேசுவைத் தரிசனத்தில் கண்டேன். (அதே இடத்தில் இப்பொழுது அந்த அரங்கம் கட்டப்பட்டு வருகின்றது). அன்றொரு நாள் அதைப் பார்க்க அங்கு சென்றிருந்தேன் (நான் அவரைக் கண்டபோது, அவர் கிழக்கு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் குறித்து நான் கூறியது உங்களுக்கு ஞாபகமிருக்கும்). ஒரு சிறு பையனாக - வாலிபப் போதகராக - என் தகப்பனாருக்காக ஜெபிக்க அங்கு நான் சென்றிருந்தபோது, அங்கு தான் அவரைக் கண்டேன். அவரை நான் பார்த்தபோது, அவர் பக்கவாட்டில் முகத்தை திருப்பியிருந்தார். துடைப்பப் புல் வளர்ந்திருந்த அந்த வயலில், நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தேன். அவரை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அவரோ என் பக்கம் திரும்பவேயில்லை. 'இயேசுவே' என்று அவர் பெயரைச் சொல்லி நான் அழைத்தபோது அவர் திரும்பிப் பார்த்து தம் கரங்களை விரித்தார். அடுத்த நாள் அதிகாலை வரையிலும் அது ஒன்று மாத்திரமே என் நினைவில் இருந்தது. அதிகாலையில் நான் அங்கிருந்து திரும்பி வந்தேன். ஒருக்கால் கர்த்தர் எக்காளங்களைக் குறித்து அவ்விடத்தில் பிரசங்கிக்கும்படி செய்யலாம். அது எங்கேயானாலும், தேவனுடைய சித்தம் நிறைவேறட்டும். 14இப்பொழுது ஏசாயா 53ம் அதிகாரத்திற்கு உங்கள் வேதாகமத்தைத் திருப்புங்கள். இன்று காலையில் கூடி வருவதற்காக நாம் எடுத்துக் கொண்ட இந்த பலவீனமான பிரயாசங்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாரென நம்புகிறோம். இப்பொழுதுதான் நாங்கள் பிலிதெல்பியாவிலிருந்து திரும்பி வந்தோம். அங்கு முழு சுவிசேஷ வர்த்தகரின் கன்வென்ஷனில் நான் கலந்து கொண்டேன். அங்கு கூறப்பட்ட வெவ்வேறு சாட்சிகளைக் கேட்டேன். பின்பு நானும், பில்லி பாலும், ரெபேக்காவும், காலின்ஸின் மகளான பெட்டி காலின்ஸும் (Betty Colins) நெடுஞ்சாலையில் காரில் பிரயாணம் செய்து வந்தோம்... பில்லி நன்றாக உறங்குவான். பெக்கி இன்னும் அதிகமாகத் தூங்குவாள். நானும் பெட்டியும் பேசிக்கொண்டே வந்தோம். அவள் பெக்கியுடன் காரின் பின் பாகத்தில் அமர்ந்திருந்தாள். அப்பொழுது திடீரென்று நெடுஞ்சாலையில் ஒன்று சம்பவித்தது. அப்பொழுது என் சிந்தனையில் ஒன்று தோன்றினது. பெட்டி இங்கிருப்பாளானால் - நான் அவளுடன் பேசுவதை நிறுத்தி விட்டு எழுதத் தொடங்கினேன். அதிலிருந்துதான் இன்று காலைக்குரிய பொருளைப் பெற்றுக்கொண்டேன். 15இப்பொழுது நாம் எழுந்து நிற்போம்.... ஏசாயா 53ம் அதிகாரத்தை நான் படிக்கும் போது, அவருடைய வார்த்தைக்கு மரியாதை தெரிவிக்கும் வண்ணமாக, நாம் எழுந்து நிற்போம். “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? (கவனியுங்கள், அது கேள்வியுடன் ஆரம்பிக்கின்றது). இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப் போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, செளந்தர்யமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார். அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம். அவர் அசட்டைப் பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப் போல் வழி தப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப் பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப் போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கண்ணிலும் நியாயத் தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப்பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்துமா தன்னைக் குற்ற நிவாரண பலியாக ஒப்புக் கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையில் வாய்க்கும். அவர் தமது ஆத்தும் வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார், என் தாசனாகிய நீதியரர் தம்மைப் பற்றும் அறிவினால்அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார். ஏசாயா: 53 16பிதாவாகிய தேவனே, உம்முடைய வார்த்தை தீபமாக இருந்து, ஒவ்வொரு விசுவாசியின் பாதைக்கும் வெளிச்சமாயிருந்து, உம்முடைய பிரசன்னத்துக்குள் நடத்துகின்றது. எங்கள் கைகளில் அது ஒரு விளக்கைப் போன்றிருக்கிறது. ஆண்டவரே, தொடக்கத்திலிருந்து முடிவுவரைக்கும் நாங்கள் காண்பதற்கு அவசியமானவைகளை எங்களுக்கு நீர் தரவில்லை. ஆனால் நாங்கள் விசுவாசத்தில் நடந்து செல்கிறோம். ஆண்டவரே, இரவில் இருள் சூழ்ந்த காட்டின் வழியாக ஒரு மனிதன் நடந்து செல்வது போல் (அங்குதான் நாங்கள் இருக்கிறோம்; அவன் கையில் வைத்திருக்கும் விளக்கு தான் அவன் அடி மேல் அடி எடுத்து செல்வதற்கு உதவுகின்றது. அந்தப் பாதையானது மேல் நோக்கி சென்ற போதிலும், அந்த வெளிச்சத்தின் காரணமாக அவன் நடந்துசெல்ல முடியும், ஆண்டவரே, தேவனுடைய ராஜ்யத்தை நோக்கி நாங்கள் இன்னும் ஒரு அடி முன் எடுத்து வைக்க, வெளிச்சமானது வார்த்தையின் மேல் பிரகாசித்து எங்களை வழி நடத்தட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 17இன்று சபையோரிடம், ''சிறந்த வேலைப்பாடு“ என்னும் பொருளின் பேரில் பேச வேண்டுமென்று உணர்த்தப்படுகின்றேன். வேதத்திலேயே மிகவும் நொறுக்கப்பட்டு கொலையுண்ட காட்சியினைப் பற்றிய வேத வாக்கியங்களை வாசித்தது சற்று விசித்திரமக தோன்றக் கூடும். வேதமானது இங்கே இப்பரிபூரணமான தாசன் துன்புறுத்தப்பட்டு, நொறுக்கப்பட்டு அடிக்கப்பட்டார் என்று கூறுகிறது. இருப்பினும், ”சிறந்த வேலைப்பாடு“ என்று பொருளை அதிலிருந்து தெரிந்து கொள்வது மிகவும் வினோதமாகவேயிருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நிழ்ந்த ஒரு சம்பவத்திற்கு என் சிந்தை இன்று காலை சென்றது. கலிபோர்னியாவிலுள்ள ஃபராஸ்ட் லாண் (Forest Lawn) என்னுமிடத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அது லாஸ் ஏஞ்சலிஸுக்குமேல் பாகத்தில் உள்ளது. நான்கு சதுர இயக்கம் (Four Square Movement) என்பதை நிறுவிய ஏய்மி செம்பில் மகஃபர்ஸன் அம்மையாரின் கல்லறைக்கு நான் முதலில் சென்றேன். பெண் பிரசங்கியைக் குறித்த விவகாரத்தில் எனக்கு கருத்து வேற்றுமை இருந்த போதிலும், இந்த அம்மையார் இந்தக் காலத்தில் உறுதியாய் நின்ற சில காரியங்களுக்காகவும் இவ்வுலகில் அவர்கள் இதற்கென அனுபவித்த துன்பங்களுக்காகவும், என் இருதயத்தில் அவர்கள் மீது மதிப்பும் அபிமானமும் ஏற்படுகின்றது. அவர்களுடைய மகன் ரால்ஃப் மக்பர்ஸன் என் ஆப்த நண்பர். 18போதகர்களாகிய நாங்கள் ஒரு கூட்டமாக அங்கு சென்றிருந்தோம். அங்கு சரீரங்களைத் தகனம் செய்த இடத்திற்கு - சவங்களைப் பெட்டியிலடைத்து சுவற்றின் பக்கமாக வைத்துள்ள இடத்திற்கு செல்வதற்கு எங்களுக்கு போதிய நேரம் இல்லை. அங்கு “கடைசி இராப்போஜனம்” போன்றவைகளை மிகச் சிறந்த முறையில் அமைத்துள்ளனர். சூரிய வெளிச்சத்தின் மூலமாகவே அந்த இடத்திற்கு வெளிச்சம் உண்டாகின்றது. அங்கு ஒரு சன்னல் கதவு (Shutter) இருக்கின்றது. அது ஒளியைத் தருகின்றது... அவர்கள் உள்ளே செல்லும் போது, அது வெளிச்சமடைகின்றது. அவர்கள் பேசத் தொடங்கும்போது, அது இருளடையத் தொடங்கி, சற்று கழிந்து அது முழுவதும் இருளடைகின்றது. பின்பு ஜனங்கள் வெளியேறுகின்றனர். அவர்கள் எல்லோரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்கின்றனர்... 19அந்தக் கண்ணாடியில் வேலைப்பாடு செய்யும் இரகசியத்தை அறிந்திருந்த அந்த ஸ்திரீ - அதில் உண்டாக்கப்பட்டிருந்த படங்கள் - அது அனேக ஆண்டுகளாக அந்தக் குடும்பத்தில் வழி வழியாக வந்த கலையாகும். அது ஒவ்வொரு பிள்ளையின் வழியாக வந்து கடைசியில் இந்த அம்மாள் அந்தக் கலையை அறிந்திருந்தார்கள். அவர்கள் அந்தப் படத்தை அங்கு பொருத்திக் கொண்டிருந்தனர். யூதாஸ் காரியோத்தின் உருவத்தை உண்டாக்குவதற்கென அவர்கள் கண்ணாடியை உருக்கிக் கொண்டிருந்தபோது, அது வெடித்துவிட்டது. மறுபடியுமாக அவர்கள் முயன்றபோது, அது மறுபடியும் வெடித்துவிட்டது. “ஒருக்கால் நமதாண்டவர் அவருடைய சத்துருவின் படத்தை அவருக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை போலும்”, என்று அந்த அம்மாள் நினைத்து, “அது மறுபடியும் வெடித்துவிட்டால், இந்தப் படத்தை நாம் முடிக்காமலேயே விட்டுவிடலாம்” என்று எண்ணினார்களாம். ஆனால் அடுத்த முறை அது சரியாக வந்தது. ஆயினும் அப்படி ஒன்று நிகழ்ந்தது வியக்கத்தக்க ஒரு செயலாகும். 20அந்த ஃபாரஸ்ட் லாண் என்னுமிடத்தில் என் சிந்தையைக் கவர்ந்தது மைக்கல் ஆஞ்சலோவின் மகத்தான சிற்பமாகிய 'மோசேயின் உருவம்'. அது மூல சிற்பமல்ல. அதைப் போன்று வேறொன்று உண்டாக்கப்பட்டதாகும் (Reproduced). அது மிகவும் சிறந்த வேலைப்பாடு. நான் நின்று கொண்டு அந்த சிற்பத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தபோது... அது எனக்கு விருப்பமாயிருந்தது. அதில் ஏதோ ஒன்று உண்டாயிருந்தது. எனக்குக் கலையென்றால் மிகவும் பிரியம். கலையில் தேவன் இருக்கிறார் என்பது எனது நம்பிக்கை. தேவன் இசையில் இருக்கின்றார். தேவன் இயற்கையில் இருக்கின்றார். அவர் எங்கும் இருக்கின்றார். ஆனால் மூலமான ஒன்றுக்கு முரணாயுள்ளது தாறுமாறாக்கப்பட்ட ஒன்றாகும் (Perversion). தேவன் நடனத்திலும் இருக்கிறார். இப்பொழுது இங்கு நடைபெறும் நடனங்களிலல்ல. ஆனால் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் பரிசுத்த ஆவியினால் நிறையப்படும்போது (பாருங்கள்)? அது உண்மையான நடனமாகும். ஆனால் அதிகாலை 2 மணிவரை அந்த சந்தில் நடைபெறும் நடனத்தை நாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே. அது உண்மையான நடனம் தாறுமாறாக்கப்பட்டதாகும். 21மைக்கேல் ஆஞ்சலோ உண்டாக்கிய அந்த சிறந்த வேலைப்பாடான சிற்பம் - அதை உண்டாக்க அவன் அதிக சிரமம் கொண்டான். அவன் சிறந்த ஒரு சிற்பி. அவன் தன் வாழ்நாளின் மிகப் பெரிய பாகத்தை அதற்கென்று செலவிட நேர்ந்தது. அனேக ஆண்டு காலமாக அதைச் செதுக்கும் பணியில் அவன் ஈடுபட்டிருந்தான்... சலவைக் கல் பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு அதைச் செதுக்கிக் கொண்டே வந்தான். சிற்பி மாத்திரமே, தான் என்னச் செய்யப் போகின்றான் என்பதை தன் மனதில் கொண்டிருக்க முடியும் - அவன் மாத்திரமே... நீங்கள் அவனிடம், “அந்தக் கல்லை எதற்காக செதுக்கிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கலாம். வேறு மனிதனுக்கு சிற்பியின் சிந்தையில் என்ன இருக்கின்றது என்பதை அறியாத ஒருவனுக்கு அது அர்த்தமற்ற செயலாகத் தென்படக்கூடும். ஆனால் அந்த சிற்பிக்கோ, அவனுடைய சிந்தையில், தான் என்ன செய்யப் போகின்றான் என்பதைக் குறித்த திட்ட வட்டமான தரிசனம் இருக்கும். அவனுடைய சிந்தையில் உள்ளதை ஒரு உருவமாக வடித்தெடுக்க அவன் முயல்கிறான். அதற்காகவே அவன் கற்பாறையை செதுக்கிக் கொண்டேயிருக்கிறான். 22இதற்கென அவன் முதலிலிருந்தே தொடங்கி, ஒரு அமைப்பை (Pattern) அவன் பின்பற்ற வேண்டிதாயுள்ளது. பாருங்கள்? அந்த அமைப்பின் ஒரு பாகத்தை மாத்திரம் அவன் தெரிந்தெடுத்து, “நான் இப்படிச் செய்யப்போகிறேன். வேண்டாம். அப்படிச் செய்தால் நன்றாயிருக்கும்” என்று கூறமுடியாது. அந்த சிற்பம் எப்படி தோற்றமளிக்க வேண்டும்என்னும் சரியான அமைப்பை அவன் தன் சிந்தையில் கொண்டிருக்க வேண்டும். அதிலிருந்து அவன் சற்றும் கூட விலகமுடியாது. இதைச் செய்வதற்கென அந்த உருவத்தை அவன் தன் மனதிலேயே வரைந்து கொண்டிருத்தல் அவசியம். (ஏனெனில் மோசேயின் உருவப் படம் நம்மிடம் கிடையாது). காண்பதற்கு மோசே எவ்விதம் இருந்தான் என்பதை அவன் தன் மனதிலேயே வரைந்து கொண்டிருக்க வேண்டும். 23ஒரு உண்மையான சிற்பி, ஒரு ஊக்கவுணர்வைக் கொண்டிருப்பான் (Inspired). அவ்வாறே ஒரு உண்மையான கவிஞனும், பாடகனும், இசை அமைப்பாளனும் - அவர்கள் யாராயிருந்தாலும் சரி - ஒரு ஊக்கவுணர்வைப் பெற்றிருத்தல் அவசியம். உண்மையான எந்த ஒன்றும் ஒரு ஊக்கவுணர்வைக் கொண்டே தோன்ற வேண்டும். காண்பதற்கு மோசே எவ்விதம் இருந்திருப்பான் என்பதைக் குறித்த ஊக்கவுணர்வை மைக்கல் ஆஞ்சலோ பெற்றிருந்து, அதை அப்படியே தன் சிந்தையில் பதியச் செய்திருப்பான். பின்பு அவன் சலவைக் கல் பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அதை சிறிது சிறிதாக செதுக்கிக் கொண்டே வந்து. முடிவில் அவன் சிந்தையிலிருந்ததைத் தத்ரூபமாக அந்தக் கல்லில் உருவமாக பொறித்திருப்பான். 24அந்த சிற்பத்தை அவன் பிழையின்றி செய்து, மூலைகள் எல்லாவற்றையும் சரிபடுத்தி, எல்லாவிடங்களையும் சரிவர துடைத்து, கண்கள், தலைமயிர், தாடிமயிர் இவையனைத்தையும் அவன் சிந்தையில் இருந்தது போலவே உருவமாக்கி, அந்த சிலையை நின்று பார்த்து ரசித்திருப்பான். அனேக ஆண்டுகளாக அவன் உழைத்த கடின உழைப்பையும், அவன் செய்யப் போவதைக் குறித்து அவ்வளவு காலமாக அவன் தன் சிந்தையில் எவ்வித மாற்றமுமின்றி கொண்டிருந்த அந்த உருவத்தையும் நான் நினைத்துப் பார்க்கும்போது - சற்று யோசித்துப் பாருங்கள். அனேக ஆண்டு காலமாக அந்த தோற்றத்தை அவன் சிந்தையில் கொண்டிருந்தான். அதை அப்படியே தத்ரூபமாக அவன் கல்லில் செதுக்கினான். மோசேயின் தோற்றம் எவ்விதம் இருந்திருக்கும் என்பதை அவன் முதலில் தன் சிந்தையில் கிரகித்துக் கொள்ள வேண்டும். அதை அனுசரித்து அவன் கல்லைச் செலுக்கிக் கொண்டே வர வேண்டும். அதை அனுசரித்து அவன் கல்லைச் செதுக்கிக் கொண்டே வரவேண்டும்... அந்த சிலையைச் செதுக்கி முடித்தவுடன், அது பிழை எதுவுமின்றி இருப்பதை அவன் கண்டு, அந்தக் காலையில் தன் கையில் சுத்தியலை வைத்துக் கொண்டே, அங்கு நின்று கொண்டு அதை ரசித்தான். அதைக் கண்டபோது, அவனுக்குள்ளே ஓர் நல்லுணர்வு தோன்றினது. ஏனெனில் அவன் தன் சிந்தையில் கொண்டிருந்த உருவம் தத்ரூபமாக சிலையின் வடிவில் அவனுக்கு முன்பாக காட்சியளித்தது. மோசேயின் உருவத்தைக் குறித்து அனேக ஆண்டுகளாக அவன் மனதில் கொண்டிருந்த கருத்து, அனேக மணிக்கணக்காக அவன் உழைத்த உழைப்பு, துயரம், துன்பம், குற்றம் கண்டு பிடிப்போரின் குற்றச்சாட்டுகள் இவையனைத்திலும் அவன் உறுதியாக நின்று, தன் பணியை முடித்தான். 25அது முடிந்தவுடன், தன் கையில் சுத்தியலை வைத்துக் கொண்டு (சிற்பியின் சுத்தியல்) அந்த சிலையை உற்று நோக்கினான். மோசேயின் தோற்றத்தைக் குறித்து அவன் பெற்றிருந்த உள்ளுணர்வு அவனை ஊக்குவித்து அந்த சிலையை முடிக்கச் செய்தது. அந்த தத்ரூபமான சிலையை அவன் கண்ட போது, உணர்ச்சி மேலிட்டவனாய் மெய் மறந்து போய் அவன் சிலையின் முழங்காலை சுத்தியலால் தட்டி, 'பேசு' என்றான். இதன் விளைவாக அந்த மகத்தான சிலையின் வலது முழங்காலில் குறை ஏற்பட்டுவிட்டது - முழங்காலுக்கு ஆறு அங்குலத்திற்கு மேல், நான் என் கையை அதில் போட்டுப் பார்த்தேன். அது அவ்வளவு ஆழமாக இருந்தது. 26ஆண்டுக்கணக்காக தன் நேரம் முழுவதையும் அவன் செலவிட்ட பின்பு, தன் சிந்தையில் உண்டாயிருந்தது தத்ரூபமாக சிலையின் வடிவில் வடிக்கப்பட்டதை அவன் கண்ட போது, அவன் உணர்ச்சி பொங்கினவனாய், அவனுடைய சிறந்த வேலைப்பாடான அந்த சிலை அவனிடம் பேச வேண்டுமெனும் எண்ணங் கொண்டவனாய், அதைக் காலின் குறுக்கே அடித்து, 'பேசு' என்று சத்தமிட்டான். அது அந்த சிலையில் ஒரு பழுதை உண்டாக்கியது, என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலையில் ஏற்பட்ட அந்த குறை தான் அதை சிறந்த வேலைப்பாடாகச் செய்தது. அனேகர் இதைக் குறித்து வித்தியாசமாக எண்ணக்கூடும் - அது அந்த சிலையைக் கெடுத்துவிட்டது என்று. ஆனால் எனக்கோ, அந்தக் குறை, அந்த சிலை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே அதை ஆக்கிவிட்டது. அதை வடிவமைப்பதற்காக அனேக ஆண்டுகளாக மிகக் கவனமாக செய்து வந்த பணி, உழைப்பு, ஊக்கம் இவையனைத்தும் வீண் போகவில்லை. அது தத்ரூபமாக அமைந்துவிட்டது. எனவே தான் அவன் சிலையைப் பார்த்து, “பேசு” என்று உணர்ச்சி மேலிட்டுக் கூவினான். ஏனெனில், அந்த சிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதைப் பற்றிய தரிசனத்தை தன் சிந்தையில் பெற்றிருந்தானோ, அதை அப்படியே தத்ரூபமாக வடித்து சாதனை நிகழ்த்தினான். எனவே தான் உணர்ச்சி ததும்பினவனாய், சிந்தை தடுமாறியவனைப் போல், அசாதாரணமான முறையில், அச்சிலையை அடித்து “பேசு” எனக் கத்தினான். பாருங்கள் அவன் யோசித்துப் பார்த்திருந்தால் அவ்வாறு செய்திருக்கவே மாட்டான். ஆனால் அவன் யோசிக்கவேயில்லை. அவன் சிந்தையில் எப்படி அச்சிலை சித்தரிக்கப்பட்டிருந்ததோ, அப்படியே தத்ரூபமாக தன் கண் முன் கண்டது அவனை உணர்ச்சி ததும்பச் செய்தது. 27அவனுடைய உழைப்பு, களைப்பு, இரவில் கண் விழித்தல், உலகக் காரியத்தினின்று நாட்கணக்காக பிரிந்திருத்தல் அவன் ஒரு 'சான்ட்விச்சை' மாத்திரம் தின்று விட்டு, பனியில் ஈடுபட்டு, “அது அப்படியல்ல, இப்படியிருக்க வேண்டும்” என்று கூறி, அங்குமிங்கும் சரிபடுத்தி... முடிவில் அவன் சிந்தையில் அமைந்திருந்த 'நெகடிவ்'வானது 'பாஸிடிவ்'வாக தத்ரூபமாக சிலையின் வடிவில் காணப்பட்டபோது, அவன் 'பேசு' என்று சத்தமிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது, என்னைப் பொறுத்தமட்டில், அவன் அதை அடித்தது. அவனுடைய பணிக்கு சிறந்த புகழாக அமைந்துள்ளது. ஏனெனில் அவனுடைய வேலைப்பாடு அவனுக்கு உணர்ச்சியையளித்து, அவன் சிந்தை தவறும்படி செய்து, அதை அடித்து, 'பேசு' என்று கூறச் செய்தது. 28நான் சிலையை நோக்கியவாறே அங்கு நின்று கொண்டிருந்தேன். அதைச் செய்வதற்கு அந்த மனிதன் செலவிட்ட அனேக மணி நேரங்களைக் குறித்து நான் சிந்திக்கலானேன். அனேக ஆண்டுகளாக அவன் அப்பணியில் ஈடுபட்டிருந்தான் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவனுடைய சிறந்த வேலைப்பாட்டிற்கு சான்றாக, புகழ்ச்சியாக, அது அமைந்திருந்தது. அவனுடைய வேலைப்பாடு முடிந்தவுடன், அது சிறந்த ஒன்றாக அமைந்தது. 29இவ்வளவு நேரமாக புரட்டிக் கொண்டிருந்த மைக்கல் ஆஞ்சலோவைக் குறித்த புத்தகத்தை நாம் இப்பொழுது முடி வைத்துவிட்டு, நமது சர்வ வல்லமையுள்ள தேவனாகிய மகத்தான சிற்பியைக் குறித்த புத்தகத்தை இப்பொழுது திறந்து பார்ப்போம். உலகம் உண்டாவதற்கு முன்னமே, அதற்கு அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னமே, என்ன செய்ய வேண்டுமென்பதை அவர் தம் சிந்தையில் கொண்டிருந்தார். மனிதனைத் தமது சாயலாக சிருஷ்டிக்க வேண்டுமென்று அவர் எண்ணங் கொண்டார். அவருடைய சிந்தையிலிருந்ததை தத்ரூபமாக ஆக்க வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டார். 30மைக்கல் ஆஞ்சலோவுக்கு அது அவனுடைய சிந்தனையின் தன்மையாக இருந்தது. தேவன் - மகத்தான சிற்பி - மனிதனைத் தம் சாயலாக சிருஷ்டிக்க வேண்டுமென்று விருப்பங் கொண்டார். அந்த குறிக்கோளுடன் அவர் பணிபுரியத் தொடங்கினார். சிலவற்றை அவர் படைத்தார் என்று பார்க்கிறோம். முதலில் மீன்கள், பின்பு பறவைகள். அதன் பிறகு ஊரும் பிராணிகள் போன்றவைகளை பூமியில் தோன்றச் செய்தார். முதலில் அவர் அசைவாடின போது, அவர் சிருஷ்டி கர்த்தராயிருந்தபடியால் - ஏதோ ஒன்றைச் செதுக்கி அதிலிருந்து ஒரு உருவத்தைப் படைக்கும் மனித சிற்பியைப் போன்றவரல்ல அவர். அவர் நித்தியமான காரியங்களை உருவாக்கும் சிற்பியாவார். எனவே, தம் சிந்தையிலுள்ளவைகளை அப்படியே சிருஷ்டித்து அவைகளைத் தோன்றச் செய்யும் வல்லமை படைத்தவர் அவர். அவருடைய தன்மைகள் விரும்பினவைகளை உருவாக்க அவரால் முடியும். 31ஊரும் பிராணிகள் போன்றவைகளை - சிறு மிருகங்களை - இவ்வுலகில் தோன்றச் செய்வதற்காக அவர் கிரியை செய்ய ஆரம்பித்தபோது... அவைகளுக்குப் பின்பு பெரியவைகளை சிருஷ்டிக்க அவர் தொடங்கினார். முடிவில் அவர் சிங்கம், புலி, கரடி போன்ற பெரிய மிருகங்களைப் படைத்தார். அதன் பின்பு குரங்குகள், வாலில்லாக் குரங்குகள் (apes) போன்றவைகளை அவர் சிருஷ்டித்தார். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுவதான பரிணாம வளர்ச்சியல்ல அது (Evolution). முழுவதுமே சிருஷ்டிப்புதான். தேவன் ஒரு மாதிரியை (Pattern) வைத்துக் கொண்டு, அதன்படி கிரியை செய்தார். கடைசியாக, இப்பூமியில் பரிபூரணமான ஒன்று தோன்றினது. அது தான் மனிதன். அந்த மனிதனில் அவருடைய சாயலை அவர் கண்டார். அவனை அவர் கண்டபோது, அவன் தன் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கிறவனாகக் காணப்பட்டான். தேவன் தமது சாயலாக ஒரு மனிதனை உருவாக்கிட விரும்பினாரே, இப்பொழுது அதை சாதிக்க அவருக்கு இயன்றது. 32இதை நான் கூற விரும்புகிறேன். அவர் மனிதனை சிருஷ்டித்த போது, ஏதோ ஒன்று சரியாக அமையாதது போன்றிருந்தது. அவன் தனிமையாக இருந்தான். அது போன்றுதான் தேவனும் தனிமையாக இருந்தார். அவர் நித்தியமான ஒருவர். இப்பொழுது தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதனும் பூமியில் தனிமையாக இருந்தான். எனவே அந்த மனிதனின் இடது பக்கத்தில் அவர் ஒரு துவாரம் செய்து, அதனின்று ஒரு துண்டை அவர் எடுத்து, அவனுக்குக் துணையாயிருக்க மனைவியைப் படைத்தார். அப்பொழுது அவன் தனிமையாயிராமல், அவனுடன் கூட இருக்க ஒரு துணைவியைப் பெற்றுக் கொண்டான். அது அவருடைய மகத்தான கிரியை. 33எந்த ஒரு சிற்பியும் செய்வது போன்று, அவர் ஒரு சிறந்த வேலைப்பாட்டை எடுத்துக் கொண்டார். இப்பொழுது முதலாவதாக, அவர் தம்மைப் பற்றியதான சிறந்த வேலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அது அவரைப் போன்று தனிமையாயிருப்பதை அவர் கண்டு, அதை விலாவில் அடித்து, அதை பிரித்தெடுத்து, ஒரு துணைவியைப் படைத்தார். அதன் பின்பு இவ்விருவரையும் அவர் ஒன்று சேர்த்து, எந்த சிறந்த சிற்பியும் செய்வது போன்று, அவர்களை ஒரு அழகான இடத்தில் வைத்தார். எந்த ஒரு சிற்பியும் தான் செய்த சிறந்த சிற்பத்தைக் கொண்டு போய், ஒரு குறுகிய சந்தில் வைக்கமாட்டான்; அல்லது கட்டிடத்தின் பின்புறத்தில் ஒளித்து வைக்கமாட்டான். நமது ஆண்டவரும், “விளக்கைக் கொளுத்தி ஒருவனும் மரக்காலால் மூடி வைக்க மாட்டான்” (மத் 5:15) என்று கூறினது போல் இது. நாமும் கூட தேவனுடைய சிறந்த சிற்பங்களாக ஆகும்போது, ஏதோ ஒரு குறுகிய சந்தில் ஒளித்து வைக்கப்படுவதில்லை. நாம் வெளிச்சம் கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 34எனவே நாம் பார்க்கிறோம், அவர் அந்த சிறந்த வேலைப்பாட்டை செய்து முடித்தவுடன், அதை பூமியில் வைத்து, மிகவும் அழகான ஸ்தலமாகிய ஏதேன் தோட்டத்தில் அதை நிறுத்தினார். அவருடைய சிறந்த வேலைப்பாட்டை (அவர்களிருவரும் ஒருவர்) அவர் ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அவருடைய வேலைப்பாடு பழுதற்றதாயிருந்தது என்பதைக் காண அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்!... அதன் பின்பு, அவர் இளைப்பாறினார் என்று பார்க்கிறோம். அவர் தமது வேலையில் மிகவும் திருப்தி கொண்டார். 35மைக்கல் ஆஞ்சலோ செதுக்கிய மோசேயின் சிலையை அவனது சிறந்த வேலைப்பாடாக ஆக்கியது. அச்சிலையை அவன் அடித்ததினால் ஏற்பட்ட குறைதான் என்ற எனது கருத்தை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறே, தேவனுடைய சிறந்த வேலைப்பாட்டின் மேல் விழுந்த ஒரு அடியானது, அவருடைய விலாவைப் பிளந்து, மணவாட்டியை வெளியே கொணர்ந்தது. இப்பொழுது அவர்கள், சிறந்த வேலைப்பாட்டினால் தோன்றிய ஒரு குடும்பமாக, ஏதேன் தோட்டத்தில் இருக்க நாம் காண்கிறோம். அது எவ்வளவு அழகாயுள்ளது. அவருக்கு அது மிகுந்த மகிழ்ச்சியுண்டாக்கியது. “நான் இளைப்பாறுவேன்” என்று அவர் கூறிவிட்டு இளைப்பாறச் சென்றுவிட்டார். அவர் தமது சிறந்த வேலைப்பாட்டின் பேரில் மிகுந்த நம்பிக்கை வைத்து இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, அவருடைய சத்துரு அங்கு வந்து இந்த சிறந்த வேலைப்பாட்டினைக் கண்டான். அவன் தந்திரமாக தோட்டத்து சுவர்களின் வழியாக நுழைந்து, இந்த அழகான வேலைப்பாட்டைக் கெடுத்துப் போட்டான். அவன் அதைப் பழுதடையச் செய்ததால், அது விழுந்து போனது. 36நான் கடிகாரத்தைக் கவனிக்க முயல்கிறேன். முப்பது நிமிடங்கள் கழிந்தவுடன் மணி அடிக்கும்படி என் மருமகன் மைக் (Mike) கிடம் கூறியிருந்தேன். அவனோ மணி அடிக்கவில்லை. நான் ஏற்கனவே முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டுவிட்டேன்... இன்னும் சற்று நேரம் தொடருவோம். பாருங்கள்? நிபந்தனைகளை மீற நான் விரும்பவில்லை. இந்த நிபந்தனைகளை நான் தான் அளித்தேன். இப்பொழுது நானே என் நிபந்தனைகளை மீறுகின்றேன். 37இப்பொழுது கவனியுங்கள். வஞ்சகனான சாத்தான் சுவற்றின் வழியாக நுழைந்து அந்த சிறந்த வேலைப்பாட்டை பழுதடையச் செய்துவிட்டான். அதைதான் அவன் செய்தான்... அவன் எப்படி அதை செய்தான்? அதைக் குறித்து விவரமாகக் கூறட்டும். இந்த சிறந்த வேலைப்பாடு தேவனுடைய வார்த்தை என்னும் சுவற்றினால் அடைக்கப்பட்டிருந்தது. அந்த சிறந்த வேலைப்பாடாகிய குடும்பம் இந்த வார்த்தையை அரணாகக் கொண்டிருந்தது. மூல வேலைப்பாட்டை உடைத்து, அதனின்று தோன்றின் அந்த உடைக்கப்பட்ட பாகம், அந்த சுவற்றின் வெளியே சென்று பழுதடைய அது சாத்தானுக்கு ஒரு தருணம் கொடுத்துவிட்டது. இதைக் குறித்த என் கருத்து என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே அதை நான் மறுபடியும் கூறவேண்டிய அவசியமில்லை. அந்த மகத்தான சிற்பி, தாம் உண்டாக்கிய குடும்பம் - அந்த சிறந்த வேலைப்பாடு - விழுந்து போனதைக் கண்டபோது, அது முகங்குப்புற விழுந்து அழிந்துபோக விட்டுவிட அவர் எண்ணங் கொள்ளவில்லை. அதை மறுபடியும் கட்டி எழுப்ப வேண்டுமெனும் எண்ணங் கொண்டவராய், அவர் உடனடியாக பணியில் ஈடுபட்டார். என்றென்றைக்கும் அது அங்கேயே விழுந்து கிடந்து அழிந்து போக வேண்டுமென்று அவர் சித்தம் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் தேவன்: அவர் தோல்வியடைய முடியாது. எனவே உடனடியாக அவர் பணியில் ஈடுபட்டு, மறுபடியுமாக ஒரு மனிதனை தம் சாயலிலே உண்டாக்கத் தொடங்கினார். 38பின்பு ஜலப் பிரளயம் தோன்றி எல்லாவற்றையும் அழித்துவிட்டதாக நாம் பார்க்கிறோம். ஏனெனில் அப்பொழுது செய்யப்பட்டிருந்த உடன்படிக்கைகள் நிபந்தனையோடு இருந்தன. “இதை செய்யாமற் போனால், அல்லது இதைச் செய்தால்...” என்று இருந்தான். மனிதன் அந்த உடன்படிக்கையைக் கைக்கொள்ள முடியவில்லையென்பதை அந்த மகத்தான சிற்பியாகிய தேவன் கண்டார். அவனால் முடியவேயில்லை. அதற்கு வேறு வழியேயில்லை. சில நிமிடங்களுக்கு முன்பாக, பேட்டியொன்றில் ஒரு ஸ்திரீயுடன் அறையில் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் இப்பொழுது இங்கிருக்கிறார்கள். அவர்கள், “சகோ. பிரான்ஹாமே, தவறு என்று நான் அறிந்திருக்கும் அனேக காரியங்கள் என்னிடமுள்ளது” என்றார்கள் (தேவ பயங்கொண்ட ஸ்திரீ). நாம் அவர்களிடம், “சகோதரியே, உங்களை நீங்கள் பார்க்க வேண்டாம் - உங்கள் விருப்பங்கள் ஒன்றும், நீங்கள் புரியும் செயல்கள் வேறொன்றுமாய் அது உள்ளது. நீங்கள் உண்மையில் ஆண்டவரை நேசிப்பீர்களானால், உங்கள் முழு இருதயத்தோடும் அவரைச் சேவிக்க முற்படுங்கள். அப்பொழுது உங்கள் தவறுதல்கள் அனைத்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் மறைக்கப்பட்டுவிடும்” என்றேன்.(பாருங்கள்? பாருங்கள்?). அவர் ஒரு வழியை உண்டு பண்ணினார். 39எனவே, இப்பொழுது தேவன் “நீ செய்தால், நான் செய்வேன்” என்ற தமது நிபந்தனையோடு கூடிய உடன்படிக்கையை விட்டு மனிதனை எடுத்துவிட ஆரம்பித்தார். அதை அவர் ஆபிரகாம் என்ற மனிதனில் செய்ய ஆரம்பித்தார். ஆபிரகாமுக்கு நிபந்தனையற்ற ஒரு உடன்படிக்கையைக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் அவர் தமது சிறந்த வேலைப்பாட்டைத் தொடங்கும் போதெல்லாம், சாத்தான் அதைக் கைப்பற்றுவான். ஏனெனில் அது வார்த்தையாயிருந்தது. ஆனால் அவர் ஆபிரகாமிடம் தொடங்கின போதோ, அவர், “நான் ஏற்கனவே செய்துவிட்டேன்” என்றார். இது நிபந்தனையற்றதாகும் - “நீ செய்தால் நான் செய்வேன் என்றல்ல”, “நான் ஏற்கனவே செய்துவிட்டேன்”. இந்த சிற்பி தம் சிறந்த வேலைப்பாட்டை செய்து முடிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டார். ஆபிரகாமிலிருந்து கோத்திரப் பிதாக்கள் தோன்றினர். அவர்கள் உண்மையாக... இப்பொழுது, தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? விழுந்து போன சிறந்த வேலைப்பாட்டை அவர் மீண்டும் சரிப்படுத்துகிறார். எனவே கோத்திரப் பிதாக்களில் முதலாவதாக நாம் ஆபிரகாமைக் காண்கிறோம். 40கவனியுங்கள், ஒவ்வொரு சிற்பமும் ஒரு அஸ்திபாரத்தின்மேல் வைக்கப்படும். மைக்கல் ஆஞ்சலோ செதுக்கிய மோசேயின் சிலை, மூன்று அல்லது நான்கு படிகள் கொண்ட சலவைக்கல் துண்டுகளின் மேல் வைக்கப்பட்டுள்ளது. எனவே, தேவன் தமது சிறந்த வேலைப்பாடான சிற்பத்தை ஆயத்தம் செய்தபோது, அதை கோத்திரப் பிதாக்கள் என்னும் அஸ்திபாரத்தின் மேல் வைத்தார். அந்தக் கோத்திரப் பிதாக்கள் என்னும் அஸ்திபாரத்தின் மேல் முதலாவதாக ஆபிரகாம், அடுத்ததாக ஈசாக்கு, அடுத்ததாக யாக்கோபு, பின்பு யோசேப்பு - நான்கு மூலைகள். விசுவாசத்திற்கு அஸ்திபாரம் ஆபிரகாம். அதற்கு நான்கு அஸ்திபாரங்கள் இருந்ததாக வைத்துக் கொள்வோம். விசுவாசத்திற்கு அஸ்திபாரமாக ஆபிரகாம் திகழ்ந்தான். அதன் பிறகு அன்புக்கு அஸ்திபாரமாக ஈசாக்கு, யாக்கோபு கிருபைக்கு அஸ்திபாரமாக இருந்தான் (யாக்கோபுக்கு தேவனுடைய கிருபை இருந்தது). அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் யோசேப்பிலோ பரிபூரணம் இருந்தது. அங்கு தான் அவர் தமது சிற்பத்தை வைத்தார் - முதலாம் அஸ்திபாரமல்ல, இரண்டாம் அஸ்திபாரமல்ல, மூன்றாம் அஸ்திபாரமல்ல, ஆனால் நான்காம் அஸ்திபாரத்தின் மேல். 41ஆபிரகாம் கிறிஸ்துவை சித்தரித்தான் என்பது உண்மையே. அவ்வாறே ஈசாக்கும் அன்பு என்பதில் அவரைச் சித்தரித்தான். ஆபிரகாம் விசுவாசத்திலும் ஈசாக்கு அன்பிலும் அவரைச் சித்தரித்தனர். யாக்கோபு கிருபையில் அவரைச் சித்தரித்தான். யாக்கோபு என்பதற்கு 'எத்தன்' என்று பொருள். அவன் எத்தனாகத்தான் இருந்தான். ஆயினும் தேவனுடைய கிருபை அவனுடன் கூட இருந்தது. ஆனால் யோசேப்பிடமோ எவ்வித குறைவும் காணப்படவில்லை. ஒரு சிறு கீரல் மாத்திரம் அவன் மேல் இருந்தது (அஸ்திபாரமும் சிறந்த வேலைப்பாடாக அமைந்திருக்க வேண்டும்.) அவன் தன் தகப்பனான தீர்க்கதரிசியிடம், “நீங்கள் பார்வோனிடம், உங்கள் வேலை மந்தையை வளர்ப்பது (cattle raisers,) என்று சொல்லுங்கள், மேய்ப்பர்கள் என்று சொல்லிவிடாதீர்கள். ஏனெனில் மேய்ப்பர்கள் எகிப்தியருக்கு அருவருப்பாயுள்ளனர் என்றான் (ஆதி. 46:34). ஆனால் அந்த வயோதிப தீர்க்கதரிசி பார்வோனின் முன்னிலையில் வந்த போது, “உமது அடியாராகிய நாங்கள் மந்தை மேய்க்கிறவர்கள்” என்றான் (ஆதி. 47:3) தமிழ் வேதாகமத்தில் மேற்கூறிய இரண்டு வசனங்களிலும் 'மேய்ப்பர்கள்' என்ற அர்த்தத்தில் தான் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). எனவே அப்படிச் சொன்னது அதில் கீறலை உண்டாக்கிவிட்டது. பாருங்கள் அதுதான் அதை இன்னமும் சிறந்த வேலைப்பாடாகச் செய்கின்றது. 42எனவே, விசுவாசம், அன்பு, கிருபை, பரிபூரணம் என்பவைகளின் மூலமாய் - கோத்திரப் பிதாக்களின் மூலமாய் -அஸ்திபாரம் எழுப்பப்பட்டது. தீர்க்கதரிசிகள் இந்த சிறந்த வேலைப்பாடாகிய சிற்பத்தின் சரீரமாக அமைந்துள்ளனர். அவர்களே வார்த்தை (உங்களால் கிரகித்துக் கொள்ள முடிகிறது என்று நினைக்கிறேன்) - தீர்க்கதரிசிகள், நியாயப்பிரமாணமல்ல, தீர்க்கதரிசிகள். ஏனெனில் தீர்க்கதரிசிகள் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயுள்ளனர். அதுவே சரீரமாக அமைந்துள்ளது - கோத்திரப் பிதாக்கள் அல்ல, தீர்க்கதரிசிகள், அவர்கள் தாம் தேவனுடைய வார்த்தை. அவர் மோசேயின் காலத்திலிருந்து தொடங்கி, படிப்படியாக ஒவ்வொரு தீர்க்கதரிசிகளிடம் வந்து - இவ்வாறு சரீரத்தை செதுக்கிக் கொண்டே வந்தார். அவர்களெல்லாரிலும் மேலானவன் யோவான் ஸ்நானகன். வேதம் அப்படித்தான் கூறுகின்றது. “ஸ்தரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” (மத் 11:11) என்று இயேசு கூறினார். ஏனெனில் அவனால் தான் வார்த்தையாகிய இயேசுவை அறிமுகப்படுத்த முடிந்தது. 43முடிவில் மகத்தான தலை வருகின்றது. எல்லாவற்றிற்கும் தலை. சரீரமானது அதைக் குறித்து முன்னுரைத்தது. அஸ்திபாரம் கோத்திரப் பிதாக்களை வைத்து போடப்பட்டது. ஆனால் சரீரமோ தீர்க்கதரிசிகள் என்னும் தேவனுடைய வார்த்தையை வைத்து கட்டப்பட்டது. இப்பொழுது அவர்களுக்கெல்லாம் தலை வருகின்றது. இயேசு காட்சியில் வந்தார். அந்த தலை அந்த சிற்பத்தில் செதுக்கப்பட்டபோது தேவனுடைய கரங்களின் கிரியையின் பரிபூரணத்தை நாம் காண்கிறோம். ஏனெனில் அவரே வார்த்தையின் பரிபூரணமாயிருந்தார். தேவன் மறுபடியுமாக தமது சிறந்த வேலைப்பாடாகிய சிற்பத்தைப் பெற்றுக் கொண் டார். ஏசாயா கூறினது போன்று, இதோ என் தாசன்; ஒரு பரிபூரணமானவர் வரப் போகிறார் என நான் காலங்கள் தோறும் விவரித்து முன்னறிவித்துக் கொண்டே வந்தேனே அந்த எனது சிறந்த வேலைப்பாடு இவர்தான் என்றார். இப்பொழுது அவர் பரிபூரணமாக என் முன்னால் நிற்கிறார்...“ அவர் (இயேசு) தமது சொந்த சாயலில் தேவனைப் பிரதிபலித்துக் காண்பிக்கிறார். (யோவான் 14-ல் அவர், ”என்னைக் காணும்போது, நீங்கள் பிதாவைக் காண்கிறீர்கள்“ என்றார். 44ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அவ்வார்த்தையானது வடித்தெடுக்கப்பட்டு, ஆதியில் வார்த்தையானது எவ்வாறிரந்ததோ அதை அப்படியே பிரதிபலித்தது. அச்சிறந்த வேலைப்பாட்டில், தமது சொந்த சாயலிலே, வார்த்தையாகிய அவர், மீண்டும் தேவனை தமது சொந்த சாயலிலே பிரதிபலித்துக் காண்பித்தார். வார்த்தை தன்மையானது சிறந்த வேலைப்பாடாகிய ஒரு மனித சாயலாகத் தானே பிரதிபலித்துக் கொண்டிருந்தது. எல்லா தீர்க்கதரிசிகளிடமும் குறைகள் இருந்தன். அவர்கள் எல்லாரும் ஒவ்வொரு பாகமாகத் திகழ்ந்தனர். அதனால் கடைசியாக அந்த சிறந்த வேலைப்பாடாகிய சிற்பம் தோன்றுகிறது. அவர் பரிபூரணமானவர். அவரில் எவ்வித தவறும் இல்லை. அவர் அவ்வளவு பரிபூரணமுள்ளவராயிருந்து, அந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் சாயலையே பிரதிபலித்துக் காண்பிக்கிறார். அவருடைய வேலைப்பாடாகிய சிற்பத்தில் அவரது சாயலே பிரதிபலிக்கின்றது. தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே. அதனால் அவருடைய சொந்த ஆவியை அவருக்குள் வைக்கிறார். அப்பொழுது அந்த உருவமும் அதை உண்டாக்கினவரும் ஒன்றாகிவிடுகின்றார்கள். தேவனும் அவருடைய சிற்ப வேலைப்பாட்டினால் தோன்றின அவருடைய சிறந்த வேலைப்பாடும்... மோசேயின் சிற்பம் மைக்கல் ஆஞ்சலோவின் சிற்பத்தினால் செய்யப்பட்டது. அதற்கு உயிரில்லை. ஏனென்றால் அது கல்லில் வடித்தெடுக்கப்பட்டது. ஆனால் இங்கோ அந்த மகத்தான சிற்பி தம் கரங்களின் கிரியையை பரிபூரணப்படுத்தின பின்பு, அதற்குள் அடியெடுத்து வைத்து நுழைந்து கொண்டார். 45மனிதனின் மீட்பர் பரிபூரணப்பட்டவர், தேவ பக்தியுடையவர் (ஆயினும் நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது). கன்னிகையின் மூலம் பிறந்த ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் மிகவும் பரிபூரணப்பட்டு, தாழ்மையுள்ளவராய், தேவனுடைய சாயலில் இருந்தார். அவருடைய ஜீவனை அந்த தீர்க்கதரிசிகளின் வாயிலாக கொண்டு வந்த அந்த மகத்தான எஜமான் (அவர் தீர்க்கதரிசிகள் அனைவரின் நிறைவேறுதலாக இருந்தார்) அவர் அவ்வளவு பரிபூரணமாக இருந்த காரணத்தால், தேவன் அவரைக் கண்டபோது அடித்து, மைக்கல் ஆஞ்சலோ சத்தமிட்டது போல் இவரும், 'பேசு' என்று சத்தமிட்டார். நீங்கள் அப்படியா? என்று கேட்கலாம். மாற்கு 9:7, மறுரூப மலையின் மேல் நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாக மோசேயும், தீர்க்கதரிசிகளுக்குப் பிரதிநிதியாக எலியாவும் நின்று கொண்டிருந்தனர். கோத்திரப் பிதாக்கள் தொடங்கி, பிதாக்கள், நியாயப் பிரமாணம், தீர்க்கதரிசிகள், இவர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க, “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்” என்று ஒரு சத்தம் மேகத்திலிருந்து உண்டாவதை நாம் பார்க்கிறோம். அவர் பேசினால் தான் அவர்கள் செவி கொடுக்க முடியும். அவர் அடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இச் சம்பவம் நிகழ்ந்தது. “இவர் என்னுடைய குமாரன் இவருக்குள் வாசமாயிருக்க நான் பிரியமாயிருக்கிறேன். அவரை நான் உருவாக்கியுள்ளேன். இவரை இந்நிலைக்குக் கொண்டு வர எனக்கு நாலாயிரம் ஆண்டு பிடித்தது. இப்பொழுது அவர் மிகவும் பரிபூரணப்பட்டிருப்பதால், அவர் பேசுவதற்கென் அவரை நான் அடிக்க வேண்டும். அவர் பரிபூரணப்பட்டவர் - அவரே சிறந்த வேலைப்பாட்டினால் உண்டாக்கப்பட்டவர். 46பாருங்கள், பழைய ஏற்பாட்டின் காலங்களிலெல்லாம் அவர் சித்தரிக்கப்பட்டு வந்தார். அவரை அடிக்கப்பட்ட கன்மலையாக நாம் வனாந்தரத்தில் பார்க்கிறோம். “வனாந்தரத்தில் இருந்த கன்மலை நானே. ஆனால் அது ஒரு கற்பாறையாக மாத்திரம் இருந்தது. அப்பொழுது அது பரிபூரணத்திற்கு வரவில்லை. ஆனால் அது ஒரு முன்னடையாளமாக இருந்து, சபை அதனின்று தண்ணீர் மொண்டு கொள்ள வேண்டுமெனும் எண்ணத்துடன், அது சபையைப் பின் தொடர்ந்தது. அவர் யாருக்கு ஜீவனைக் கொடுக்க சித்தம் கொண்டிருக்கிறாரோ, அவர்களுக்கு அதனின்று மொண்டு கொடுத்து, ஜீவனைத் தருகிறார். அவர் வனாந்தரத்திலிருந்த கன்மலை. அவர் இன்னும் மனிதனாக ஆக்கப்படவில்லை. அவர் ஒரு முன்னடையாளமாக மாத்திரமே அங்கு இருந்தார். அவர் அந்தக் கன்மலையின் மேல் நிற்பதை மோசே கண்டான். அவர் கடந்து போகிறதை அவன் கண்டு, “அது ஒரு மனிதனின் பின் பக்கம்” என்றான். அந்த சிறந்த வேலைப்பாடாகிய சிற்பம் பரிபூரணப்படும் போது எவ்வித தோற்றத்தையுடையதாயிருக்கும் என்பதைக் காண்பிக்கவே, அந்த மகத்தான சிற்பி கிறிஸ்துவின் சாயலை மோசேக்குக் காண்பித்தார். அந்த சிற்பத்தின் தோற்றம் எவ்வாறிருக்கும் என்பதைக் குறித்த காட்சியை அவர் மோசேக்குக் காண்பித்தார். வனாந்தரத்தில் அவர் கடந்து சென்ற போது, அது ஒரு மனிதனின் பின் பக்கமாயிருந்தது. 47கவனியுங்கள், ஆஞ்சலோ அந்த சிற்பத்தை அடித்து, 'பேசு' என்று மாத்திரம் சத்தமிட முடிந்தது. ஆனால் மகத்தான் சிற்பியாகிய தேவனின் செயல் எவ்வளவு வித்தியாசமானதாயிருந் தது. அவர் ஒரு மனிதனைத் தமது சாயலாக சிருஷ்டித்தபோது, அது அவ்வளவு பரிபூரணமாக அமைந்து, தம்மையே பிரதிபலித்தது. தேவன் அந்த சாயலாகிய மனிதனின் மூலம் பேசி, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காண்பித்தார். அவருடைய சாயலாக அமைந்திருந்த தீர்க்கதரிசிகளின் மூலம் அவர் பேசி, முடிவில் தலை பாகத்திற்கு வந்தார். தலை பாகத்தை அவர் அடைந்த போது, அது தேவனுடைய முழு சாயலையும் பெற்றுவிட்டது. அவர் தம்மையே அதன் மூலம் காண்பித்தார். அவர் நமக்காக அடிபட்டார். இப்பொழுது அந்த இயேசு கிறிஸ்து, தேவன் நமக்களித்த ஈவாகவும், நித்திய ஜீவனாகவும், சிறந்த வேலைப்பாடாகவும் அமைந்திருக்கிறார். அதை நாம் மறந்து விடமாட்டோம் என்று நம்புகிறேன். 48நாட்கள் இருளடைவதை நாம் காணும்போது, நிழல்கள் விழுவதை நாம் காணும்போது... சூரியன் சில சுற்றுகள் சுற்றுவதற்கு முன்னமே இந்த நாடு போய்விடும் என்று நான் முன்னறிவிக்கிறேன். நேற்று ஜூலை 4ம் தேதி, ஞாபகமிருக்கிறதா? அன்று தான் தாமஸ் ஜெஃபர்ஸன் சுதந்திர பிரகடனத்தில் கையொப்பமிட்டார். அவருடன் கூட அந்தக் குழுவும் இருந்தனர். அப்பொழுது சுதந்திர மணி அடித்தது. நாம் சுதந்திரமுள்ள நாடு என்று பிரகடனம் செய்யப்பட்டது. சரித்திரப் பிரகாரம் நோக்குங் கால், எந்த ஒரு ஜனநாயகமும் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததில்லை. நாம் சுதந்திரம் பெற்றது 1776-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி. நமக்கு இன்னும் பதினொன்று ஆண்டுகள் உள்ளன. அது இவ்வாண்டுகளைக் கழிக்குமா? இல்லை! முடியாது. பதினொன்று ஆண்டுகள். அப்படிச் செய்தால் அது சரித்திரத்திலேயே புதிய சாதனையாயிருக்கும். 49நாம் காலத்தின் நிலையைக் காண்கிறோம். ஜனங்களின் நிலையையும் நாம் காண்கிறோம். அரசியலின் நிலையை நாம் காண்கிறோம். உலகின் நிலையை நாம் காண்கிறோம். அது நீடிக்க முடியாது. டைடானிக் (Titanic) என்னும் கப்பல் மூழ்கினது போல், அதுவும் மூழ்கி கீழே செல்ல வேண்டும். ஒரு ராஜ்யம் விழுந்து போகும் போது, வேறொரு ராஜ்யம் தோன்றுவதற்கு அது இடம் கொடுக்க வேண்டும். இந்த ராஜ்யமும் மற்றுள்ள ராஜ்யங்களும் விழுந்து போய், வரப்போகும் அந்த ராஜ்யத்திற்கு இடம் கொடுக்க வேண்டும். அது என்றென்றும் விழாது. இந்த சிறந்த வேலைப்பாடான், தேவனுடைய பரிபூரண சாயலாகிய அவர் மூலம், என்றென்றைக்கும் அசையாத ராஜ்யத்தை நாம் பெறுவோம். 50தேவன் அவரைக் கண்டபோது, அவ்வளவு உள்ளுணர்வு பெற்றதால் அவருடைய தோற்றத்தை, உருவத்தைக் கண்டபோது. அவர் அவ்வளவு உள்ளுணர்வு பெற்றார். ஏனெனில் அவர் மீட்பர் எனும் சிறந்த வேலைப்பாடாகத் திகழ்ந்தார் - மீட்பராகிய இயேசு. எனவே தேவன் தம்மையே அடித்துக் கொள்வதற்காக, அவர் தாமே தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தேவனும் கிறிஸ்துவும் ஒன்றாகி, கிறிஸ்து என்னும் அந்த உருவத்தில் அவரும் அடிபட்டு, தழும்பைப் பெற்றார்... அதனால் தான் ஏசாயா, “நாமோ அவர் தேவனால் அடிப்பட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்” (ஏசா. 53:4.5) என்று கூறினான். 51தேவன் - மனிதன் என்பவரின் பரிபூரண சாயல். தேவன் வேற்றுருவம் கொள்ளுதல் - இயற்கைக்கு மேம்பட்ட தமது நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாற நோக்கங் கொண்டார். அந்த அவரது தொலைநோக்குப் பார்வையானது அச்சாயலுக்குள்ளாக பிரதிபலித்துக் காண்பிக்கப்பட்டது. இயற்கைக்கு மேம்பட்டவர் மரணத்தை ருசி பார்க்க வேண்டுமென்பதற்காக, அந்த சிற்பம் - தேவனுடைய பரிபூரணமான சிறந்த வேலைப்பாடு - அடிக்கப்பட்டது. அவர் அதை மோசேயில் செய்ய முடியவில்லை. அவர் மற்ற தீர்க்கதரிசிகளில் அதை செய்ய முடியவில்லை. ஏசாயா வாளால் துண்டுதுண்டாக அறுப்புண்டான்... அவர் அதை கல்லெறிந்து கொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளிலும் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் அத்தகைய உணர்ச்சி அவருக்கு அப்பொழுதெல்லாம் எழவில்லை. அவர்களெல்லாம் அவருடைய ஒரு பாகமாக மாத்திரமே இருந்தனர். ஆனால் இந்த பரிபூரணமாக சிறந்த வேலைப்பாட்டில், அவர் தேவத்துவத்தின் பரிபூரணமாக, சரீரப் பிரகாரமாக வாசம் செய்து கொண்டிருந்தார். அவர் மோசேயில் பிரதிபலிக்க இயலவில்லை. தம்முடைய முழுமையையும் இந்த நபரில் பரிபூரணமாக - வெளிப்படுத்தி, மானிடவர்க்கம் முழுவதற்கும் அவர் மரணத்தை ருசி பார்த்தார். அந்த பரிபூரணமான சிறந்த வேலைப்பாட்டை தேவன் கண்டபோது, அவர் அவ்வளவு ஊக்கம் கொண்டவரானார். எனவே அவர் எல்லா காலங்களுக்கும் மீட்பரின் ஸ்தானத்தை வகித்து, தமக்கு முன்பிருந்தவர்களுக்காகவும் இப்பொழுதுள்ளவர்களுக்காகவும் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். எல்லா வாக்குத்தத்தங்களும் அவரில் நிறைவேறின. அவர் பரிபூரணத்துக்கெல்லாம் பரிபூரணமானவர். எல்லா முன்னடையாளங்களும் அவரில் நிறைவேறின. ரூத், போவாஸ் போன்றவர்களில் அவர் மீட்பின் உறவின் முறையானாக முன்னடையாளமாக இருந்தார்; சீனாய் மலையில் நியாயப் பிரமாணத்தை அளித்தவர்; வனாந்தரத்தில் நமது தீர்க்கதரிசியாக இருந்தவர். அவர் மலையிலிருந்து வந்து, வனாந்தரத்திலிருந்து வந்து - அவர் நித்தியத்திலிருந்து வந்து மனிதனாக - பரிபூரண சொரூபியாக - ஆனார். 52தேவன் காலாகாலங்களில் கோத்திரப் பிதாக்களை செதுக்கிக் கொண்டே வந்து, தமது மேடையை உண்டாக்கி, அந்த அஸ்திபாரத்தின் மேல் அவர் தமது வார்த்தையை (தீர்க்கதரிசிகளை) கட்டத் தொடங்கினார். முடிவில் அவர் பரிபூரண தீர்க்கதரிசிக்கு வந்தார். பரிபூரண அஸ்திபாரம் அவரே. தேவன் தம் மனதில் கொண்டிருந்த பரிபூரண சிந்தை அவரே . அந்த சிற்பம் பேச வேண்டுமானால் (அவரே வார்த்தை) வார்த்தை பேச வேண்டுமானால் அவர் அந்த உருவத்துக்குள் நுழைந்து கொள்ள வேண்டும். அந்த சிற்பம் பேச வேண்டுமானால் அது அடிக்கப்பட வேண்டும். அவர் அதற்குள் நுழைந்து கொள்கிறார். பரிபூரணமான அந்த மீட்பர் பேசவேண்டுமானால்... பழைய ஏற்பாட்டில் காணப்படும் எல்லா முன்னடையாளங்களும் அவரில் நிறைவேறின. நான் அன்று கூறினது போல், பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசுகிறிஸ்து. ஆம்!. 53என் வயதுள்ள மனிதரும், ஸ்திரீகளும், அக்காலத்திலிருந்து சீனர்களின் சலவைச் சாலைகளை நிறையக் கண்டிருப்பீர்கள். சீனர்கள் முதலில் இங்கு சலவைச் சாலைகளைத் தொடங்கின போது, அவர்கள் மேற்குக் கடற்கரையிலிருந்து புறப்பட்டு கிழக்கு பாகத்திற்கு வந்தனர். கிழக்கு நாட்டிலிருந்து அவர்கள் இங்கு வந்து குடியேறினர். அவர்களுக்கு நமது மொழியும் நமது பழக்க வழக்கங்களும் தெரியாமலிருந்தது. ஆனால் அவர்கள் துணிகள் வெளுப்பதில் சிறந்தவர்கள், உங்கள் சலவைத் துணிகளைப் பெற்றுக் கொள்வதற்கென, அவர்களால் சீட்டு எழுதிக் கொடுக்க முடியவில்லை. ஆனால் அந்த சீனனோ ஒரு கட்டு அட்டைகளை எடுத்துக் கொள்வான். அவைகளில் ஒன்றுமே எழுதியிருக்காது. எனவே சலவைக்காக துணிகளைக் கொடுக்க நீங்கள் வரும்போது, இந்த அட்டைகளில் ஒன்றை அவன் எடுத்து, அதை ஒரு பிரத்தியேக முறையில் கிழித்து, ஒரு துண்டை உங்களுக்குக் கொடுத்துவிட்டு, மற்ற துண்டை அவன் வைத்துக் கொள்வான். இப்பொழுது கடை பிடிக்கும் முறையைவிட அது சிறந்த முறையாகும். ஏனெனில் உங்களுக்குச் சொந்தமான துணிகளைப் பெற்றுக் கொள்ள நீங்கள் வரும்போது, இவ்விரு துண்டுகளும் ஒன்றோடொன்று பொருந்த வேண்டும். அதை உங்களால் பாவனை செய்ய முடியாது. எழுதப்பட்ட சீட்டு உங்களுக்கு ஒருக்கால் கொடுக்கப்பட்டிருந்தால், அதனுடைய வேறொரு பிரதியை (Copy) உங்களால் எடுக்க முடியும். ஆனால் அவன் கிழத்த விதத்தை உங்களால் பாவனை செய்ய முடி யாது. ஏனெனில் கிழிக்கப்பட்ட ஒரு துண்டு மற்ற துண்டுடன் சரியாகப் பொருந்த வேண்டும். எனவே சலவை செய்யப்பட்ட உங்கள் அழுக்கு துணிகளை அந்த கிழிக்கப்பட்ட துண்டின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அவன் வைத்திருக்கும் துண்டுடன் நீங்கள் கொண்டு வரும் அவ்வட்டையுடன் சரியாகப் பொருந்துகிறது. 54தேவன், தீர்க்கதரிசிகளின் மூலமாகவும் நியாயப் பிரமாணத்தின் மூலமாகவும், நாம் பாவிகளென்று குற்றஞ் சாட்டினார். நியாயப் பிரமாணத்திற்கு கிருபை என்பது கிடையாது. நீங்கள் ஒரு பாவி என்று மாத்திரம் அது கூறும். ஆனால் இயேசு தோன்றினபோது, தேவன் வாக்குத்தத்தம் செய்த எல்லாவற்றின் நிறைவேறுதலுமாக அவர் இருந்தார். அவர் அந்த வாக்குத்தத்தத்தின் பரிபூரண உருவமாக அமைந்திருந்தார். எனவே பழைய ஏற்பாட்டில் அளிக்கப்பட்டிருந்த எல்லா வாக்குத்தத்தங்களும் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின. அது மோசேயில் நிறைவேறவில்லை; அது எந்த தீர்க்கதரிசிகளிலும் நிறைவேறவில்லை. ஆனால் அந்த சிறந்த வேலைப்பாடாகிய சிற்பத்தில் அது நிறைவேறியது. என்னவெல்லாம் நிறைவேறும் என்று கூறப்பட்டிருந்ததோ, அவைகளுடன் அந்த சிற்பம் பொருந்தியது. அதுபோன்றே சபையும், தேவன் வாக்களித்துள்ள எல்லாவற்றுடனும் பொருந்த வேண்டும். அவர் அடிபட்டபோது அதனின்று பிரிந்த துண்டாக அது அமைந்திருக்க வேண்டும். மூலமானது வார்த்தையாக அமைந்திருக்குமானால், அதனின்று அடித்து எடுக்கப்பட்டவைகளும் வார்த்தையாக அமைந்திருந்து, அதன் விலாவில் பொருந்த வேண்டும். 55எனவே சீனாக்காரன்... நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்... நியாயப் பிரமாணம் உங்களை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தி, நீங்கள் அழுக்கானவர்கள் என்றும், குற்றவாளிகளென்றும் கூறி உங்களைச் சிறைப்படுத்தலாம். ஆனால் அவர் வந்த போதோ, கிழிக்கப்பட்ட துண்டுடன் பொருந்தும் துண்டாக அவர் வந்து, முழு அட்டையாகி, உங்களை வெளியே கொணர்ந்தார் - ஏதேன் தோட்டத்தில் தேவன் அளித்திருந்த மீட்பைக் குறித்த வாக்குத்தத்தம் “உன் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும். அவரது குதிங்கால் அதன் தலையை நசுக்கும்”. 56இப்பொழுது, தேவன் செதுக்கி முடித்த இந்த பரிபூரண வேலைப்பாட்டை நாம் காண்கிறோம். அது எவ்வாறிருக்கும் என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டதோ, அவ்வாறே அவர் இருந்தார். அவர் வாக்குத்தத்தங்களின் அனைத்துமாகவும், தீர்க்கதரிசனங்களின் அனைத்துமாகவும், தேவன் வாக்களித்திருந்த எல்லாமுமாக இருந்தார். “உன் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும் என்று தேவன் வாக்களித்திருந்தார். அவர் நியாயப் பிரமாணத்தைக் கொண்டு அதை நசுக்க முடியவில்லை. தீர்க்கதரிசிகளைக் கொண்டு அவர் அதை நசுக்க முடியவில்லை. ஆனால் ஸ்திரீயின் வித்து சிறந்த வேலைப்பாடாகிய கிறிஸ்துவாக ஆனபோது, அவர் அதை நிறைவேற்றினார். தானியேல் கண்ட மலையிலிருந்து பெயர்ந்த கல் அவரே. அவர் ஒருவர் தான் அடித்து நொறுக்க முடியும். அவர் ஒருவர்தான் சர்ப்பத்தின் தலையை நசுக்க முடியும். அவருடைய வாழ்க்கை மோசேயின் வாழ்க்கையுடன் சரியாகப் பொருந்தியது. அது தாவீதின் வாழ்க்கையுடன் பொருந்தினது. கிழிக்கப்பட்ட துண்டுடன் அவர் சரியாகப் பொருந்தும் துண்டுதானா என்பதை நாம் பார்ப்போம். 57தாவீதைக் கவனியுங்கள். அவன் தன் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக இருக்கிறான். ஒரு நாள் அவன். அவனுடைய சொந்த மகனே அவனுக்கு விரோதமாய் எழும்பி கலகம் செய்தான். அவன் இஸ்ரவேலின் இராணுவங்களை இரண்டாகப் பிரித்துவிட்டான். தாவீதுதன் சொந்த ஜனங்களால் சிங்காசனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டான். அவன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அவனை வெறுத்த ஒரு மனிதன் அங்கிருந்தான். தாவீது நடந்து சென்று கொண்டிருந்தபோது. அவனை வெறுத்த ஒரு மனிதன் அங்கிருந்தான். தாவீது நடந்து சென்று கொண்டிருந்தபோது, இந்த மனிதன் அவன் முகத்தில் துப்பினான். காப்பாளன் பட்டயத்தை உருவி, “அந்த நாயின் தலையை வாங்கிப் போடட்டும். என் ராஜாவின் மேல் அவன் துப்பினானே” என்றான். தாவீதோ, “அவனை விட்டுவிடு. அவன் தூஷிக்க வேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார். என்றான் (2) சாமு 16:5-12). உங்களால் காண முடியவில்லையா? ” அவர் துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார். மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்“ (ஏசா 53:3,7) பாருங்கள்? தாவீது அவ்விதம் கூறினான். தான் என்ன கூறுகிறோம் என்று தாவீது அப்பொழுது உணர்ந்திருக்க மாட்டான். ஆனால் ஐந்நூறு, அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்பு தாவீதின் குமாரன் அதே தெருக்களின் வழியாகச் சென்று துப்பப்பட்டார். ஆனால் தாவீது பயந்தோடி, நாடு கடத்தப்பட்டு, மீண்டும் திரும்பி வந்தபோது, அந்த மனிதன் சமாதானத்திற்காகவும் இரக்கத்திற்காகவும் மன்றாடினான். அவ்வாறே அவர் திரும்பி வரும்போது, அவரைக் குத்தியவர்கள் அவரை நோக்கிப் பார்ப்பார்கள். 58அதன் பின்பு யோசேப்பில் நாம் காண்கிறோம். யோசேப்பு விசித்திரமாகப் பிறந்த ஒரு பையன். அவன் தான் எல்லாரிலும் இளையவன். சிறந்த வேலைப்பாடாகிய சிற்பம் கட்டப்படுவதற்கென உண்டாக்கப்பட்ட அஸ்திபாரத்தின் மேல் பாகம் அவன். அது விசுவாசத்தில் தொடங்கி, அன்பு, கிருபை வழியாய் வந்து, பரிபூரணத்தையடைகின்றது. அவ்வாறே அது சிற்பத்தின் காலில் தொடங்கி, கிறிஸ்துவின் பரிபூரணமடைகின்றது. அவர் எவ்வாறு யோசேப்பில் முன்னடையாளமாக இருந்தார் என்பதைக் கவனியுங்கள். யோசேப்பு தான் அஸ்திபாரத்தின் மேல் பாகம். அவர்கள் அனைவரிலும் அவன் பரிபூரணமானவன். சட்டப்படி விவாகம் செய்த ஸ்திரிக்கு - யாக்கோபின் மனைவிக்கு - யோசேப்பு பிறந்தான். அவன் பிறந்தபோது, அவனுடைய பிதா அவனை சிநேகித்தார். ஆனால் அவனுடைய சகோதரரோ அவனை முகாந்தரமின்றிப் பகைத்தனர். அவனை ஏன் அவர்கள் பகைத்தனர்? ஏனெனில் அவன் வார்த்தையாயிருந்தான். அஸ்திபாரமே என்னவென்று பார்த்தீர்களா? அஸ்திபாரத்தின் மேல் பாகம் எப்படி வருகிறது என்று பாருங்கள். சரீரத்தின் தலையும் எப்படி அமைகிறது என்று கவனியுங்கள். மணவாட்டியின் தலை வருவதைக் கவனியுங்கள். பார்த்தீர்களா? யோசேப்பு வார்த்தையாயிருந்தான். அவன் தரிசனம் காண்கிறவனாயிருந்தபடியால், அவனுடைய சகோதரர்கள் அவனைப் பகைத்தனர். அவன் காரியங்களை முன்னறிந்து, அவர்களிடம் முன்னுரைத்தான். அவன் கூறினவை நிறைவேறின. அது எவ்வளவு காலதாமதமானாலும், அவை அப்படியே நிறைவேறின. அவன் ஆவிக்குரியவனாயிருந்தபடியால், அவனுடைய சகோதரர்கள் அவனைப் புறம்பாக்கிப் போட்டனர். உண்மையில் அவர்கள் அவனை நேசித்திருக்க வேண்டும். ஆனால் அவன் தீர்க்கதரிசியாயும் ஆவிக்குரியவனாயுமிருந்தபடியால், அவர்கள் அவனைப் பகைத்தனர். 59கவனியுங்கள், அவன் ஏறக்குறைய முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டு, குழியிலே போடப்பட்டு, மரித்துப் போனான் என்று கருதப்பட்டான். அவனோ குழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டான். சிறையில் அவன் சோதனை நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, அங்கு பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் இருந்தனர். பானபாத்திரக்காரன் இரட்சிக்கப்பட்டான், ஆனால் சுயம்பாகியோ கைவிடப்பட்டான் என்பதை நாம் அறிவோம். அவ்வாறே கிறிஸ்துவின் சிறையாகிய சிலுவையிலும் ஒருவன் இரட்சிக்கப்பட்டான். மற்றவன் கைவிடப்பட்டான் - இரு கள்ளர்கள், இரு குற்றவாளிகள். அவன் சிறையிலிருந்து எடுக்கப்பட்டு பார்வோனின் வலது பாரிசத்தை அடைகிறான். யாரும் பார்வோனிடம் பேச முடியாது. யோசேப்பின் மூலமாகவே பேச வேண்டும். யோசேப்பு பார்வோனின் சிங்காசனத்தை விட்டு வெளியே வந்தபோது, எகிப்து முழுவதிலும் எக்காளம் தொனித்து, “எல்லோரும் முழங்காற்படியுங்கள், யோசேப்பு வருகிறார்” என்று அறிவித்தது!. 60இயேசுவுக்கும் அவ்வாறே நிகழும். அவரும் எவ்வளவாய் பிதாவினால் சிநேகிக்கப்பட்டு, தமது ஸ்தாபன சகோதரர்களால் முகாந்தரமின்றி பகைக்கப்பட்டார்! அவர் சரியாக முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டார். அவர் ஒரேயடியாக மரித்துவிட்டாரென்று எண்ணி அவரைக் குழியில் (கல்லறையில் தள்ளினார்கள்). சிலுவையில் ஒருவன் கைவிடப்பட்டான். மற்றவன் இரட்சிக்கப்பட்டான். அவர் சிலுவையிலிருந்து உயர்த்தப்பட்டு இராஜ கெம்பீரத்தில், அவரில் பிரதிபலித்த அந்த மகத்தான ஆவியாயிருக்கிற தேவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். இயேசுவின் மூலமேயன்றி எவரும் தேவனிடத்தில் பேச முடியாது. யோசித்துப் பாருங்கள்! அவர் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு வரும்போது, எக்காளம் தொனிக்கும். அப்பொழுது முழங்கால் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும்... யோசேப்பு செழிப்பின் குமாரனாயிருந்தான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவன் செய்த அனைத்தும் செழித்தோங்கின். அது சிறையானாலும், வேறெங்கானாலும், எல்லாம் சிறப்பாக அமைந்தன. அதுபோன்று, தேவனும், தமது பிள்ளைகளுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்குமென்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் அல்லவா? அது வியாதியாயிருந்தாலும் சரி, சிறையாயிருந்தாலும், மரணம், துயரம் எதுவாயிருப்பினும், அவரில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கும். அவர் அங்ஙனம் வாக்களித்துள்ளதால், அது அவ்வாறே நிறைவேற வேண்டும். அவருக்குள் அது மறைபொருளாக நமக்குப் பேசப்பட்டுள்ளது. அவரே தேவனின் பரிபூரணசாயலாயிருந்தார். அவர் மறுபடியுமாக வரும்போது நாம் பார்க்கிறோம்... 61ஞாபகமிருக்கட்டும், வெளிப்பாட்டின் மூலம் பெற்ற தன் மகத்தான தீர்க்கதரிசனத்தின் மூலமாய், யோசேப்பு உலகை அழிவினின்று காத்தான். யோசேப்பு இல்லையென்றால் உலகம்அழிந்து போயிருக்கும். அது போன்று, இயேசு இல்லையென்றால், இவ்வுலகம் அழிந்து போயிருக்கும், “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). தேவன் ஜீவனைப் பாதுகாக்கிறார். 62இப்படி நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தாவீதுக்கு பொருத்தமானவராய் இருந்தார். அவர் மோசேக்குப் - பொருத்தமானவராய் இருந்தார். அவர் எலியாவுக்குப் பொருத்தமானவராய் இருந்தார். அவர் எலிசாவுக்கு பொருத்தமானவராக இருந்தார். அவர் யோசேப்புக்கு பொருத்தமானவராய் இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் பழைய ஏற்பாட்டில் அவரைச் சித்தரிக்கிறவர்களாகத் திகழ்ந்து, அவரைக் குறித்து முன்னறிவித்து, அவரில் பிழையின்றிப் பொருந்தினார்கள். அது என்ன? அது வரப் போகிற பரிபூரணமான மீட்பரை முன்னறிவித்து, சலவைச் சாலையில் நமது அழுக்குத் துணிகளைக் கொடுத்து விட்டு, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை அறிவிக்கின்றது. அது ஆட்டுகுட்டியானவருடைய இரத்தத்தினால் கழுவப்படுகின்றது. நமக்குச் சொந்தமானவைகளை நாம் உரிமை கோரி பெற்றுக் கொள்ளலாம். அவர் எதற்கெல்லாம் மரித்தாரோ, அவை அனைத்தையும் நாம் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அவர் சித்தரிக்கப்பட்ட பரிபூரண வார்த்தையாயிருந்தார். 63அவரை இவ்விதம் அடிக்க அந்த மகத்தான சிற்பி சித்தம் கொண்டார். ஏசாயாவில் அவரைக் குறித்து இவ்விதம் பார்க்கிறோம்; “அவரை எண்ணாமற்போனோம். அவரை விட்டு நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம். அவரைப் பார்க்கும் போது, விரும்பத்தக்க ரூபம் (ஆங்கிலத்தில் beauty - அழகு என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) அவருக்கு இல்லாதிருந்தது (எல்லோரும் அவரைக் குறித்துப் பேசி), அவரை ஏளனம் செய்தனர். இந்தக் காலத்திலும் நான் அவரைக் குறித்துப் பேசும்போது, எல்லோரும் ஏளனம் செய்கின்றனர், பாருங்கள்? அவர் சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டார். ஆயினும் அவர்... தேவன் ஏன் இவ்விதம் செய்தார்? 'நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.” இவ்விதம் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். தேவன் மீண்டும் தமது சிறந்த வேலைப்பாடான சிற்பத்தை உருவாக்குதல். 64ஆதியிலே அவர் ஆதாமின் விலாவிலே அடித்தபோது, அதிலிருந்து ஏதோ ஒன்றை அவர் வெளியே எடுத்தார் என்பதை மறந்துவிட வேண்டாம். கிறிஸ்துவின் விலாவும் ஒரு நோக்கத்துடனே குத்தப்பட்டது. அவரினின்று மணவாட்டியை - அவரது குடும்பத்தில் ஒருத்தியை - அவருக்காக எடுக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் அவ்விதம் செய்யப்பட்டது. எனவே அவருடைய சிறந்த வேலைப்பாடு பிழையற்றதாக முடிந்த பின்பு அதை அடித்து, அவரினின்று - வேறொரு துண்டு அல்ல, வேறொரு சிருஷ்டியல்ல, அதே சிருஷ்டியிலிருந்து - அவர் எடுக்கவேண்டியதாயிருந்தது. என் சகோதரனே, இதைக் குறித்து மோசமாக எண்ண வேண்டாம். ஒரு நிமிடம் சிந்தனை செய்து பார். மணவாட்டியை அவருக்கென்று பெற்றுக்கொள்ள அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒன்றை எடுத்திருப்பாரானால்... அவர் வேறொன்றை அங்கு சிருஷ்டிக்கவில்லை. அவர் மூல சிருஷ்டியிலிருந்து ஒரு பாகத்தை எடுத்துக் கொண்டார். அவர் வார்த்தையாயிருந்தால் அவருடைய மணவாட்டி என்னவாயிருக்க வேண்டும்? அவளும் மூல வார்த்தையாக அமைந்திருந்து, வார்த்தையில் உள்ள ஜீவிக்கும் தேவனைக் கொண்டிருக்க வேண்டும். 65தென்ஆப்பிரிக்காவிலுள்ள கிம்பர்லி என்னுமிடத்தில் அவர்கள் பூமியிலிருந்து வைரத்தைத் தோண்டியெடுப்பதைக் கண்டேன். அவைகள் அங்கு வைக்கப்பட்டிருந்தான்... அந்த சுரங்கத்தின் கண்காணிப்பாளராக பணிபுரிபவர், நமது கூட்டங்களில் ஜெபவரிசையை ஒழுங்காக அனுப்புகிறவர்களில் ஒருவராக இருந்தார். பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள வைரங்கள் குவியலாக இருப்பதை நான் கண்டேன். ஆனால் வெளிச்சத்தில் அவை ஜொலிக்கவேயில்லை. “ஏன் இவை ஜொலிக்கவில்லை? என்று சுரங்க கண்காணிப்பாளரிடம் கேட்டேன். அவர், “ஐயா, அவை இன்னும் பட்டை தீட்டப்படவில்லை, அவை பட்டை தீட்டப்படும் போது வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும்” என்று விடையளித்தார். அந்த சிறந்த வேலைப்பாடான சிற்பம் வெட்டப்பட வேண்டும். கவனியுங்கள். எதற்காக வெட்டப்பட வேண்டும்? வெட்டப்பட்டு எடுக்கப்பட்ட துண்டு உபயோகமற்றதா? இல்லை, இல்லை. அந்த துண்டைக் கொண்டு இசைத்தட்டு ஊசி செய்கின்றனர். அந்த ஊசியை, உலகம் அதுவரை கேட்டிராத இசையைக் கொண்ட இசைத்தட்டின் மேல் வைக்கும்போது, அது இசையை வெளியே கொணர்கிறது - தேவனுடைய வார்த்தையின் உண்மையான விளக்கத்தை அது அளிக்கிறது. 66அவருடைய வாழ்க்கை, பழைய ஏற்பாட்டின் ஜனங்களின் வாழ்க்கையுடன் பொருந்தியது. தேவனோ அவரை அடிக்க - சித்தங்கொண்டார். அவர் ஏன் அவரை அடித்தார்? ஆதாமை அடித்த அதே நோக்கத்திற்காகவே. இப்பொழுது அவர் தேவனால் அடிபட்டு நொறுக்கப்பட்டதை நாம் காண்கிறோம். பாவிகளுக்காக அடிக்கப்பட்ட பரிபூரண ஆட்டுக்குட்டியானவர் - சிறந்த வேலைப்பாடான பரிபூரண சிற்பம். 67இப்பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவன் மறுபடியுமாக சிறந்த வேலைப்பாடான ஒரு சிற்பத்தை அவருக்கென உண்டாக்கிக்கொண்டு வருகிறார். தமக்கென்று மனைவியைப் பெற்றுக்கொள்ள அவர் அவரை அடித்து, அவரிலிருந்து ஒரு துண்டை (ஒரு பாகத்தை) - ஒரு விலா எலும்பை - எடுத்துக் கொண்டார். கல்வாரியில் அவர் அந்த சிறந்த வேலைப்பாடான சிற்பத்தை அடித்து, அதிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கொண்டாரே, அது புதிய ஏற்பாடாகும். அவ்வளவுதான். அவர் பழைய ஏற்பாட்டை நிறைவேற்றினார். இப்பொழுது புதிய ஏற்பாடு - நிறைவேற்றப்பட வேண்டிய வேறொரு துண்டு. பாருங்கள், பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கணவனும் மனைவியும் போன்றவை. புதிய ஏற்பாடு என்னவாயிருக்கும் என்பதை பழைய ஏற்பாடு முன் கூட்டியே காண்பித்தது. பழைய ஏற்பாட்டை நிறைவேற்ற சிறந்த வேலைப்பாடான சிற்பமாகிய இயேசு தோன்றினார். இப்பொழுது அவருடைய மணவாட்டி புதிய ஏற்பாட்டிலுள்ள எல்லாவற்றையும் நிறைவேற்றுவாள். சிறந்த வேலைப்பாடான வேறொரு சிற்பம் இப்பொழுது வடிக்கப்பட்டு வருகின்றது. 68சிறந்த வேலைப்பாடான ஒரு சிற்பத்தை செய்ய அவருக்கு நாலாயிரம் ஆண்டுகள் சென்றன. இப்பொழுது அவர், இரண்டாயிரம் ஆண்டு காலமாக கிறிஸ்துவின் மணவாட்டி என்னும் சிறந்த வேலைப்பாடான வேறொரு சிற்பத்தை செய்து கொண்டு வருகிறார். இதைச் செய்யும்போது, அவர் தமது என்றென்றும் மாறாத முறையைக் கடைபிடித்து, வார்த்தையாகிய முதலாம் சிறந்த சிற்பத்தை அவர் எவ்விதம் உண்டாக்கினாரோ, அதே விதமாக இந்த சிற்பத்தையும் உண்டாக்குகிறார். அவருடைய சிறந்த சிற்பங்களைச் செய்ய அவர் ஒரே ஒரு முறையையே கடைப்பிடிக்கிறார். ஏனெனில் அது பரிபூரண வார்த்தையாக அமைந்தால் தான், அது பரிபூரணமான சிறந்த சிற்பமாக அமையமுடியும். அதில் அழுக்கு, குப்பை போன்றவை இருந்தால், அது உடைந்துவிடும். வானமும் பூமியும் ஒழிந்து போம், ஆனால் அவருடைய வார்த்தையோ ஒருபோதும் உடைந்து போகாது. வைரத்தை வெட்டும்போது, ஒரு சிறந்த ஆயுதத்தை உபயோகிக்க வேண்டும். எந்த ஒரு இரும்புத் துண்டையும் எடுத்து அதை வெட்ட முடியாது. அரைக்கும் கருவிகள் மண்ணை அரைத்து, வைரத்தை வெளிக் கொணர்வதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது வைரத்தை உடைப்பதில்லை. அந்த வைரம் ஜொலிப்பதற்காக வெட்டப்பட வேண்டும். 69அவர் தமது என்றென்றும் மாறாத முறையைக் கடைப்பிடித்து, அதையே செய்து கொண்டு வருகிறார். மல்கியா 3-ல், “நான் கர்த்தர், நான் மாறாதவர்” (மல். 3:6) என்று கூறியிருக்கக் காண்கிறோம். அவர் தமது முறையை ஒருபோதும் மாற்றவே முடியாது. அவர் ஆபிரகாமில் தொடங்கின விதமாக... முதலாம் சிறந்த சிற்பம் (ஆதாம்) விழுந்த பின்பு, வேறொரு சிறந்த சிற்பத்தை உண்டாக்க, அவர்ஆபிரகாமில் தொடங்கி அஸ்திபாரத்தைப் போட்டார். பெந்தேகோஸ்தே நாளன்று அவர் வேறொரு சிறந்த சிற்பத்தை உண்டாக்கத் தொடங்கினார். வார்த்தை என்ற மூலவித்து, அது முதலாம் சபையில் தொடங்கினது. அது என்ன? வார்த்தை வித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, வெளிபடுத்தப்பட்ட வார்த்தை, யோவேல். “அதற்குப் பின்பு நான் (கடைசி நாட்களில்) மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்: அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்” (யோவேல் 2:28) என்றுரைத்தான். கடைசி நாட்களில் - கடைசி இரண்டாயிரம் ஆண்டு காலத்தில் - அவர் என்ன செய்யப் போகிறாரென்று. 70கவனியுங்கள், அது மூலமாக (original) தொடங்கினது. “விதைக்கிறவன் விதைக்கும் விதை தேவனுடைய வார்த்தை” என்று இயேசு கூறினார். அவரே விதைக்கிறவர். விதையானது தேவனுடைய வார்த்தை. மேலும் கவனியுங்கள். தனித்திருக்கும் எந்த விதையும் பலன் கொடுப்பதில்லை, அது தன்னை உற்பத்தி செய்து கொள்ள வேண்டுமானால், அது நிலத்தில் விழவேண்டும். பரிபூரண சபை என்னும் இந்த விதை, ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் ஸ்தாபனமானது போது, நிலத்தில் விழுந்தது. சரித்திரக்காரரே, இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகின்றவர்களே, ஓப்பிட் டுப் பார்த்துவிட்டு நான் கூறுவது சரியா இல்லையா என்பதை அறிந்து கொள்ளுங்கள். ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் சபையானது மூல வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளையும் பிரமாணங்களையும் ஏற்றுக் கொண்டபோது, அது மரித்தது. அது என்ன? அந்த முதலாம் சபையின் மூலம் தேவன், தாம் தேவனென்பதைக் காண்பித்தார். அவருக்கு பரிபூரணப்பட்ட சபை ஒன்றிருந்தது. ஆனால் சபையும் மற்ற வித்துக்களைப் போல் நிலத்தில் விழுந்து சாகவேண்டும். அது நிலத்தில் விழுந்து செத்து, அழுகியது. 71சில நாட்களுக்கு முன்பு, நான் ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. யாரோ ஒருவர், 'மெளனமான தேவன்' என்னும் தலைப்புக் கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார். நீங்களும் அதைப் படித்திருப்பீர்கள். எனக்கு ஞாபகமில்லை - பிரம்பாக் (Brumback) என்று நினைக்கிறேன் - அதை எழுதினது யாரென்று நிச்சயமாகத் தெரியவில்லை... என்னால் நினைவிற்கு கொண்டு வர முடியவில்லை - அது என் படிக்கும் அறையில் உள்ளது - மெளனமான தேவன் “இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்திருந்த இருளின் காலங்களின் போது தேவன் மெளனமாக அமர்ந்து கொண்டு, தம் கரத்தையும் கூட அசைக்காமல், விசுவாசமுள்ள இரத்த சாட்சிகள் சிங்கங்களின் கெபிகளுக்கு அனுப்பப்பட்டதையும், ரோமானியரால் சுட்டெரிக்கப்பட்டதையும் எல்லா விதமான கொலைகளையும் கண்ணோக்கினவராய், பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களது நீண்ட கூந்தலுக்கு தார் (Tar) வைத்து தீயினால் எரிக்கப்பட்டதையும் பார்த்ததும் கூட அவர் செயலற்று இருந்தார் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. குட்டையான தலைமுடி முதன் முதலாக ரோமாபுரியில் தொடங்கினது என்பதை நினைவில் கொள்ளுங்கள், கிறிஸ்தவ பெண்களுக்கு நீண்ட கூந்தல் உண்டாயிருந்தது, அவர்கள் அதை தாரில் தோய்த்து, அதற்கு தீயிட்டுக் கொளுத்தினர். அவர்களை நிர்வாணமாக்கி சிங்கங்களுக்கு ஆகாரமாகக் கொடுத்தனர். இந்த எழுத்தாளன், 'தேவன் எங்கே?' என்று சொல்லிக் கொண்டே போகின்றார். ஓ, சில நேரங்களில் மனிதர்களின் குருட்டுத்தனத்தை நான் காணும் போது! ஒரு விதை சாக வேண்டுமென்று உனக்குத் தெரியாதா? அவர்களை விடுவிக்க அவர் முயலவேயில்லை. அவர்கள் வெற்றியுடன் இறங்கிச் சென்றனர். அவர்கள் இரத்தம் பீறிட்டவராய் மரித்து, தங்கள் ஜீவனைத் தியாகம் செய்தனர். ஏன்? அது ஒரு விதையாயிருந்தது. அது நிலத்தில் விழவேண்டும். ”கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகவேண்டும்“ என்று யோவான் 12-உரைக்கின்றது. நிலத்தில் விழுவது மாத்திரமல்ல, அது அழுகவும் வேண்டும். அப்பொழுதும் அதில் ஜீவன் இருந்தது என்பதை ஸ்தாபனங்கள் சற்றேனும் அறிந்து கொள்ளவில்லை. 72நிசாயா ஆலோசனை சங்கத்தில் பதினைந்து நாட்களாக நடைபெற்ற; இரத்தம் சிந்தப்பட்டு, அரசியல் பிரகாரமாக நேர்ந்த அந்த விவாதத்தில், சீமான்கள் தோன்றி செல்வாக்குள்ளவர்களை சபையில் நுழைக்கத் தொடங்கினார்... வனாந்தரத்தில் தோன்றி மரக்கறிகளைத் தின்ற, மிருகத்தின் தோல்களைப் போர்த்தியிருந்த உண்மையான தீர்க்கதரிசிகளை அவர்கள் புறம்பாக்கினர். ஏன்? விதையானது நிலத்தில் விழுந்து சாக வேண்டும். இருண்ட காலங்களில் அது இருண்ட புழுதியின் கீழ் செத்தது. அத்துடன் அது தொலைந்துவிட்டது என்று அவர்கள் எண்ணினர். உங்களுக்குத் தெரியுமா? யோவான் 12:24-ல் இயேசு, “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்” என்று கூறியிருக்கிறார். முதலாம் சபையானது அந்த மணவாட்டியை பிரதியுற்பத்தி செய்யப் போகிற வித்தாயிருந்து, தோற்றமளித்த தேவ வார்த்தையாயிருந்தது. ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் விழுந்தது. 73கவனியுங்கள், இதை கேட்கப் போகும் பல தேசங்களிலும் உள்ள சபையே, ஸ்தாபனங்கள் தாம் அந்த புழுதி. அங்கு தான் தேவனுடைய வார்த்தை சிலுவையிலறையப்பட்டு, அவர்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த அந்த இருளின் காலங்களில், தேவனுடைய வார்த்தையின் வல்லமையும், அற்புதங்களும், அடையாளங்களும் உலகிற்கு மறைக்கப்பட்டிருந்தது. கத்தோலிக்க மார்க்கம் மாத்திரமே அரசாண்டு வந்தது. சரித்திரம் படித்த நாமனைவருமே அதையறிவோம். கத்தோலிக்க மார்க்கம் மாத்திரமே அரசாண்டு வந்தது. ஆனால் முளைக்க வைக்கப்பட்ட எந்த ஒரு விதையையும் நீங்கள் மறைக்க முடியாது. அது வெளியே தோன்றித் தான் ஆக வேண்டும். ஏன்? மகத்தான சிற்பி பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் அதை மறுபடியும் கட்டியெழுப்ப வேண்டும். ஆகவே அவர் - வார்த்தையாகிய விதை பூமிக்கடியில் சென்றது. 74தேவனுடைய வார்த்தையை எழுதி வைத்துவிட்டுப் போன பரி. பவுல், பேதுரு, யாக்கோபு, யோவான் போன்றவர்களை நாம் காணும்போது, அவர்கள் எழுதின அந்த வார்த்தை உயிரடைந்து ஜீவித்தது. அது முதிர்வடையத் தொடங்கின போது, யோவான் தனது நிருபங்களை எழுத ஆரம்பித்தான். கொதிக்கும் எண்ணெயில் அவன் இருபத்து நான்கு மணி நேரம் போடப்பட்டபின்பு, பத்மூ தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். ஆனால் வார்த்தையோ முளைத்தெழும்ப வேண்டும். அது எழுதப்பட வேண்டும். அவனை எண்ணெயில் கொதிக்க வைத்தபோது, அவனுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியை அவர்கள் எடுத்துப் போட முடியவில்லை. எனவே அவன் மீண்டும் எழுதுகின்றான். அவனுடைய பணி அப்பொழுது முடிவு பெறவில்லை. அவன் இயற்கை மரணம் எய்தினான். யோவானின் சீஷனாகிய பாலிகார்ப் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைக் கொண்டு சென்றார். பாலிகார்ப்பிலிருந்து ஐரேனியஸ் தோன்றினார். ஐரேனியஸ் என்னும் அந்த மகத்தான தேவனுடைய மனிதன், நாம் விசுவாசிக்கும் அந்த சுவிசேஷத்தையே விசுவாசித்து “தேவனுடைய வார்த்தையே சரி என்று பிரசங்கித்தார். சபையோ அதை நெருக்கி, வெளியே தள்ள முனைந்தது. 75முடிவில் அது ரோமாபுரியிலுள்ள நிசாயாவுக்கு வந்தது. அங்கே அது நிலத்தில் விழுந்து (பரி. மார்டினுக்குப்) பிறகு கொலை செய்யப்பட்டது. நாம் விசுவாசிப்பதையே பரி. மார்டினும் விசுவாசித்தார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இயேசுவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம் போன்றவைகளில் அவர் உறுதியாய் நின்றார். நாம் தற்பொழுது கடைபிடிப்பவை அனைத்திலும் அவர் உறுதியாய் நின்றார். ஏனெனில் அவர் ஒரு தீர்க்கதரிசி. தேவனுடைய வார்த்தை முழுவதையுமே அவர் விசுவாசித்தார். முடிவில் அவர்கள் சிலுவையிலறையப்பட்டு, தரையில் போட்டு நசுக்கப்பட்டு, அந்த விதையின் வெளிப்புறம் அழுகிப் போகுமட்டும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அங்கேயே கிடந்தனர். பழைய சரீரங்கள் அழுகிப்போயின். (நான் சான் ஆஞ்சலோவில் சவ அறைகளில் (Catacombs) அவர்களுடைய உடைக்கப்பட்ட எலும்புக் கூடுகளைக் கண்டிருக்கிறேன்). அவர்களுடைய எலும்புகள் உலரும் மட்டும் அவர்கள் அங்கேயே அழுகிப் போயினர். ஆனால் ஜீவனோ அப்பொழுதும் அதில் இருந்து கொண்டே இருந்தது. 76நிசாயா ஆலோசனை மாநாட்டில் நிலத்தில் விழுந்த கோதுமை மணி மார்ட்டின் லூத்தரில் முளைக்கத் தொடங்கினது. நிலத்தில் விழுந்த எந்த ஒரு கோதுமை மணியும் அப்படித்தான் முளைத்தெழும்பும். விதைகள் அழுகிப் போனவுடனே, ஜீவன் மேலே வருகின்றது. அது மார்டின் லூத்தரில் முளைத்தெழும்பினது. முதலாவதாக அவர் என்ன செய்தார்? கத்தோலிக்க மார்க்க ஸ்தாபனத்தை அவர் புறக்கணித்து, அது தவறென்று கூறி அதை எதிர்த்து, “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்ற கூறினார். அது என்ன? பலம் குன்றின ஜீவன் ஓரிரண்டு தளிர்களைத் தோன்றச் செய்வதாம், அவர்கள் தாம் லூத்தரன்கள். நிச்சயமாக நிலத்தில் விழுந்த கோதுமை மணியைப் போல் அது காணப்படவில்லை. ஆனால் ஜீவனானது புறப்பட்டு மேலே வந்து கொண்டிருக்கின்றது. அதன் பின்பு அது தண்டிற்குள் சென்றது. பின்பு என்ன நேர்ந்தது? ஜான் வெஸ்லியின் காலத்தில், பரிசுத்தமாக்கப்படுதல் என்பதை அவர் கொண்டு வந்த போது, அவர் என்ன செய்தார்? அவர் வார்த்தையில் நிலை நின்றார். அப்பொழுது லூத்தரன்கள் தங்களுக்கென ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டிருந்தனர். எனவே ஏதோ ஒன்று சம்பவிக்க அது சமயமாயிருந்தது. சிறந்த வேலைப்பாடான சிற்பம் படிப்படியாகக் கட்டப்பட்டுக் கொண்டே வருகின்றது. வெஸ்லி என்ன செய்தார். அவர் ஆங்கிலிகன் சபையை எதிர்த்து, சீர்திருத்தக் காலத்தில் அவர் பட்டுக் குஞ்சமாக (மகரந்தமாக) தோன்றினர். அது என்ன? விதை உயிர் பெற்று வளரத் தொடங்கினது. 77தண்டும், பட்டுக் குஞ்சமும் காண்பதற்கு விதையைப் போல் இல்லை. நாடுகள் பூராவுமுள்ள பெந்தேகோஸ்தே சகோதரரே, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இதுவே நான் பிரசங்கிக்கும் கடைசி செய்தியாக இருந்தால், இது என் சிறந்த பிரசங்கமாகும். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து மறுபடியும் கோதுமை மணியாகத் தோன்றுவதை நீங்கள் கவனிக்கிறீர்களா? இயற்கையை கவனியுங்கள். இயற்கை சரியாக தேவனாகும். தேவன் இயற்கையில் கிரியை செய்து கொண்டு வருகிறார். பெந்தேகோஸ்தே எழுப்புதல் தொடங்கின போது. அது தான் கோதுமை மணி மறுபடியும் தோன்றுதல் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அது ஒருக்காலும் இல்லை. இப்பொழுது கவனியுங்கள்! கோதுமை மணியைப் போலவே வேறொன்று தோன்றுகிறது. கடைசி நாட்களில் இவ்விரு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருப்பதால், அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று இயேசு மத்தேயு 24:24ல் கூறியுள்ளதைக் கவனியுங்கள். 78தண்டு காண்பதற்கு கோதுமை மணியைப் போல் இல்லை. அது போன்றே பட்டுக் குஞ்சமும் காண்பதற்கு கோதுமை மணியைப் போல் இல்லை. இப்பொழுது கவனியுங்கள், லூத்தரின் காலத்திலல்ல, இந்தக் கடைசி நாட்களில். முதலாவதாக (கோதுமை சாகுபடி செய்யும் விவசாயிகள் இதோ இங்கே அமர்ந்திருக்கின்றனர்) கோதுமை விதையிலிருந்து முதலில் தோன்றுவதை நீங்கள் கோதுமை மணியென்றே நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் அது என்ன? அது உமியாகும். கோதுமை மணியை இறுகப் பற்றிக் கொள்வதற்கென அது வெளிப்புறத்தில் உண்டாகும் ஒன்றாகும். அது உமியாக ஆகி விடுகின்றது. பட்டுக் குஞ்சமும் தண்டும் எவ்வாறு கோதுமை மணியாக இருக்க இருக்க முடியாதோ, அது போன்றே உமியும் கோதுமை மணியல்ல. அவையனைத்தும் இயேசு யோவான் 12ல் கூறியுள்ள கோதுமை மணியின் ஜீவனை சுமப்பவை மாத்திரமே. (பாருங்கள்?). 79கோதுமை மணியானது வெஸ்லியின் காலத்தில் பட்டுக் குஞ்சத்தை தோற்றுவித்த பின்பு, உமியைத் தோன்றச் செய்கின்றது. இவையனைத்திலும் உமியே பிரதானமாக முதலில் பூமிக்குள் சென்ற கோதுமை மணியைப் போல் காணப்படுகின்றது. ஆனால் நிச்சயமாக அது கோதுமை மணி அல்ல. பின்பு, பட்டுக் குஞ்சமாகி மகரந்தம் தோன்றுகிறது. அப்பொழுதும் அது கோதுமை மணி அல்ல. அதன் பின்பு உமி தோன்றுகிறது. அது கோதுமை மணியின் உருவத்தில் அமைந்துள்ளது. காண்பதற்கு அது சரியாக கோதுமை மணியைப் போலவேயுள்ளது. ஆயினும் அது இன்னமும் கோதுமை மணியல்ல. அது அப்படியே கோதுமை மணியின் வடிவில் அமைந்துள்ளது. கோதுமை மணி தோன்றும் கட்டங்களில் ஒன்றில் பெந்தேகோஸ்தேயினர் தோன்றினர். ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றுகிறது. வேறொன்று அதிலிருந்து தோன்றுகிறது. ஆனால் அவர்களெல்லாரும் ஜீவனை சுமக்கிறவர்கள் (Carriers) மாத்திரமே. அவர்கள் ஸ்தாபனங்களுக்குச் சென்றுவிடுகின்றனர். பெந்தேகோஸ்தேயினரும் அதை தான் செய்தனர். அவர்களும் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டனர். தோற்றத்தில் கோதுமை மணியைப் போலவே காணப்பட்ட பெந்தேகோஸ்தேயினரும் என்ன செய்தனர்? வெளிப்படுத்தல் 17-ல் கூறியுள்ளபடி அவர்களும் அவர்களுடைய சகோதரி ஸ்தாபனங்களில் ஒன்றாக ஆகிவிட்டனர். அது தான் உண்மையாக நடந்தது - இயேசுவும் அதைதான் கூறினார். 80இப்பொழுது கவனியுங்கள். சுவிசேஷமானது லூத்தர், வெஸ்லி இவர்களின் வழியாய் பெந்தேகோஸ்தேயின்ரை அடைந்து, கடைசி நாட்களில், கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் - தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஓ, பெந்தேகோஸ்தே சகோதரரே, இதை உங்களால் காண முடியவில்லையா? கோதுமை மணி தோன்ற வேண்டிய காலத்தில், உமி கோதுமை மணியைப் போலவே காணப்படும், ஆனால் அது உமி. அது ஸ்தாபனமாகிவிட்டது. லூத்தரின் காலத்திற்குப் பிறகு அவரைச் சார்ந்தவர்கள் என்ன செய்தனரோ, அதையே தான் இவர்களும் செய்தனர். இச்சபைகளைக் குறித்து வெளிப்படுத்தல் 17-ல் கூறியுள்ளது நிறைவேறினது. அந்த மூல கோதுமை மணி நிசாயாவில் விழுந்தது. அது தான் முதலாம் ஸ்தாபனம். கவனியுங்கள், தண்டு, பட்டுக் குஞ்சம் இவைகளின் வழியாக வந்த ஜீவன் விதையில் முடிவடைகின்றது. மூல கோதுமை மணியிலிருந்து வெளிவந்த ஜீவன் வெவ்வேறு கட்டங்களின் வழியாக வந்து - மூன்று வெவ்வேறு கட்டங்கள் - மீண்டும் அதன் மூல நிலையையடைகின்றது. அல்லேலூயா! ஓ என்னே இதை நான் காணும்படி தேவன் செய்ததற்காக, உலகிலுள்ள அனைவரிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாயிருக்கிறேன். தேவனுடைய வார்த்தையும் இயற்கையும் பிழையின்றி எவ்வாறு இணைந்து பணி புரிகிறதென்பதைக் கவனித்துப் பாருங்கள். 81உயிர்த்தெழுதலை நாம் இயற்கையின் மூலம் நிரூபிப்பது போன்றது இது. எழுதல்; சூரியன் அஸ்தமித்து மீண்டும் உதயமாகிறது. இலைகள் மரத்திலிருந்து உதிர்கின்றன. அதன் சத்து வேர்களுக்குச் சென்று மீண்டும் மேலேழும்புகிறது. அப்பொழுது இலைகள் மரத்தில் தோன்றுகின்றன. மரத்தின் சத்திலுள்ள கால்ஷியம், பொட்டாஷ் இவைகளை உறிஞ்சி மீண்டும் இலைகள் தோன்றுகின்றன. பாருங்கள்? இயற்கை அனைத்துமே தேவனுடைய வார்த்தையுடன் ஒருங்கே கிரியை செய்கின்றது. சபையின் காலங்களுக்கும் அது பிழையின்றி பொருந்துகின்றது. அதனால்தான் பரிசுத்த ஆவியானவரும் கீழே இறங்கி வந்து, அவர் காண்பிக்க நினைத்த விதமாகவே, அதை பிழையின்றி வரைந்து காண்பித்தார். அது உண்மை. 82இங்கு கவனியுங்கள். உமியிலிருந்த ஜீவன் - தண்டிலிருந்த, பட்டுக்குஞ்சத்திலிருந்த, உமியிலிருந்த ஜீவன் அனைத்துமே விதையில் ஒன்று சேருகின்றது. தண்டிலிருந்த ஜீவன் - ஒன்று போய் மற்றொன்றை உண்டாக்குகிறது. 'நீதிமானாக்கப்படுதல் என்பது பரிசுத்தமாக்கப்படுதல் என்பதற்கு வழிகொடுத்தது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மீண்டும் வார்த்தையாகிய வித்து என்ற நிலையை பிரத்தியட்சமாக்கி விடுவதற்காக பரிசுத்தாவியானவர் தாமே பரிபூரணத்தில் இறங்கி வருவதற்காக வழிவிட்டது. ஆனால் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது மரித்து போயிற்று. லூத்தரிலிருந்து ஜீவன் கடந்து சென்று வெஸ்லியை தோன்றச் செய்தது. வெஸ்லியிலிருந்து அது பெந்தேகோஸ்தேயை அடைந்தது. பெந்தேகோஸ்தேயிலிருந்து அது கடந்து சென்று மூல வித்தை தோன்றச் செய்தது. பெந்தேகோஸ்தே வெஸ்லியிலிருந்து தோன்றினது. அவ்விதம் அது தோன்றக் காரணம், அது ஸ்தாபனமாக இல்லை. பின்பு பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டபோது, அது என்ன செய்தது? அது உமியாக ஆனது. அது உண்மையானதைப் போல் தோற்றமளித்தது. 83எவரும்... உங்களில் எத்தனை பேர் விதையைக் கண்டிருக்கிறீர்கள்? வளர்ந்து வரும் கோதுமையை? முதலில் தோன்றுவது என்ன? உமியானது பார்ப்பதற்கு விதையைப் போலவே இருக்கும். ஆனால் அது உமி. மூன்று கட்டங்களைப் பாருங்கள்? தண்டு, பட்டுக் குஞ்சம் அல்லது மகரந்தம், அதன் பின்பு உமி. அந்த உமியிலிருந்து மூலவித்து தோன்றுகிறது. உமி விதையல்ல, விதையிலிருந்து ஜீவன் வளர்ந்து கொண்டே வந்து இந்த விதையை அடைகின்றது. ஆமென் ஆமென்! அதைக் காண்கிறீர்களா?அது என்ன? அது ஒரு உயிர்த்தெழுதல். மீண்டும் சிறந்த வேலைப்பாட்டிற்கு வருதல். பூமிக்குள் சென்ற ஒன்றினைப் போலவே. பெந்தேகோஸ்தே, வெஸ்லியிலிருந்து புறப்பட்டு வந்தது. ஏனெனில் வெஸ்லி மத ஸ்தாபனமாக ஆகிவிட்டது. பெந்தேகோஸ்தே முதலில் புறப்பட்டு வரும்போது அது ஸ்தாபனமாக மாறவில்லை; ஆனால் பின்பு, ஒரு ஸ்தாபனமாக ஆகியது. அதுதான் உமி என்ற கட்டத்தை உண்டாக்க வேண்டியிருந்தது. இக்கட்டங்களின் வழியாக உண்மையான ஜீவ வார்த்தையானது, மூல மணி என்ற நிலையை அடையும் கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. தண்டின் வழியாக மகரந்தப் பொடிக்குள்; மகரந்தப் பொடியிலிருந்து உமிக்குள் உமியிலிருந்து விதை தோன்றுகிறது. 84தண்டு. மகரந்தம், உமி!. அவர்கள் ஜீவித்திருந்தபோது, தங்கள் ஆரம்ப எழுப்புதலில், விதையினுடைய ஜீவனின் ஒரு பிரத்தியேக பாகத்தை மாத்திரமே அவர்கள் சுமந்திருந்தனர். ஆனால் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, ஜீவன் அவர்களிலிருந்து வெளியேறிச் சென்றது: சரித்திரம் அதை நிரூபிக்கின்றது. எந்த ஒரு ஸ்தாபனமும், அது தன்னை ஸ்தாபித்துக் கொண்ட பிறகு, எதையும் செய்ததில்லை. அது மரித்துப்போனது. அது உண்மை. கவனியுங்கள், ஜீவன் பயணம் செய்து கொண்டு வருகின்றது. அது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. கவனியுங்கள், இவர்கள் செய்த அனைத்தும், சபை எவ்விதம் வளர்ந்து வந்தது என்பது சரித்திரபூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மறுபடியும் தேவனுக்கு உபயோகமாயிருக்கவில்லை. ஸ்தாபனங்கள் பரண் (Shef) மேல் வைக்கப்பட்டுவிட்டன. ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட சபை எதுவும் மரிக்காமலிருந்தது என்பது சரித்திரத்திலேயே கிடையாது. ஸ்தாபனங்கள் மரித்த பின்பு, அவை மறுபடியும் எழும்பினதேயில்லை. அதை உங்களால் காண முடியவில்லையா?குருடராயிருக்கும் மனிதர்களே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்! இயற்கையும் தேவனுடைய வார்த்தையும் ஒருங்கிணைந்து, இது உண்மை. அது உண்மையென்பதை நிரூபிக்கின்றது. ஜீவன் தண்டைவிட்டுச் சென்று பட்டுக் குஞ்சத்தை தோன்றச் செய்கின்றது. பட்டுக் குஞ்சத்திலிருந்து அது புறப்பட்டுச் சென்று பதரை உண்டாக்குகின்றது. பதரிலிருந்து அது மீண்டும் மூல வித்திற்குள் செல்கின்றது. கவனியுங்கள், மறுபடியும் அவைகள் அவருக்கு உபயோகமாயிருக்கவில்லை. 85இந்த ஜீவனின் பயணம், மரத்தில் காணப்படுவதை விட, கோதுமை செடியில் தெளிவாகக் காணப்படுகின்றது. தேவன் தமது ஜனங்களை மரங்களைப் போல் இருக்க அழைத்திருக்கிறார். ஜீவன் மரத்தின் கீழ்பாகத்தில் சென்று மீண்டும் மேலே வந்து, கீழே சென்று மீண்டும் மேலே வருகின்றது. ஆனால் ஒரு கோதுமை செடியின் வளர்ச்சியில் அது தண்டை விட்டுப் புறப்பட்டுச் சென்று, பட்டுக் குஞ்சம், உமி வழியாக வருகின்றது. அது எவைகளின் வழியாக வருகின்றதோ, அவைகளை அது மீண்டும் அடையாதபடிக்கு, அவை செத்துவிடுகின்றன. அது என்ன? அவைகளால் இனி உபயோகமில்லை. அது பரிபூரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஆமென்! அவர் ஏன் ஒரு ஸ்தாபனத்தை உபயோகிக்கவில்லை என்பதை உங்களால் காண முடிகிறதல்லவா? அவர் மறுபடியுமாக அவைகளில் பிரவேசிக்க முடியாது. அது செத்துப்போனது. ஆனால் ஜீவனோ ஒன்றிலிருந்து மற்றொன்றில் பிரவேசிக்கின்றது பாருங்கள்! இவர்கள் கோட்பாடுகளை அமைத்துக் கொண்டு, அவைகளைப் புகுத்துகின்றனர்... “எவனாகிலும் இதனுடன் ஒரு வார்த்தையை கூட்டினால் அல்லது எடுத்துப் போட்டால்... பாருங்கள்? அவர் அதனின்று தடை செய்யப்பட்டுவிட்டார். விதையிலிருந்து ஜீவன் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியதாயுள்ளது. 86நான் இதை மணவாட்டிக்கு - மீண்டும் தோன்றுகின்ற சிறந்த வேலைப்பாடாகி சிற்பத்திற்கு - உவமையாக உபயோகிக்கிறேன். அந்த சிறந்த வேலைப்பாடாகிய சிற்பம் விழுந்து போனபடியால் வேறொரு சிறந்த வேலைப்பாடு எழும்புகின்றது. ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் சிறந்த வேலைப்பாடு கொண்ட சிற்பம் விழுந்தது. அதன் பின்பு அவள் ஒரு பிரத்தியேக முறை வழியாக வந்து, சிறந்த வேலைப்பாடான சிற்பத்தின் நிலைக்கு பரிபூரணப்பட்டவளாய் மீண்டும் வருகிறாள். ஏனெனில் அவரால் உரைக்கப்பட்ட வார்தையின் ஒரு பாகமாக அவள் இருக்கிறாள். அவருக்கு கறைதிரையற்ற சபை ஒன்று இருக்கும். அது எந்த விதத்திலும், சபிக்கப்பட்ட எந்த ஸ்தாபனத்துடனும் தொடர்பு கொண்டிருக்காது. அவைகளின் வழியாக அது கடந்து வந்துவிட்டது. அது மறுபடியுமாக அங்கு செல்லாது. 87கவனியுங்கள், வித்து மேலேழுகிறது. ஜீவன் மேலெழுகிறது. மீண்டும் கீழே செல்வதில்லை. இதற்குப் பின்பு வேறொரு உயிர்த்தெழுதல் இருக்க முடியாது. பரிபூரணத்தை அடைவதற்கென ஜீவன் மேலே சென்று கொண்டிருக்கிறது - உயிர்த்தெழுதல். கவனியுங்கள், உமியானது மூலவித்தை அதனின்று புறம்பே தள்ளிவிடுகின்றது. இதை நாம் வெளிப்படுத்தல் 3-ல் காண்கிறோம். ஏழுசபை காலங்களில் வேறெந்த சபையும் அவரைப் புறம்பே தள்ளினதாக வேதத்தில் எழுதப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களில் எத்தனை பேருக்கு அது ஞாபகமிருக்கின்றது? அவர் வேறொன்றைத் தோன்றச் செய்வதற்கென சபையின் காலங்களின் வழியாகக் கடந்து வந்தார். அவ்வளவுதான், வேறொன்றுமில்லை. சிற்பி வார்த்தையை மீண்டும் பரிபூரணத்திற்குக் கொண்டு வருகிறார். பாருங்கள்? அது திரும்பிச் செல்வதில்லை. எவ்வளவு வித்தியாசமாயுள்ளது! ஆம். 88ஓ, கவனியுங்கள். உமி தோன்றும் போது, அது அப்படியே கோதுமை மணியைப் போல் காணப்படுகின்றது. ஆனால் விதையிலிருந்த ஜீவன் உமியைவிட்டுச் சென்று கோதுமை மணியை (மணவாட்டியை) தோன்றச் செய்யும்போது, உமி விரிந்து, கோதுமை மணியைப் பிரஷ்டம் செய்கின்றது. இயற்கையில் அது உண்மையாயிருக்கிறதல்லவா? அதை தான் அவள் செய்தாள். லவோதிக்கேயா சபை அவரை வெளியே தள்ளிற்று என்று நாம் வெளிப்படுத்தல் 3ல் காண்கிறோம். இப்பொழுது கவனியுங்கள், மற்ற சபை காலங்களில் அவ்விதம் நிகழ்வில்லை. ஏனெனில் ஏதோ ஒன்று இனிமேல் தோன்ற வேண்டியதாயிருந்தது. அது ஒன்றிலிருந்து கடந்து மற்றொன்றுக்கு வந்தது. வேறொரு ஸ்தாபனம் இனி தோன்றாது. நான் இவ்வளவு காலமும் உங்களிடம் கூறி வந்திருக்கிறேன். நாம் முடிவுக்கு வந்திருக்கிறோம். அவரை அவர்கள் வெளியே தள்ளிவிட்டார்கள். ஏன்? அவர் மறுபடியுமாக வார்த்தையாயிருக்கிறார். அங்கு நிலத்தில் விழுந்த ஒன்றினைப் போலவே அவர் இருக்கிறார். ஆதியிலிருந்து வந்து கொண்டிருக்கும் அதே போதகமாக அவர் இருக்கிறார். வார்த்தையாகிய வித்து வளரத் தொடங்கும்போது, உமி அதை தன்னைவிட்டு தள்ளிவிடுகின்றது. ஜீவன் அவைகளையெல்லாம் விட்டு, இதனை (வித்தை) பின் தொடருகின்றது. அவர்கள் தாம் உண்மையான விசுவாசிகள், ஜீவன் எங்கு சென்றாலும், அவர்கள் அதைப் பின் தொடருகின்றனர். 89அது இஸ்ரவேலரைப்போல் - ஒரு பரிபூரண முன்னடையாளம் (நமக்குச் சமயமிருந்தால்... எனக்கு இன்னும் சில நிமிடங்கள் மாத்திரமே உள்ளன.) தொடக்கத்தில் அது பரிபூரண முன்னடையாளமாயிருந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம், எங்கெங்கே சென்றதோ, அங்கெல்லாம் ஜீவன் இருந்தது. தேவனே அந்த ஒளி, அது நள்ளிரவாயிருந்தாலும், அல்லது தெரிந்தெடுக்கப்பட்ட நல்ல ஸ்தலத்தில் அவர்கள் இருந்தபோதிலும், அதைக் குறித்து கவலையில்லை. அந்த அக்கினி ஸ்தம்பம் புறப்பட்டபோது, எக்காளம் தொனித்தது. இஸ்ரவேல் ஜனங்கள் அதனுடன் பிரயாணப்பட்டு சென்றனர். அல்லேலூயா! எக்காளம் தொனித்தபோது, மார்டின், லூத்தர் அதனுடன் புறப்பட்டு சென்றார். அவர் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டார். கொன்று போட்டது. அவரல்ல, அவருக்கு பின் வந்தவர்கள், பின்பு தேவன் அதனின்று ஜீவனை எடுத்து விட்டு, அதை மேலெழச் செய்து, அந்த ஸ்தாபனத்தை கல்லறையில் புதைத்துவிட்டார். பின்பு வெஸ்லி தோன்றினார். அவர் அந்த பெரிய ஸ்தாபனத்தை கண்டார் (லூத்தரன்). எனவே அவர் பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் எக்காளத்தை தொனித்தார் - அது இன்னும் கூடுதலான தேவனுடைய வார்த்தை. பாருங்கள்? அவர் அவ்விதம் செய்த போது, அவர்கள் புறப்பட்டு சென்றனர் - லூத்தரிலிருந்து நேரடியாக மெதோடிஸ்டுக்குள். மெதோடிஸ்டு ஸ்தாபனத்தை பெந்தேகோஸ்தேயினர் கண்டபோது, அவர்கள் ஒரு எக்காளத்தை தொனித்தனர். வரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டிய - சமயமாயிருந்தது அது. அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள்? அவர்கள் எக்காளம் தொனித்து அதனின்று (மெதோடிஸ்டு ஸ்தாபனத்திலிருந்து) வெளி வந்தனர். பின்பு அவர்களும் ஸ்தாபனம் ஒன்றை உண்டாக்கிக் கொண்டனர். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள். உமிக்குப் பிறகு (நாம் அறிந்த இந்த மூன்று கட்டங்களுக்குப் பிறகு), கோதுமை மணியைத் தவிர வேறொன்றும் இல்லை. ஓ, தேவனே! அதன் பின்பு கோதுமை மணி அவைகளெல்லாவற்றாலும் புறம்பே தள்ளப்படுகின்றது. ஆமென், ஆமென்! வார்த்தையாகிய வித்து மீண்டும் தன்னையே உருவாக்கிக் கொள்கிறது. ஜீவன் இவைகளின் வழியாக வருகிறது... இப்பொழுது கவனிங்கள், தொடக்கத்தில் மணவாளன், முதலாம் மணவாளன்... இது மணவாட்டி தோன்றுதலாகும். 90சபையானது பெந்தேகோஸ்தே நாளன்று தொடங்கி நிசாயாவில் விழுந்தது. அது உண்மையான கோதுமை மணியைப் போல் துளிர் விடவில்லை, இல்லை. அதில் சிறிது ஜீவன் மாத்திரமே இருந்தது. ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொள்வதற்கென் அது துளிர்விட்டது. பின்பு அது என்ன செய்தது? அந்த ஸ்தாபனத்தின் வழியாக அது வந்தது. அது அந்த ஸ்தாபனத்திலிருந்து வேறொரு ஸ்தாபனத்திலிருந்து வேறொரு ஸ்தாபனத்துக்குள் நுழைந்து, வார்த்தையின் வேறொரு கட்டத்தையடைந்தது; நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின்அபிஷேகம். பாருங்கள்? அது தண்டு இவைகளின் வழியாக மேலே வரும்போது, அது அதிகமாகிக் கொண்டே வந்தது. கவனியுங்கள், பட்டுக் குஞ்சத்தைக் காட்டிலும் - தண்டைக் காட்டிலும் பட்டுக்குஞ்சம் கோதுமை மணியைப் போல் சற்று அதிகமாகக் காணப்பட்டது. அவ்வாறே உமியும் பட்டுக் குஞ்சத்தைக் காட்டிலும் சற்று அதிகமாக கோதுமை மணியைப் போல் காணப்பட்டது. ஆனால் கோதுமை மணியோ இவையனைத்தையும் கடந்த ஒன்றாகும். பாருங்கள்? அது பயணம் செய்து மேலெழும்ப இவைகள் அனைத்தையும் உபயோகித்துக் கொண்டது. 91கவனியுங்கள். மணவாட்டி... தொடக்கத்தில் மணவாட்டி வார்த்தையாக இருந்திருப்பாளானால் - அல்லது மணவாளன். மணவாளனிலிருந்து மணவாட்டி பிரித்தெடுக்கப்பட்டிருந்தால், அவளும் வார்த்தையாகவே இருக்கவேண்டும். கவனியுங்கள். மணவாட்டியும் இருக்க வேண்டும்... ஏன்? மணவாளன் ஏன் பிரத்தியட்சமாக்கப்பட்ட வார்த்தையாக, வெளிப்படையாக அமைந்திருக்க வேண்டும்? ஏனெனில் மணவாளனும் மணவாட்டியும் ஒருவரே. அவள் அவரிலிருந்து அடிக்கப்பட்டு உடைத்து எடுக்கப்பட்ட துண்டாக இருக்கிறாள். அது தான் சிறந்த வேலைப்பாடான சிற்பம். அது அடிக்கப்பட்டது. மைக்கல் ஆஞ்ஜலோ உடைக்கப்பட்ட தன் சிற்பத்தை பழுது பார்த்து சரிப்படுத்த முடியவில்லை. உடைக்கப்பட்ட அந்த துண்டை அவனால் சிற்பத்தில் பொருத்த முடியவில்லை. ஆனால் தேவனோ அதைச் செய்யப் போகின்றார். அடிக்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த சிறிய மணவாட்டியை அவர் மறுபடியுமாக மூல வார்த்தையின் விலாவில் பொருத்தப் போகின்றார். அது தான் அந்த சிறந்த வேலைப்பாடு - அந்த குடும்பம் மீண்டும் ஏதேன் தோட்டத்திற்குள் வருதல். 92இந்த மணவாட்டி இதை எவ்விதம் செய்யப் போகின்றாள்? இந்த கோதுமை மணி இதை எவ்விதம் செய்யப் போகின்றது? கடைசி நாட்களில் இது பழைய நிலைக்குத் திரும்ப கொண்டுவரப்படுமென்று மல்கியா 4 உரைக்கின்றது. என்ன? தொடக்கத்திலிருந்த நிலைக்கு அது திரும்ப கொண்டு செல்லப்படும். “முசுக்கட்டை பூச்சிகளும் பச்சைப் புழுக்களும் இன்னும் மற்றவைகளும் பட்சித்தவைகளை நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்” (யோவேல் 2:25). அவர் ஜனங்களின் இருதயத்தைத் திருப்புவார். ஜனங்களின் விசுவாசத்தை மூல பிதாக்களிடத்தில் திருப்புவார் - என்று மல்கியா: 4 உரைக்கின்றது. பாருங்கள்?சபையே, அது நம் முன்னிலையில் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். நாம் இப்பொழுது எங்கு வந்துள்ளோம்? 93இன்னும் சில நிமிடங்களில் முடிக்கப் போகிறேன். இப்பொழுது நிகழ்ந்த ஒன்றை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.. மூலமான காரியத்திற்கு மல்கியா: 4 திருப்பும். அவள் ஸ்தாபனத்திலிருந்து - ஸ்தாபன அமைப்பிலிருந்து - அடிக்கப்பட்டு பிரிக்கப்பட்டாள். அவளுடைய எஜமானுடன் கூட அவளும் அதே நோக்கத்திற்காகவே அடிக்கப்பட்டாள். (அவள் வார்த்தையாயிருக்கிறாள்). வார்த்தையாக இருந்த காரணத்தால் யோசேப்பு எவ்வாறு தன் சகோதரரிலிருந்து அடிக்கப்பட்டு பிரிக்கப்பட்டானோ அதே விதமாக. இயேசுவும் வார்த்தையாயிருந்தபடியால், தம் சகோதரரிலிருந்து அடிக்கப்பட்டு பிரிக்கப்பட்டார். அவ்வாறே மணவாட்டியும் அடிக்கப்பட்டு ஸ்தாபனத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டாள். ஏனெனில் அவள் வார்த்தையாயிருக்கிறாள். அதோ மீண்டும் மூன்று கட்டங்கள். ஒன்று, இரண்டு, மூன்று பாருங்கள்? அப்படியே. 94ஜீவித்து கிரியை செய்யும் வார்த்தை - வேதாகம மணவாட்டி மனிதனால் உண்டாக்கப்பட்ட மணவாட்டியல்ல, வேதாகம மணவாட்டி , தேவனால் அடிபட்டு வாதிக்கப்படுகிறாள். அவளுக்கு விரும்பத்தக்க ரூபம் இல்லை. ஆயினும் அவள் தேவனால் அடிபட்டு வாதிக்கப்படுகிறாள் என்று எண்ணினோம். அது உண்மை. அவள் தனிமையாக நிற்கிறாள். வெளிப்படுத்தல்: 3ன் படி, அவள் அடிக்கப்பட்டு ஸ்தாபனங்களினின்று பிரித்தெடுக்கப்படுகிறாள். அவள் வளர்ந்து வந்த லவோதிக்கேயா சபையினின்று அவள் அடிக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறாள். பாருங்கள்? இந்த சபையானது லவோதிக்கேயா சபையின் காலத்தில் எழுப்பப்பட்டது. லவோதிக்கேயா சபை உமியாகும். மற்றவர்கள் போய்விட்டபோது... பெந்தேகோஸ்தராகிய உங்களால் அதை காண முடியவில்லையா? தண்டும் பட்டுக் குஞ்சமும் செத்தது போன்று உமியும் சாகவேண்டும். ஸ்தாபனங்களின் மூன்று கட்டங்கள். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?... நீங்கள், “மகரந்தம் அநேகம் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அது அனேகமாயிருக்கிறது என்றீர்கள். ஆம்!மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள் கிறிஸ்து சபையினர் (Church of Christ) போன்றவை அதில் தொங்கிக்கொண்டிருந்தன. இலைகளும் அதில் தொங்கிக் கொண்டிருந்தன. அவைகளுக்கெல்லாம் மூல காரணம் சீர்திருத்தமே. இப்பொழுது, பாருங்கள்? 95நீங்கள் மணவாளனைப் போல் தனித்து நில்லுங்கள். அவர் மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு சபைகளால் புறக்கணிக்கப்பட்டார். மணவாட்டியும் அவ்விதமே நின்று கொண்டிருப்பாள். அது என்ன? அது தான் அவருடைய சிறந்த வேலைப்பாடான சிற்பம். பாருங்கள்? அவர் கிரியை செய்து தம்மை பிரத்யட்சப்படுத்த கூடிய வார்த்தை தான் அவள் - புறக்கணிக்கப்பட்டவள். எனவே, தண்டும், பட்டுக் குஞ்சமும், உமியும் வித்தாக மாறுவதில்லை (இல்லை!) ஆனால் அவை ஒவ்வொரு முறையும் சற்று ஏறக்குறைய வித்தைப் போல் காணப்படுகின்றது. அறுவடையின் போது வித்து தனது மூல ஜீவனுக்கு மீண்டும் வருகின்றது. மீண்டும் வேதாகமத்திற்கு வருதல், அது அவ்விதம் நிகழுமென்று மல்கியா 4: உரைக்கின்றது. ஓ ,ஓ, என்னே! அது அவ்விதம் இருக்க வேண்டுமானால், வார்த்தை அனைத்தையும் அது பெற்றிருக்க வேண்டும். அது சரி? 96இப்பொழுது என்ன நிகழுமென்று அவர் வெளிப்படுத்தல் 10-ல் கூறியுள்ளார்?டூசானுக்கு நான் செல்லவேண்டிய அவசியமென்ன? சபைக்கு கர்த்தர் திறந்து கொடுக்க... ஏழாம் தூதனின் காலத்தில் (ஏழாம் தூதனின் செய்தியில்) தேவனுடைய முழு வார்த்தையும் பிரத்யட்சமாக்கப்படும். தண்டு விட்டுவிட்ட முத்திரைகளின் இரகசியங்கள் போன்றவையும் அவைகளைக் குறித்துள்ளவைகளும் இக்காலத்தில் பிரத்யட்சமாக்கப்படும். தேவனுடைய வார்த்தை அவ்விதம் கூறியுள்ளதல்லவா? அதை நாம் காண்கிறோம். அப்படியானால் நாம் எங்கு இருக்கிறோம்? பாருங்கள்? நாம் எங்கு இருக்கிறோம்? இன்னும் ஒன்று மாத்திரமேயுள்ளது. அறுவடை இங்குள்ளது . அவள் முற்றிலும் முதிர்வடைந்துவிட்டாள், அவருடைய வருகைக்காக அவள் ஆயத்தமாயிருக்கிறாள். கவனியுங்கள். 97அது ஒருக்காலும் அப்படியிருக்காது... அறுவடை காலத்தின்போது, விதை மூல நிலைக்கு மீண்டும் வந்துவிடுகின்றது. அது விதையாயிருக்க வேண்டுமானால், தேவனுடைய வார்த்தை அனைத்தையும் அது கொண்டிருக்க வேண்டும். அது விதையின் பாதி பாகத்தை மாத்திரம் பெற்றிருந்தால் போதாது. அப்படியானால் அது முழுவளர்ச்சி பெறாது. அது விதையின் முழுமையும் கொண்டிருக்க வேண்டும். “நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசிக்கிறேன். அல்லேலூயா! அன்னிய பாஷை பேசுவதில் விசுவாசம் கொண்டிருக்கிறேன்” என்று கூறினால் மாத்திரம் போதாது. அது விதையின் ஒரு பாகம் மாத்திரமேயாகும். ஆனால் அதனுடன், அல்லேலூயா! பாருங்கள், ஜீவன் சேர்ந்துள்ளது. வரங்கள் அல்ல, வரங்களின் ஜீவன். பாருங்கள்? நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா? சகோதரரே, நாம் முடிவு காலத்தில் வந்துள்ளோம். இப்பொழுது தண்டு, பட்டுக் குஞ்சம், உமி இவை உலர்ந்து செத்துவிட்டன. இன்னும் அதற்கு ஒன்று மாத்திரமே சம்பவிக்க வேண்டியதாயுள்ளது. அவையனைத்தும் சுட்டெரிக்கப்படுவதற்காக உலக சபை ஆலோசனை சங்கத்தில் (World Council of Churches) அவை ஒன்று சேர்க்கப்பட வேண்டும்... 98லூக்கா-17, மல்கியா- 4 இவைகளிலெல்லாம் அவர் வாக்களித்த விதமாகவே வார்த்தையானது மாமிசமாகிவிட்டது. பாருங்கள். அது உண்மை. வெளிப்படுதல்... தண்டு, பட்டுக் குஞ்சம், உமி இவைகளிலிருந்த உண்மையான ஜீவன் அனைத்தும் இப்பொழுது விதையில் ஒன்று கூடி உயிர்த்தெழுதலுக்கு, அறுவடைக்கு ஆயத்தமாகின்றது. அல்பா ஓமெகாவாகிவிட்டார். முந்தினவர் பிந்தினவராகிவிட்டார். பிந்தினவர்தான் முந்தினவர். நிலத்திற்குள் சென்ற விதை சில முறைகளின் வழியாக வந்து மறுபடியுமாக விதையாகிவிட்டது. ஏதேன் தோட்டத்தில் விழுந்து செத்த அந்த விதை (அங்கு செத்த அந்த பரிபூரண மற்ற விதையிலிருந்து) மீண்டும் பரிபூரணமுள்ள விதையாக வருகின்றது - இரண்டாம் ஆதாம். 99விழுந்து போன முதலாம் ஏவாள் இரண்டாம் சீர்திருத்தத்தில் - இரண்டாம் வருகையின் போது ஒரு பிள்ளைபெறுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டு, மீண்டும் உண்மை மண்வாட்டியாக - மூல வார்த்தைக்குத் திரும்பின வித்தாக - ஆகிவிடுகிறாள். அப்பாவும் ஓமெகாவும் ஒருவரே. அவர், “நான் அல்பாவும் ஓமெகாவுமாய் இருக்கிறேன்” என்றார். இவ்விரண்டிற்கும் இடையில் அவர் ஏதாவது ஒன்றாக இருப்பதாகக் கூறவில்லை. நான் அல்பாவும் ஓமெகாவும் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்“ (வெளி. 1:11). அதுதான். முதலாம் ஊழியமும் கடைசி ஊழியமும் ஒன்றே. முதலாம் செய்தியும் இரண்டாம் - கடைசி செய்தியும் ஒன்றே. நான் அல்பாவிற்குள் இருந்தேன். ஓமெகாவுக்குள் இருக்கிறேன். “ஒரு நாள் உண்டு. அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். (சகரியா 14:7) பாருங்கள்? அல்பாவும் ஓமெகாவும்; அது முந்தினவரும் பிந்தினவருமாக ஆகின்றது. ஓ, என் சகோதரரே, அதில் மணிக்கணக்காக நாம் நிலைத்திருக்கலாம். 100சிறந்த வேலைப்பாடாகிய இரண்டாம் ஆதாமும் இரண்டாம் ஏவாளும் கொண்ட குடும்பம் இப்பொழுது தோட்டத்திற்காக - மீண்டும் பூமியில் ஆயிரம் வருஷ அரசாட்சிக்காக - ஆயத்தமாயுள்ளனர் (ஆமென்!) அல்லேலூயா! அந்த மகத்தான சிற்பி அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. பரிபூரணமான முதலாம் தம்பதிகளை. உருவாக்க அவர் கோடிக்கணக்கான வருடங்கள் எடுத்துக் கொண்டார். அவர்களோ விழுந்து போயினர். இப்பொழுது ஆயிரக்கணக்கான வருடங்கள் சென்றுவிட்டன. அவர் அவர்களை மீண்டும் உருவாக்கிவிட்டார். இப்பொழுது அவர்கள் ஆயத்தமாயுள்ளனர். சிறந்த வேலைப்பாடான சிற்பம் தோன்றி, அது அடிக்கப்பட்டது. அவருடைய விலாவிலிருந்து அவருடைய துணைவி வெளி வந்தாள். அவளும் அதே முறையில் உருவாக்கப்பட்டாள். இயற்கையும், வேதமும், மற்றெல்லாமுமே நாம் இங்கு வந்து விட்டோம் என்பதை ருசுபடுத்துகின்றது. நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்பினாள். இவை வேதாகமம் முன்னறிவித்த அடையாளங்களாம். புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன (நமது மத்தியிலுள்ள குப்பை கூளங்களைப் பாருங்கள்) திகில் எங்கும் சூழ்ந்துள்ளது. சிதறப்பட்டோரே உங்கள் மந்தைக்குத் திரும்புங்கள். (அது உண்மை. நீங்கள் போக நினைத்தால் உடனடியாக - திரும்புங்கள்) இன்னும் ஐந்து, பத்து நிமிடங்களில் முடித்துவிடுகிறேன். 101கவனியுங்கள். சிறந்த வேலைப்பாடான அந்த குடும்பம், கணவனும் மனைவியும் ஒற்றுமையாயிராவிடில் அவர்கள் உண்மையான குடும்பமாக இருக்க முடியாது. அவர்கள் அப்படி இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் நல்ல குடும்பமல்ல - மனைவி ஒரு பக்கம் செல்லுதலும் கணவன் மற்றொரு பக்கம் செல்லுதலும், அது அவர்களை ஒரு பயங்கர குடும்பமாகச் செய்துவிடும். அதற்குப் பதிலாக அவர்களிருவரும் ஒருமித்து ஒருவரையொருவர் நேசித்தால், அதுதான் உண்மையான குடும்பம். தேவனுடைய சிறந்த வேலைப்பாடான குடும்பத்தை உண்மையான குடும்பங்கள் அனைத்தும் சித்தரிக்கின்றன. பாருங்கள்? சிறந்த வேலைப்பாடான குடும்பம் மீண்டும் வந்துவிட்டது. கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும் ஆயத்தமாயுள்ளனர். இரண்டாம் ஆதாமும் இரண்டாம் ஏவாளும் தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல ஆயத்தமாயுள்ளனர். அந்த முழு சித்திரமே மீட்பு என்பதாயிருந்து, அவர்கள் முன்பிருந்த இடத்திற்கு அவர்களை மீண்டும் கொணர்கின்றது. பின்பு... 102அன்றொரு நாள் கிறிஸ்தவ வர்த்தகரின் சங்கத்தில் நான் சென்றிருந்தபோது... உங்களில் அனேகர் அங்கு இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு லூத்தரன் பாதிரியார் (இவர் ஒரு போதகர் என்று கருதப்பட்டவர்) அங்கு எழுந்து நின்று, கேலித்தனமான காரியத்தைக் கூறி, நாம் விசுவாசிப்பவைகளை ஏளனம் செய்ததை நான் கேட்டபோது... கிறிஸ்தவ வர்த்தகர் அத்தகைய ஒருவரை அழைத்து, இவரும் அவ்விதம் கூறினது... அவருடைய கழுத்துப் பட்டையை அவர் திருப்பி அணிந்திருந்தார். அனேகர் இப்பொழுது அவ்விதம் செய்கின்றனர். அவர், “நான் - ஏன் என் கழுத்துப் பட்டையை திருப்பி அணிந்து கொண்டிருக்கிறேன் என்று என்னைக் கேட்கின்றனர். உங்களைக் கத்தோலிக்க பாதிரியாரிலிருந்து எப்படி வித்தியாசம் கண்டு கொள்ளமுடியும்? என்று கூறிவிட்டு, ”உண்மையில் இவ்விருவரிடையே எவ்வித வித்தியாசமுமில்லை. வித்தியாசமும் இருக்கக்கூடாது. நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகள். நான் கத்தோலிக்க பாதிரியாரை அறிவேன். அவர் சர்வ வியாபி (Omnipresent) (பாருங்கள்?) அவரால் எங்கும் பிரசன்னராயிருக்க முடியும்“ என்றார். 103நீங்கள் சர்வத்தையும் அறியாமல் (Omniscient) சர்வ வியாபியாக இருக்கமுடியாது. தேவன் சர்வவியாபி மாத்திரமல்ல, சர்வத்தையும் அறிந்தவரும் கூட. சர்வத்தையும் அறிதல்தான் அவரை சர்வ வியாபியாக்குகின்றது. அவர் மனிதனாக உருவெடுத்த காரணத்தால், அவர் ஒரு மனிதனில் இருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் சர்வத்தையும் அறிந்தவர் என்னும் நிலையில் அவர் சர்வ வியாபியாக இருந்தார். அவருக்கு எல்லாம் தெரியும். உலகத் தோற்றத்துக்கு முன்பே அவருக்கு, எத்தனை ஈக்கள், பேன்கள், பூச்சிகள் இருக்குமென்றும், எத்தனை முறை அவை கண் சிமிட்டும் என்றும் தெரியும் (பாருங்கள்?) ஏனெனில் அவர் சர்வ வியாபி... நீங்கள் முடிவற்றவராக (infinite) இராமல் எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்க முடியாது. பாருங்கள், முடிவற்றவர் ஒருவரே, அவர் தாம் தேவன். ஆமென்! பின்பு நாம்... 104அது என்ன? பிசாசு அவர்களை கொலைக்காக நேரே நடத்தி செல்கின்றான். அவர்கள் ஒவ்வொருவரும் அதற்காக உள்ளே செல்கின்றனர். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. பாருங்கள், பெந்தேகோஸ்தேயினர் மத்தியில் வந்து, அவர்களை அங்கிருந்து வெளியே இழுத்துக்கொள்வது... என்னே ஒரு சமயம். அங்கு என் சாட்சியைக் கூறி முடித்தவுடனே, ஒருவர் என்னிடம் வந்து, நான் அதைக் குறித்து அதிகம் பேசாதது நல்லதென்றும், அப்படிச் செய்திருந்தால் என்னைச் சிறையில் அடைத்திருப்பார்கள் என்றும் கூறினார். போதிக்கப்பட்டுள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று மனதில் எண்ணிக் கொண்டேன். “ஞானவான்கள் அந்த நாளில் தங்கள் தேவனை அறிந்து கொள்வார்கள்” என்று தானியேலின் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆம், ஐயா!பாருங்கள், ஞானவான்கள் தங்கள் தேவனை அறிந்து கொள்வார்கள்; அவர்கள் இந்தக் காரியங்களுக்காக கவனித்துக் கொண்டே வருகின்றனர். லூத்தரன் பாதிரியார் அவ்விதம் பிரசங்கிப்பதையும், அவருடன் கூட பெந்தேகோஸ்தேயினரும் நின்று கொண்டிருப்பதையும் நான் கண்டபோது... ஓரல் ராபர்ட்ஸும் கூட என்னை அப்படி பார்த்தார். “ஓ, என்ன இது!” என்று நான் நினைத்துக் கொண்டேன். கல்வியைப் பெற்று, மெருகேற்றப்பட்டவராய் அங்கு நின்று கொண்டு இவ்விதம் பேசுதல். தேவன் தம்முடையவர்களை அந்த விதமாக மெருகேற்றுவதில்லை. கல்வியின் மூலமாக அவர் தம்முடையவர்களை மெருகேற்றுவதில்லை. அவர்களை அவர் தாழ்மையிலும், பிரத்தியட்சமாக்கப்பட்ட வார்த்தையின் வல்லமையினாலும் மெருகேற்றி, அது எந்த கோதுமை மணியிலிருந்து புறப்பட்டு சென்றது என்பதை அதன் வடிவத்தின் (Shape) மூலம் காண்பிக்கிறார். 105யாரோ ஒருவர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே, உங்களைக் குறித்து ஒரு காரியத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றார். “அது என்ன? என்று கேட்டேன். அந்தக் கூடத்தில் நான் நின்று கொண்டிருந்த போது... சகோதரி டாஷம் மற்றவர்களும் அங்கிருந்தனர் என்று நினைக்கிறேன். நான் பில் (Bill)லுடனும் மற்றவர்களுடனும் கைகுலுக்கிவிட்டு ஒரு கூட்டம் ஜனங்களுடன் மூலைக்கு சென்ற போது, ஒரு போதகர் அவர்கள் மத்தியில் கடந்து என்னிடம் வந்தார். அவருடைய கழுத்துப் பட்டை திரும்பியிருந்தது. அவர், “நீங்கள் எப்பொழுதும் ஜனங்களைப் பார்த்து ஏன் கூச்சலிட்டுக் கொண்டேயிருக்கிறீர்?” என்று கேட்டார். “ஜனங்கள் உம்மை ஊழியக்காரன் என்று எண்ணியிருக்கும்போது, நீர் அவர்களிடம் மிருதுவாகவும் இனிமையாகவும் நடந்து கொள்ள வேண்டாமா?” என்றார். மேலும் அவர், “ஒவ்வொரு முறை பிரசங்கம் பண்ண நீர் எழுந்திருக்கும் போதும், பெண்கள் குட்டையான மயிர் வைத்திருப்பதைக் குறித்தும், சிறிய கால்சட்டை அணிவதைக் குறித்தும் சத்தமிட்டு, அவர்கள் குளிர்ந்து போய், சம்பிரதாயமுள்ளவர்களாகவும், அசிரத்தையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்று கூறுவதையே நான் கேட்கிறேன். நீர் ஏன் அப்படி செய்கிறீர்? அவர்கள் உம்மை நேசிக்கிறார்களே , நீர் அன்புள்ள தேவனுடைய குமாரனாக இருந்து கொண்டு அப்படிப்பட்ட செயலை எங்ஙனம் புரிய முடிகிறது?” என்று கேட்டார், “ஆண்டவரே, இந்த புத்திசாலியான மனிதனுக்கு சரியான விடையளிக்க உதவி செய்து, அவருடைய கயிற்றில் அவரை தொங்கும்படி செய்யும் என்று நினைத்துக் கொண்டு, ”ஐயா, மகத்தான் இசை அமைப்பாளரான பீத்தோவனைப் (Beethoven) பற்றி கேள்விப்பட்டதுண்டா? என்று அவரைக் கேட்டேன். அவர், “ஓ, நிச்சயமாக, நான் பீத்தோவனைக் குறித்து படித்திருக்கிறேன்” என்றார். “அவர் காகிதங்களில் எழுதி எழுதி கிழித்துப் போட்டு. உபயோகமற்ற காகிதங்கள் போடும் கூடைகளை (Waste baskets) நிரப்பியிருக்கலாம். ஆனால் அவர் உலகிற்கு மிகச் சிறந்த இசை பலவற்றை அமைத்துத் தந்திருக்கிறார்” என்றேன். அதன் பிறகு அவர் வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் கூட கூறவில்லை. படிக்கும் அறையில் பீத்தோவன் உட்கார்ந்து கொண்டு உள்ளுணர்வினால் ஏதாவதொன்றை எழுதுவார். அதை இசைக் கருவியில் வாசிப்பார். அது சரியில்லை என்று கூறிவிட்டு அதைக் கிழித்து கூடையில் போட்டுவிடுவார். ஆனால் அவருடைய உள்ளுணர்வின் காரணமாக, உலகம் சிறந்த இசையைப் பெற்றது என்றேன். ஓ, தேவனுடைய வார்த்தை எவ்விதம் வெட்டுகின்றது! ஆனால் அது சிறந்த வேலைப்பாடு கொண்டவைகளைத் தோன்றச் செய்து, உமிமையும் தண்டையும் அறவே அகற்றி, சிறந்த வேலைப்பாட்டினை தோற்றுவிக்கிறது. 106இன்னும் எனக்கு ஏழு நிமிடங்கள் உள்ளன. அதற்குள் நேற்று முந்தின நாள் நடந்த ஒன்றை உங்களிடம் கூறிவிடுகின்றேன். நான் இங்குள்ள பொருட்கள் வாங்கும் ஸ்தலத்தில் (Shopping center) உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் ரோமாபுரியிலுள்ள 'பிக் ஆலி' (Pig Alley) க்கு சென்றிருக்கிறேன். பிரான்சு நாட்டிற்கு சென்றிருக்கிறேன். நான் நியூயார்க் நகரத்திற்கும் லாஸ் ஏஞ்ஜெல்ஸுக்கும் போயிருக்கிறேன். ஆனால் ஜெபர்ஸன்வில்லிலுள்ள மோசமான ஸ்திரீகளைப் போல் என் வாழ்க்கையில் வேறெங்கும் நான் கண்டதில்லை. இந்த ஜனங்களில் காணப்படும் அவ்வளவு அசுத்தத்தை என் வாழ்க்கையில் வேறெங்கும் கண்டதில்லை. நான் அங்கு அமர்ந்து கொண்டு இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, என் மனம் நொந்தது. அப்பொழுது ஆண்டவர் எனக்கு ஒரு தரிசனம் அருளினார். அந்த தரிசனத்தை உங்களிடம் கூறப் போகிறேன். அதற்கு நான் விளக்கம் கூறலாமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் முதன் முறையாக இந்த தரிசனத்தை உங்களிடம் கூறப் போகின்றேன். 107நான் தரிசனத்தில் ஆழ்ந்தேன், அப்பொழுது யாரோ ஒருவர் என்னுடன் கூட இருந்தது போல் தோன்றினது. நான் அவரைப் பார்க்கவில்லை. அது ஒரு சத்தம் மாத்திரமே. நான் அந்தப் பக்கம் பார்த்தேன். அவர், “இப்பொழுது மணவாட்டி முன் காட்சியாக (Preview) வரப்போகிறாள்” என்றார். நான் பார்த்த போது, அதுவரை நான் கண்டிராத, மிகவும் அழகான, ஒழுங்காக உடுத்திய பெண்மணிக் குழு ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் நீண்ட கூந்தல் உடையவர்களாய், முழுக்கை கொண்ட மேலாடையும். நீண்ட பாவாடையும் அணிந்திருந்த வாலிபப் பெண்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இருபது வயது மதிக்கத்தக்கவர்களாய் இருந்தனர். வேதாகமம் எனக்கு முன்பாக இப்பொழுது திறந்திருக்கிறது. பாருங்கள்? நான் கண்டதை மாத்திரமே கூறமுடியும். “இப்பொழுது எதைப் பார்க்கிறீர்கள்?” என்று நீங்கள் கேட்டால், “நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலுரைப்பேன். “நீங்கள் யாரை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால், நான், ”ஜனங்களை நோக்கிக் கொண்டிருக்கிறேன்“ என்பேன். ”நீங்கள் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்“ என்று கேட்டால், ”நான் வேதாகமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்“ என்று விடையளிப்பேன். அதைதான் நான் காண்கிறேன். எனவே நான் உண்மையை மாத்திரமே கூறுகிறேன். நான் காண்பதை மாத்திரமே கூறமுடியும். அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆயினும் நான் கண்டதை உங்களிடம் கூறவேண்டும். 108இந்த மணவாட்டி... அவள் உற்று நோக்கிக் கொண்டே வந்தாள். (என்னுடன் பேசினவரும் நானும் ஒன்றாக நின்று கொண்டிருந்தோம்). அவள் கண்கள்... நான் என் வாழ்க்கையிலேயே, கண்டிராத அளவுக்கு அவர்கள் மிகவும் சுத்தமாகவும் இனிமையாகவும் காணப்பட்டனர். பன்னிரண்டு பேர் அல்லது சற்று அதிகம் இருந்தனர் போல் தோன்றினது... எத்தனை பேர் அணி வகுத்து வந்தனர் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஒரு கூட்டமாக இருந்தனர். அவள் என்னை இனிமையாகக் கடந்து சென்றாள். அவள் கடந்து சென்றபோது, அவள் கண்கள் மேல் நோக்கியதாய் கவனித்துக் கொண்டிருந்தன. ஓ, அவள் மிகவும் அழகாயிருந்தாள். நான் அவளைப் பார்த்தேன். அவள் கடந்து சென்றபோது அவர் என்னிடம், “அதுதான் மணவாட்டி. இப்பொழுது நாம் சபைகளை விமர்சனம் செய்யலாம்” என்றார். அவர்கள் வந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவர்கள் ஒவ்வொருவராக வந்தபோது, அது மோசமாகிக் கொண்டே வந்தது. அத்தகைய அசுத்தமான கூட்டத்தை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அவர், “அடுத்தது...” என்று கூறின போது, ஒரு சத்தத்தை நான் கேட்டேன், “இதோ அமெரிக்கர் கூட்டம் வருகிறது” என்றார் அவர். 109நானும் ஒரு அமெரிக்கன் தான். ஆனால் இது என்னை வெறுப்பு கொள்ளச் செய்தது. ஆண்களும் பெண்களும் கலந்திருக்கும் இக்கூட்டத்தில் அங்கு நடந்த யாவற்றையும் விவரமாக எடுத்துக் கூறும் அளவுக்கு என்னிடம் சொல்வன்மை கிடையாது. நீங்களே ஊகித்துக் கொள்ளவேண்டும். அந்த ஸ்திரீகளின் கூட்டத்திற்கு ஒரு மந்திரவாதி தலைவியாயிருந்தாள். அவளுக்கு நீளமான மூக்கும் பெரிய வாயும் இருந்தது. அவர்களெல்லாரும் ஒரு விதமாக ஆடையணிந்திருந்தனர். அவர்களுடைய கீழாடை மிகவும் தாழ இங்கு உடுத்தப்பட்டிருந்தது. மேல் பாகத்தில் அவர்கள் அரை அங்குல அகலத்தில் ஒரு பட்டையை (strap) அணிந்திருந்தனர் அது அவர்களுடைய தேகத்தில் சுற்றப்பட்டு மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருந்தது. ஓவ்வொரு ஸ்திரீயும் ஒவ்வொரு விதமான... அனேக ஆண்டுகளுக்கு முன்பு... நாம் செய்தித்தாளை வெட்டி அலங்காரத்திற்கு உபயோகிப்போமே, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? உங்களில் எத்தனை பேருக்கு அது ஞாபகம் இருக்கிறது? அவர்கள் அதை திருவிழாக்களில் (Garnival) உபயோகிப்பது வழக்கம். காகிதத்தை மடித்து, ஓரத்தில் வெட்டி உண்டாக்கப்பட்ட அலங்கார காகிதம், சரிகை காகிதம், அத்தகைய ஒன்றை அவர்கள் கீழ்பாகத்தில் இப்படி பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பாகம் - முழுவதும் வெளியே தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தலை மயிரை மிகவும் குட்டையாக வெட்டியிருந்தனர். தங்கள் முகங்களை அவர்கள் முழுவதும் அலங்காரம் செய்திருந்தனர். காண்பதற்கு அவர்கள் வீதிகளிலுள்ள விலைமகள்கள் போல் இருந்தனர். அவர்கள் இந்த அலங்காரக் காகிதத்தை பிடித்த வண்ணம் நடந்து சென்றனர். அந்த அநாகரீக நடத்தை அவர்களுடைய முன் பாகத்தில் மாத்திரம் அந்த காகிதம் பிடிக்கப்பட்டிருந்தது. அவர்கள் விமரிசன மேடையை (Review Stand) கடந்து சென்றபோது, அவர்கள் பின்பாகத்தில் ஒன்றுமேயில்லை. இவ்விதம் அவர்கள் முன்பாகத்தையும் பின் பாகத்தையும் காட்டிக் கொண்டு நடந்து சென்ற விதத்தையும், அவர்கள் எவ்விதம் நடந்து கொண்டனர் என்பதையும் கண்டபோது... “இது தான் சபையா?” என்று எண்ணினேன். 110அவள் அங்கு கடந்து சென்றாள். அவர்கள் ட்விஸ்ட் - அண்டு ரோல் பாட்டுகளைப் பாடிக்கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றனர். “இதுவா சபை?” என்று நான் நினைத்தவாறு நின்று கொண்டு, என் இருதத்தில் கதறினேன். இந்த மந்திரவாதி... இவள் தான் அவர்களை நடத்திசெல்லும் உலக சபை ஆலோசனை சங்கம் (World Council of Churches) என்பது என் கருத்து. அவர்கள் இடது பாகத்தில் அணி வகுத்து சென்று, தங்கள் இசைகளை முழக்கி, விசித்திரமான சப்தங்களை உண்டாக்கி, தங்கள் உடல்களை ஒருபுறமும் மறுபுறமும் அசைத்தவர்களாய், ஒழுங்கின்மைக்குள் நடந்து சென்றனர். 111நான் தலைகுனிய ஆரம்பித்தேன். அப்பொழுது அவர், “கொஞ்சம் பொறு: மணவாட்டி மீண்டும் வர வேண்டும்” என்றார். நான் பார்த்தபோது, மணவாட்டி குழுவினர் மறுபடியும் வந்தனர். அழகான அந்த சீமாட்டியார் கடந்து சென்றனர். அவர்கள் என்னையே நோக்கிக் கொண்டு கடந்து சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டேன். பின்பாகத்திலிருந்த ஒருத்தி தன் நீண்ட கூந்தலை இப்படி சுருட்டி வைத்திருந்தாள் - ஒருக்கால் ஜெர்மானிய தேசத்தவளாக இருக்கலாம், அல்லது அதுபோன்ற வேறொரு நாட்டைச் சேர்ந்தவளாய் இருக்கலாம்... நான் அவர்களை கவனித்துக் கொண்டேயிருந்தேன். அவ்விதம் அவர்கள் என்னை விட்டு கடந்து சென்றபோது, பின் பாகத்திலுள்ள இரண்டு அல்லது மூன்று பேர், அடிபிசகி, அணியைவிட்டு வெளியே செல்வதைக் கண்டேன். நான் அவர்களை நோக்கி சத்தமிடப் போனேன். அவர்கள் சரியான அடி வைத்து, மீண்டும் அணிக்குள் வர முயல்வதைக் கண்டேன். அவர்களை நான் நோக்கிக் கொண்டிருந்தபோது, அந்த தரிசனம் மறைந்து, என் சுய நிலையையடைந்தேன். 112அதனுடைய விளக்கம் இது தான். காரணம்... நான் இப்பொழுதுதான் அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்... அந்த குறிப்புகளை இன்னும் எழுதி முடிக்கவில்லை. ஆனால் இன்று காலை நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது, அதன் சரியான அர்த்தம் எனக்குப் புலப்பட்டது. சபை ஒருமுறைதான் காட்சிக்கு வந்தது என்பதை கவனித்தீர்களா? நண்பர்களே, நான் கூறுவது உண்மை. இந்த வார்த்தையை எழுதின பரலோகப் பிதா நான் உண்மையைக் கூறுகிறேன் என்றிவார். பாருங்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன் என்று எனக்குத் தெரியும். சில நிமிடங்கள் முன்பு வரை, அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று நான் அறிந்திருக்கவில்லை... பாருங்கள்? மணவாட்டி இரண்டு முறை காட்சிக்கு வந்தாள் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? முதலாம் வித்தும், இரண்டாம் வித்தும், இருவரும் ஒரே விதமாயிருந்தனர். அவர்கள் வித்தியாசமான உடையணிந்திருந்ததன் காரணம், அவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ளனர் என்பதைக் காண்பிக்கின்றது. அவர்கள் ஒருங்கே சேர்ந்து மணவாட்டியாயிருப்பர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீண்ட கூந்தல் இருந்தது. அவர்கள் எவ்வித முக அலங்காரமும் செய்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அழகிய பெண்கள். அவர்கள் என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். வெவ்வேறு நாடுகளிலிருந்து ஒன்று சேர்க்கப்பட்ட மணவாட்டிக்கு அது எடுத்துக் காட்டாயிருந்தது. பாருங்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டின் பிரதிநிதிகளாயிருந்து, தேவனுடைய வார்த்தை என்னும் நேர் கோட்டில் பிழையின்றி அணி வகுத்து சென்றனர். 113நான் அவளை கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிடில், அவள் வார்த்தையினின்று அடி பிசகி விடுவாள். அவள் என்னைக் கடந்து செல்லும்போது, நான் அவளை கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். என்னுடைய காலம் முடிவடைவதாக இருக்கலாம். இல்லையேல் வேறெதாவதாக இருக்கலாம். கவனியுங்கள். தங்களால் இயன்றவரை அவர்கள் அணிக்குள் வரமுயன்றனர். ஒழுங்கின்மைக்குள் சென்ற சபையை அவர்கள் நோக்கிக் கொண்டிருந்த காரணத்தால், அணியைவிட்டு வெளியே செல்ல நேர்ந்தது. இரண்டு பேர் மாத்திரம்... முதலில் இருந்தவர்களல்ல. பின்னால் இருந்த இரண்டு, மூன்று பேர் மாத்திரமே அணியைவிட்டு சற்று விலகி வலதுபுறம் சென்றனர். அவர்கள் அவ்விதம் விலகி சென்றபோது, மீண்டும் அணிக்குள் வர முயன்றனர். இங்கிருந்து அந்த சுவர் இருக்கும் தூரத்தில் அவர்கள் என்னைக் கடந்து சென்றனர். நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் அணிவகுத்து நடந்து என்னைக் கடந்து செல்வதைக் கண்டேன். சபையால் அது ஒரு முறை மாத்திரம் காட்சிக்கு வந்தது என்பதைக் கவனியுங்கள். ஆனால் மணவாட்டியோ இருமுறை தோன்றினாள். பாருங்கள்? அது என்ன தெரியுமா? தெரியாவிட்டால் இன்று காலை நான் அளித்த செய்தியோடு அதைப் பாருங்கள். 114நிசாயாவில் அந்த விதை நிலத்தில் விழுந்தது. அது தான் மூலவித்து. அவள் ஸ்தாபனங்களின் வழியாக வந்தாள். ஸ்தாபனங்கள் ஒரு முறைதான் தோன்றுகின்றன. ஆனால் மணவாட்டியோ இந்த கடைசி நாட்களில் மீண்டும் வருகின்றாள். “நான் திரும்ப அளிப்பேன். பாருங்கள் சிறந்த வேலைப்பாடான சிற்பம் மீண்டும் தோன்றுகிறது. அதன் காரணமாகத்தான் மணவாட்டி இரண்டாம் முறையாக காட்சிக்கு வருகிறாள். முதன்முறை: அவள் அணிவகுத்து, விமரிசனம் செய்யப்படுகிறாள். பின்பு இரண்டாம் முறையும் அவள் விமரிசனம் செய்யப்படுகிறாள். முதன் முறை அவள் எவ்வாறு பிழையற்றிருந்தாளோ, அதே விதமாக இரண்டாம் முறையும் அவள் இருக்கிறாள். ஓ, தேவனே, இரக்கமாயிரும், துரிதப்படுங்கள், துரிதப்படுங்கள், துரிதப்படுங்கள்! ஜீவனே, கோதுமை மணிக்குள் வேகம் நுழைந்து கொள்! பாருங்கள்? 115மற்றவர்கள் (ஸ்தாபனங்கள்) மீண்டும் தோன்றுவதில்லை. மீண்டும் தோன்றாதபடிக்கு அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் மணவாட்டியோ மீண்டும் தோன்றுகிறாள். ஏனெனில் அவள் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறாள். அந்த மகத்தான சிற்பியாகிய தேவன் அவருக்கென சிறந்த வேலைப்பாடு கொண்ட சிற்பம் ஒன்றை உண்டாக்கிக் கொண்டார். முதலாம் சிறந்த சிற்பத்திலிருந்து எடுக்கப்பட்ட துண்டிலிருந்து அது செய்யப்பட்டது. அவர் ஏதேன் தோட்டத்தில் ஒரு சிற்பத்தையுண்டாக்கி, அதனின்று ஒரு துண்டையெடுத்து வேறொன்றை உண்டாக்கினார். அது சேதமடைந்து கீழே விழுந்தது. நீண்ட காலமாக அவர் அதை மீண்டும் கட்டிக்கொண்டு வந்தார். அவர் சிறந்த வேலைப்பாடு கொண்டு வேறொரு சிற்பத்தை செய்து அதை அடித்தார். அந்த சிறந்த வேலைப்பாடு கொண்ட சிற்பத்தை மீண்டும் கொண்டு வர எண்ணி, அது அடிக்கப்பட்டது. எனவே சிறந்த வேலைப்பாடான தேவனுடைய குமாரனும் அவருடைய மணவாட்டியும். அது அவரிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு துண்டாகும். அது தேவனுடைய வார்த்தையின் நிறைவேறுதலாயிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை நிறைவேறிவிட்டது. நாம் தேவனுடைய வருகைக்கு ஆயத்தமாயுள்ளோம். 116ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, உங்கள் இருதயங்களையும் உங்களையும் தேவனுக்கு முன்பாக தாழ்த்துங்கள். நான் கூறிய இவையனைத்தும் உண்மை. அது உலகம் பூராவும் பரம்பியுள்ள அவ்வளவு மகத்தான காரியமா என்று எண்ண வகையுண்டு. தேவன் ஒரு போதும் தமது வழிகளை மாற்றுவது கிடையாது. சபையே, நன்றியுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அப்படி இருப்பதற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் நீங்கள் பாருங்கள்... இப்பொழுது... அது திகழும் போது... அந்த ஜீவன் முழுவதும் உயிர்த்தெழுதலுக்காக கோதுமை மணிக்குள் ஒன்று சேர்க்கப்படும். ஆனால் தண்டும் மற்றவைகளும் சுட்டெரிக்கப்பட வேண்டும். உமியும் மற்றவைகளும் சுட்டெரிக்கப்பட வேண்டும். அது அப்படியே சுட்டெரிக்கப்படும். உங்கள் ஸ்தாபனங்களை நம்ப வேண்டாம். ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையில் நிலைகொள்ளுங்கள். தேவனும் அவருடைய சிறந்த வேலைப்பாடும். பின்பு, ஆயிரவருட அரசாட்சியில் என்னவிருக்கும்? கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும் ஆயிர வருட அரசாட்சியில் மீண்டும் தோட்டத்தில் இருப்பார்கள். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 117அவர் அங்கு அடிப்பட்டார். நாமோ அவர் தேவனால் அடிபட்டு, வாதிக்கப்பட்டு சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். ஆனால் நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர்காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அந்த கோதுமை மணியில் இராத யாராகிலும் இக்காலையில் இங்குள்ளனரா? ஜீவனானது அதன் கடைசி பாகத்தை இப்பொழுது உமியிலிருந்து வெளியே இழுத்துக் கொண்டிருப்பதால். உமி உலர்ந்து கொண்டு வருகிறது. பெந்தேகோஸ்தே சபை உலர்ந்து கொண்டிருக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது என்ன? ஜீவன் அதைவிட்டு வெளியேறுகிறது. வெளிப்படையாகக் கூறினால், அது ஏற்கனவே வெளியேறிவிட்டது. ஏற்கனவே மணவாட்டி முன் காட்சிக்கு (Preview) வந்துவிட்டிருப்பாளானால், மணவாட்டி ஏற்கனவே ஒன்றாக்கப்பட்டுவிட்டாளா என்று ஐயமுறுகிறேன். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரிமரத்தில். 118நமது தலைகள் இப்பொழுது வணங்கியிருக்க, நினைவு கூறப்பட விரும்புகிறவர் யாராகிலும் இருக்கின்றனரா? நீங்கள் அதில் இல்லை என்று கருதினால்... நண்பர்களே, அது மிகவும் வெளிப்படையாய் உள்ளது. நான் எப்போதாகிலும் ஒரு தரிசனம் கண்டால் அது நிறைவேறாமல், அல்லது ஏதாகிலும் ஒன்று அதைத் தொடராமல், இதுவரை இருந்ததில்லை. நான் சத்தியத்தையே கூறுகிறேன். நான் கூறின மற்ற காரியங்கள் உண்மையென தேவன் நிரூபித்திருக்கிறார். எனவே இம்முறையும் நான் கூறுவது உண்மையாகும். நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டு வருகிறோம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றும் விடப்படவில்லை என்பது மாத்திரம் எனக்குத் தெரியும். எந்த அரசியல்வாதியும் எழும்பி இந்த காரியங்களை சரிப்படுத்த முடியாது. அரசியல், நாடு போய்விட்டது. ஓ, தேவனே! அதை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு உங்களால் அவ்வளவு ஆழமாக சிந்திக்க முடிகின்றதா? நாடு போய்விட்டது. நாடு அல்ல, நாடுகள். இந்த நாடு தான் எல்லா நாடுகளைக் காட்டிலும் மேன்மையுள்ளதாயிருந்தது. அதுவும் போய்விட்டது. நாடுகள் போய்விட்டிருந்தால், உலகமும் போய்விட்டது என்று அர்த்தமாகிறது. சபைகளைக் குறித்தென்ன? பெந்தேகோஸ்தே சபை தான் அவைகளெல்லாவற்றிலும் சிறந்ததாயிருந்தது என்பது என்னுடைய கருத்து. ஆனால் அதுவும் போய்விட்டது. ஓ தேவனே, எங்கள் மீது இரக்கமாயிரும். 119அவரை நீங்கள் இதுவரை அறியாமலிருந்தால், தயவு கூர்ந்து துரிதப்படுங்கள், துரிதப்படுங்கள்! நீங்கள் ஜீவனை உணருவீர்களானால், இப்பொழுதுதே உங்கள் பாவங்களை விட்டகன்று நீங்கள் இப்பொழுது இருப்பவைகளினின்று வெளியேறி, கோதுமை மணிக்கு உடனடியாக வந்து விடுங்கள். இல்லையென்றால் தண்டிலேயே அல்லது உமியிலேயே மரித்து விடுவீர்கள். நாம் இப்பொழுது பாடும் போது, ஜெபம் செய்வோம். நேசிக்கிறேன்..... இப்பொழுது அது உங்களைப் பொறுத்த விஷயம்; எங்களுக்கு ஸ்தாபனம் எதுவும் கிடையாது; எங்களுக்கு கிறிஸ்து மாத்திரமே இருக்கிறார். அவரை ஆராதிக்க உங்களை வரவேற்கிறோம் - அவருடைய வருகை மட்டும் எங்களுடன் ஆராதிக்க. உங்களுடைய பெயர்களை நாங்கள் புத்தகத்தில் எழுதமுடியாது; உங்களுக்குப் புத்தகங்கள் எதுவும் கிடையாது. எங்களுடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் காணப்பட வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம். மறுபிறப்பின் மூலம் மாத்திரமே அது முடியும். இப்பொழுதே அதை செய்வீர்களா? உங்களுக்குப் புது ஜீவனையளித்து, உங்களை உள்ளே கொணர்ந்து ஏற்கனவே இராவிடில் இப்பொழுதே உங்கள் பெயர்களை புத்தகத்தில் எழுதும்படி கிறிஸ்துவிடம் கோருங்கள். அப்பொழுது நீங்கள் எங்களுடன் - ஐக்கியங் கொள்ளலாம். உங்களிடம் ஐக்கியங்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். நேசிக்கிறேன்........ 120அன்புள்ள தேவனே, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை விமரிசனம் செய்து, அவர்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றனரா என்று அறிந்து கொள்ள உதவி செய்யும். நீர் எங்களை நேசித்தீர். எங்களுக்காக அடிபட்டீர். நீர் தேவனால் அடிப்பட்டு, பாதிக்கப்பட்டவர் என்று எண்ணினோம். ஆண்டவரே, எங்கள் ஒவ்வொருவரையும் நீர் அழைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். என் பிள்ளைகளுடனும், நான் நேசிப்பவர்களுடனும், “என் நண்பர்களுடனும் நீர் பேசும். ஆண்டவரே”, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இப்பொழுதே அதை அருள்வீராக! ஆண்டவரே, யாரும் நீண்ட நேரம் தாமதிக்கவிடாதேயும். அது மிகவும் அருகாமையிலுள்ளது போல் காணப்படுகிறது. அறுப்பு முதிர்ந்துவிட்டது. தேவனுடைய மகத்தான அறுவடை இயந்திரம் என்றாவது ஒரு நாளில் நாடு முழுவதும் இயங்கும். அப்பொழுது வைக்கோல் எல்லா பாகத்திற்கும் பறந்து செல்லும். ஆனால் கோதுமை மணியோ களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு மேலே எடுக்கப்படும். ஏனெனில் அதில் ஜீவன் உள்ளது. உமது முன்னிலையில் நாங்கள் ஏறெடுக்கும் எங்கள் விண்ணப்பம் ஒவ்வொன்றிற்கும் உத்தரவு அருள்வீராக! ஆண்டவரே, இவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இங்குள்ள ஒருவராவது கைவிடப்பட நீர் அனுமதிக்க வேண்டாமென்று வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் கடினமான... அவர்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் கஈரோட்டி இங்கு வந்துள்ளனர். ஆண்டவரே, எங்கள் தேவைகள் அனைத்தையும் - எங்களுக்கு நல்லவைகளாக உள்ள அனைத்தையும் அருள்வீராக; எங்களுடைய பார்வையில் நல்லவைகளாகத் தோன்றுபவை அல்ல. உம்முடைய பார்வைக்கு நல்லவைகளாகத் தோன்றும் அனைத்தும். ஆண்டவரே, நாங்கள் கற்புள்ள கன்னிகைகளாக, தேவனால் சிட்சிக்கப்பட்டு, கடிந்து கொள்ளப்பட்டவர்களாக, எங்கள் பாவங்கள் போக்கப்பட்டவர்களாக உமது சந்நிதானத்தில் நிற்க விரும்புகிறோம். ஆண்டவரே, இவர்களுக்காக என் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். 121எப்படி ஜெபம் செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் வல்லமையுள்ள தேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். மரித்து போகக் கூடிய மனிதன் எவனாவது. ஜீவனுள்ள தேவனுடைய முன்னிலையில் சரியான ஜெபத்தை ஏறெடுக்க முடியுமா? ஆண்டவரே, நான் தவறுதலாக உச்சரித்த வார்த்தைகளை நான் தவறான இடங்களில் உபயோகித்த பெயர்ச் சொற்களும் (nouns), பிரதிப் பெயர்களும் (Pronouns) ஒரு நாள் ஒரு சிறு பையனுடைய ஆ ஆ என்பவைகளை நீர் பொறுக்கியெடுத்து, அவனுக்கு வாக்கியத்தை அமைத்துக் கொடுத்தவாறு. என்னுடைய பெயர்ச் சொற்களையும் பிரதிப் பெயர்களையும் நீர் உதறித் தள்ளி விட்டு, ஆண்டவரே, நான் விசுவாசிப்பதை மாத்திரம் நோக்கிப்பாரும். உம்மை நான் விசுவாசிக்கிறேன். இந்த வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன். இங்குள்ள ஒவ்வொருவருக்காகவும் நான் விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, விசுவாசத்தினால் இவர்களை உமது பலிபீடத்தண்டையில் கொண்டு வருகிறேன். அங்கு எங்களுக்கும் மகத்தான யேகோவாவுக்கும் இடையே அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உள்ளது. அந்த இரத்தம் எங்களுக்காக பேசும். அவரை நீர் கல்வாரியில் அடித்த போது, நீர் அவரிடம் “பேசு” என்று கூறிவிட்டு, அவருக்குச் செவி கொடுங்கள் என்றீர். பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்த இரத்தத்தைக் காட்டிலும் இயேசுவின் இரத்தம் மேலானவைகளைப் பேசுகின்றது என்று வேதம் கூறுகின்றது. ஏனெனில் கிறிஸ்துவின் இரத்தம் ஆபேலின் இரத்தத்தை விட மேலானவைகளைப் பேசும் ஆண்டவரே, நாங்கள் இரத்தத்தின் மூலமாக உம்மைக் கூப்பிடும்போது, எங்களுக்காக பேசி மீட்பை அருள்வீராக. 122ஜீவனின் மகத்தான பிதாவே, எங்களையும் சேர்த்துக் கொள்ளும். நாங்கள் பாவம் செய்திருந்தால், அதை எங்களை விட்டு எடுத்துப் போடும். ஆண்டவரே எங்களுக்கு அவ்விதம் இருக்க விருப்பமில்லை. அது எங்களுடைய நோக்கமல்ல. நாங்கள் பயங்கரமான இருளின் வழியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணருகிறோம். நாங்கள் தொடக்கத்தில் கூறின விதமாக, நாங்கள் கரடுமுரடான பாதையின் வழியாக மலையின் மேல் ஏறிச் சென்று கொண்டிருக்கிறோம். பாதையானது ஒளி மங்கியுள்ளது. ஆனால் நாங்கள் வெளிச்சத்தை அதில் காண்பிக்கிறோம். எங்களுடைய பயணத்தில் நாங்கள் அடிமேல் அடி எடுத்து வைக்கும்போது, ஒவ்வொரு அடியையும் காணக் கிருபை செய்து மோட்சப் பிரயாணம் என்னும் கதையில் கூறப்பட்டுள்ளது போல், நாங்கள் முடிவில் மலையின் உச்சியை அடைய அருள்புரியும். ஓ, மேய்ப்பனே, எங்களை வழிநடத்தும். மகத்தான யேகோவாவே, உம்முடைய ஆவியினால் எங்களை வழிநடத்தும். நாங்கள் சிறந்த வேலைப்பாடான் சிற்பமாயிராமல் அதனின்று அதிக தூரம் அகன்றுள்ளோம். ஆயினும் எந்த உண்மையான சிறந்த சிற்பத்திலிருந்து எடுக்கப்பட்டு நாங்கள் செதுக்கப்பட்டோமோ, அந்த சிறந்த சிற்பத்தையே நாங்கள் நோக்கிப் பார்க்கிறோம். அவரின் நாங்கள் விசுவாசம் கொண்டிருக்கிறோம். ஆண்டவரே, எங்களை அவரிடம் கொண்டு செல்லும். இதை அருள் புரிவீராக. ஆண்டவரே. 123ஆண்டவரே, இங்குள்ள எல்லா வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தும். நீர் அடிபட்டு நொறுக்கப்பட்டவர் என்று எண்ணினோம். ஆனால் அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காய்பட்டார். தேவனுடைய சிறந்த வேலைப்பாடான சிற்பம் அடிக்கப்பட்டது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமானோம். நீர் இங்கிருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். ஆண்டவரே, உம்முடைய திவ்விய பிரசன்னம் இங்குள்ள போதே வியாதியஸ்தரை சுகப்படுத்தும். எங்கள் ஆத்துமாக்களை சுத்திகரியும். எங்கள் இருதயங்களை எல்லா பொல்லாத சிந்தனைகளிலிருந்தும், செயல்களிலிருந்தும் தவறான எல்லாவற்றினின்றும் சுத்திகரியும். எங்களை சுத்திகரியும். எங்கள் வியாதியை நீர் சுகப்படுத்தி, நாங்கள் பரிசுத்தமாக்கப்பட்ட உம்முடைய பிள்ளைகள் என்னும் உணர்வுடன் இவ்விடம் விட்டுச் செல்ல அருள்புரியும். இரத்தம் எங்கள் மேல் இருக்கும் போது, நாங்கள் இரத்தத்தின் மூலமாக - வார்த்தையின் மூலமாக பேசுகின்றோம். ஆண்டவரே, எங்களுக்கு அருள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 124பிதாவாகிய தேவனே, இந்த உறுமால்களை உமது பிரசன்னத்தினால் அபிஷேகியும். அவைகள் எங்கு சென்றாலும், உமது பிரசன்னம் அவைகளின் மேல் தங்கியிருப்பதாக, அது எந்த வியாதியுள்ள சரீரத்தின் மேல் வைக்கப்பட்டாலும், அவர்கள் சுகம் பெறுவார்களாக. உடைந்து போன குடும்பங்கள் இருக்குமானால் அவர்களை ஒன்று சேர்த்து வையும் மகத்தான சிற்பியாகிய ஆண்டவரே, இவைகளை அருள்வீராக. எங்களைத் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக வனையும். மணவாட்டி தன்னுடைய கடைசி மெருகேற்றலைப் பெற்றுக் கொண்டிருக்கிறாள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவள் அடிக்கப்பட்டு, ஸ்தாபனங்களினின்று முழுவதுமாக பிரித்தெடுக்கப்பட வேண்டும். அப்பொழுது அந்த மகத்தான அறுவடை நிகழும். அதுவரைக்கும் ஆண்டவரே, அவர்களை சுகமாகவும் சந்தோஷமாகவும் வைத்து, உம்மை சேவிக்க அருள் புரியும், இயேசுவின் நாமத்தில், ஆமென். நேசிக்கிறேன் (நீங்கள் உண்மையாக அவரை நேசிக்கின்றீர்களா?) முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 125நான் ஏன் உங்களைக் கடிந்து கொள்கிறேன் என்று இப்பொழுது புரிகின்றதா? நான் உங்களை நேசிக்காமல் இருப்பதினால் அல்ல, உங்களை நான் நேசிக்கிறேன். எஜமானுக்குச் சிறந்த வேலைப்பாடான ஒரு சிற்பம் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் சிலவற்றை இங்கேயும் அங்கேயும் எடுத்துவிட வேண்டிய அவசியம் இருக்கக் கூடும். ஆனால் நான் மாத்திரம் அதை தேவனுடைய வார்த்தையில் சரியாக வைத்திருந்தால், என்றாவது ஒரு நாளில் நான் சிறந்த வேலைப்பாடான சிற்பம் ஒன்றை செய்து முடிப்பேன். இயேசு, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார் (யோவான் 13:35). நாம் அவ்விதம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும். நமது இருதயங்களை அன்பினால் பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் அது போன்றே இருக்கும் நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்குவோம். நாம் பிரிந்து செல்லும்போது அது நமக்கு வேதனையளிக்கின்றது ஆனால் நாமோ இருதயத்தில் பிணைக்கப்பட்டு மீண்டும் சந்திப்போமென நம்புகிறோம் இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரமும் துன்பமும் கொண்ட பிள்ளையே அது உனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும் எங்கு சென்றிடினும் அதைக் கொண்டு செல். விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம் . ஓ என்ன இனிமை! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் உன் பயணத்தில்: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது (அப்பொழுது நீ என்ன செய்வாய்?) அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி ஓ விலையுயர்ந்த நாமம், ஓ என்ன இனிமை பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்சியுமாம் நாம் சந்திக்கும் வரை (நாம் தலைவணங்குவோம்) நாம் சந்திக்கும் வரை (ஓ, நான் பாட விரும்புகிறேன்) இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, சந்திக்கும் வரை மீண்டும் சந்திக்கும் வரை, கர்த்தர் உம்முடன் இருப்பாராக.